திருச்சபை பாதரியார்களை கூண்டோடு ஏமாற்றிய பெண்மணி! கைது செய்ய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள்


சென்னை, மே 25, 2022: வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி சுமார் 1 கோடி மோசடி செய்த பெண் மரியசெல்வத்தால் பாதிக்கப்பட்டு மன உளச்சலுக்கு உட்பட்ட அனேகர் தங்கள் ஆதாரங்களுடன், வழக்கறிஞருடன் இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை பத்திகையாளர் மன்றத்தில் All India Church Federation தேசியத்தலைவர் பேராயர் Dr.காட்ப்ரே நோபுள் தலைமையில் பத்திகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

Youtube Video👇👇

அப்போது அவர் கூறியதாவது: 
மேற்கண்ட கூட்டமையின் சார்பில் கிறிஸ்தவ மதத்தை இழிவுப்படுத்தி தன்னை ஊழியக்காரியென்று சொல்லி வரும், சென்னை அண்ணாநகரில் வசிக்கும் மரிய செல்வம் என்பவள் கிறிஸ்தவ பாதிரியரின் பிள்ளைகள் மற்றும் திருச்சபை மக்களின் பிள்ளைகளை வெளிநாட்டில் வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தைகள் கூறி 100க்கும் அதிகமானவரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்து வரும் மரிய செல்வத்தின் மீது, பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்தால் தன்னை பாலியல் தொந்தரவு செய்கிறார்கள் என்று மறுப்பு புகார் கொடுத்தும், கொலை மிரட்டல் செய்து வரும்1மரிய செல்வத்தின் மீது கடந்த 16.05.2022 அன்று FIR No. 118/2022 Sec. 468, 471,420,294(b), 506 (1) வழக்கு பெரியமேடு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு தலைமறைவான மரிய செல்வத்தை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.


மரிய செல்வம்

இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு   மரியசெல்வத்தை உடனடியாக கைது செய்ய கோரிக்கை விடுத்தனர்.

****

Recent Posts