I am not a Quack Doctor; Alisha Abdulla clarifies and attacks DMK for tarnishing Minority Community


சென்னை, நவம்பர் 24, 2022: அலிஷா அப்துல்லா இன்று அளித்த பேட்டி:

திருமதி.அலிஷா அப்துல்லா ஆகிய நான் ஜனாதிபதி விருது பெற்ற ஓர் சர்வதேச கார் மற்றும் பைக் ரேசர்.  சொந்தமாக 'கரிஷ்மா கிளினிக்' என்ற பெயரில் கிளினிக்கை தி.நகரில்  சில வருடங்களாக நடத்தி வருகிறேன். கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் தொழில் போட்டியாலும் மற்ற பல அரசியல் காழ்ப்புணர்ச்சிகளாலும்  எனது பெயருக்கும், எனது நிறுவனத்தின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க சிலர் முயல்கின்றனர். எனவே உண்மைத்தன்மையை மக்களுக்கு கொண்டு செல்ல  கடமைப்பட்டுள்ளேன்.

Press meet Youtu be video 👇👇


நான் இந்திய மருத்துவக் கழகம் (Ministry of Health) அனுமதி உடன் நடத்தப்படும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு BEMS மருத்துவ படிப்பை படித்துக் கொண்டிருக்கிறேன். மேலும் கிளினிக்கல் காஸ்மெடாலஜி (Clinical Cosmetology) பட்டம் பெற்றுள்ளேன்.  அதுபோக, சிறப்பு லேசர் சிகிச்சை மேற்கொள்ள பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளேன். எனது கிளினிக்கை நான் நிர்வாக இயக்குனராக (Managing Director) நிறுவகித்து,  இரண்டு இந்திய மருத்துவ கழகத்தால் (MCI Registered) அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களைக் கொண்டு  நடத்தி வருகிறேன். 

எனது 'கரிஷ்மா கிளினிக்', முறையாக மாநகராட்சி (Corporation), சுகாதாரத்துறை (Health) , பயோ வேஸ்ட் (Biowaste), தீயணைப்புத்துறை (Fire Department), ஜிஎஸ்டி(GST), எப்.எஸ்.ஐ (FSI), கிளினிக்கல் எஸ்டாபிளிஷ்மன்ட் (Govt. Side Pending), கட்டிட உறுதித்தன்மை சான்றிதழ் உள்ளிட்ட அத்தனை தேவையான சான்றிதழ்களுடன் முறையாக அரசாங்கம் வகுத்துள்ள சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடத்தி வருகிறேன். உண்மை இவ்வாறு இருக்க எனக்கு எதிரான வன்மை பிரச்சாரத்தை மேற்கொள்வோர் மீது எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றியுடன்,
அலிஷா அப்துல்லா
நிர்வாக இயக்குனர் | கரிஷ்மா கிளினிக்
மாநிலச் செயலாளர் | இளைஞர் மற்றும் விளையாட்டுப் பிரிவு
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி.

****

Recent Posts