சாலையோர சிறுகடை வியாபாரிகள் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சட்ட விரோத அகற்றுதலை கண்டித்து போராட்டம்


சென்னை, மே 25, 2022: நாடு முழுவதும் சாலையோர வியாபாரிகளுக்கான உச்சநீதிமன்ற தீர்ப்பு, மத்திய சட்டமான சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரம் ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 2014 க்கு விரோதமாக சாலையோர வியாபாரிகள் அகற்றப்படுவது குறித்து தினசரி பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் செய்தி வெளிவந்த வண்ணம் உள்ளது.

Youtube Video👇

இந்நிலையில் நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பத்திரிக்கையாளர் சந்திப்புகள் நடத்தி இத்தகைய சட்டவிரோத அகற்றுதல்கள் குறித்து மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு வந்து உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்த சாலையோர சிறுகடை வியாபாரிகள் தேசிய கூட்டமைப்பின்(NASVI) சார்பில் முடிவு செய்யப்பட்டது.


அதன்படி இன்று 25/5/22 புதனன்று நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் சாலையோர சிறுகடை வியாபாரிகள் தேசிய கூட்டமைப்பின் (NASVI) சார்பில் இன்று போராட்டங்கள் நடந்து வருகின்றது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தமிழ்நாடு முழுவதும் சாலையோர வியாபாரிகள் மீது நடைபெறும் சட்ட விரோத அகற்றுதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் இதனால் பாதிக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகள் அவலநிலை குறித்தும் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் மூலம் பத்திரிக்கையாளர்களுக்கு விளக்க இன்று 25/ 5/22 புதன்கிழமை காலை 11 மணிக்கு சென்னை, சேப்பாக்கம், பத்திரிகையாளர் மன்றத்தில் சாலையோர சிறுகடை வியாபாரிகள் தேசியக்கூட்டமைப்பின்(NASVI) அகில இந்திய செயலாளர் திரு வீ. மகேஷ்வரன் அவர்கள் தலைமையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ந்தது.

****

Recent Posts