லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை (World Record) நிகழ்வு மற்றும் சோசியல் புரோட்டக்ஷன் கவுரவ விருதுகள் (Doctorate) வழங்கும் விழா


27.12.2022: சென்னை கோயம்பேடு பகுதியில் தனியார் அரங்கத்தில் லிங்கன் உலக சாதனை நிகழ்வு மற்றும் கவுரவ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

 Video👇👇

இந்த விழாவில் வெங்கட ஸ்ரீனிவாஸ் மற்றும் உமாமகேஸ்வரி அவர்களின் 6 வயது சிறுவன் கௌதம் வசிஷ்ட் என்பவர் சூரிய குடும்பம் தொடர்பான 100 கேள்விகளுக்கு  100 நாட்டின் கொடியை 10 நிமிடங்களில் சொல்லி புதிய உலக சாதனை படைத்தார். இந்த நிகழ்வில் சோசியல் புரோட்டக்ஷன் மற்றும்  லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல் தலைமை வகித்தார். D3 என்டேர்டைன்னர் தலைவர் தினேஷ் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் வழக்கறிஞர் முரளி மோகன், அபி சரவணன் ஆகியோர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டனர்.

6 வயது சிறுவன் கௌதம் வசிஷ்ட்  உலக சாதனை

மேலும் சோசியல் ப்ரோட்டக்ஷன் அமைப்பை சேர்ந்த ஸ்ரீ ப்ரியா, ராசி, திரைப்பட நடிகர் ருத்ரு, ராஜ் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளார்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கடலூர் அரசு பள்ளியை சேர்ந்த மாணவ மாணவியர்கள் தொடர் வாசித்தல், மற்றும் பல்வேறு யோகா வகைகளை தொடர்ந்து செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இதனை ஜீவா ஜாக்குலின், அமுதா மற்றும் செல்வி, ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 

கடலூர் அரசு பள்ளியை சேர்ந்த மாணவ மாணவியர்கள் தொடர் வாசித்தல், மற்றும் பல்வேறு யோகா வகைகளை தொடர்ந்து செய்து உலக சாதனை

இந்த நிகழ்வில் டோயோசிஸ் ஆப் ஆசியா சார்பில் 7 சாதனையாளர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தொலைக்காட்சி புகழ் சிம்பு மதன் மிமிக்ரி நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ஹர்ஷாத் கௌதம், கவிஷா ஸ்ரீ மற்றும் சக்தி அவர்களுக்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் விருதும், உன்னை காணலாம் மற்றும் ஆர ஃபொண்டசன்க்கு சிறந்த சமூக அமைப்புகான விருதும் வழங்கப்பட்டது. கவிஷா ஸ்ரீ அவர்களுக்கு நாட்டிய கலை அரசி பட்டம் வழங்க பட்டது.

டோயோசிஸ் ஆப் ஆசியா சார்பில் 7 சாதனையாளர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் 

இந்த நிகழ்வினை VJ ஐஸ்வர்யா தொகுத்து வழங்கினார். ஹரிஹரன் இலக்கியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

****

Recent Posts