மே 5வணிகர் எழுச்சி மாநாடு, "லூ லூ” மார்கெட்டை கைவிடக் கோரும் மாநாடு: தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் அறிவிப்பு


சென்னை, ஏப்ரல் 05, 2022: தமிழ்நாடு வணிகர்களின் மகாஜன சங்கத்தின் சார்பில் "மே-5" வணிகர் தினம் மாநாடு, சென்னை V.G.P. கோல்டன் பீச் வளாகத்தில் நடைபெறவுள்ளது. அதன் செயல்திட்டக் கூட்டம் நிறுவனத் தலைவர் R. சந்திரன் ஜெயபால் அவர்கள் தலைமையில் இன்று G.P. ரோடில் உள்ள சர்மானி ஹோட்டலில் காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.

Youtube Video👇👇
அப்போது தலைவர் R. சந்திரன் ஜெயபால்  கடின உழைப்பாளிகளான வணிகப் பெருமக்களுக்கு மாநாட்டில் அனவரும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற அழைப்பு விடுத்தார். மேலும் அவர் கூறியதாவது: 

வணிகர்களின் அத்தியாயத்திலேயே முதல் முதலில் நுழைவு வரியை எதிர்த்து சிறை சென்ற வணிகர்களின் பெருமையைப் பாராட்ட நடத்துப்பட்டதுதான் “வணிகர் தினம்” ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டில் வணிகர்களின் ஒற்றுமையை நிலைநாட்ட மே-5ல் வணிகர் தினம் வணிகர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று 39வது வணிகர் தினத்தை கொண்டாடவுள்ளோம்.


அரசின் நுழைவு வரியை எதிர்த்து வணிகர்கள் நடத்திய போராட்டத்திற்கு பின் வணிகர்கள் சிறை சென்ற போராட்டம் கோயம்பேடு மார்க்கெட் நுழைவு கட்டணத்தை எதிர்த்து போராடியது போராடிய வணிகர்கள் மீது பொய் வழக்கு புைையப்பட்டது. அப்போது கைதானவர்கள் திருவல்லிகேணி, P. பரமசிவம், கொளத்தூர் த, ரவி, கொளத்தூர் பூபதி ஆகிய வணிகர்கள். 

அதன்பின் காலிபாட்டல் வியாபாரிகள் உரிமை போராட்டத்தில் ராமாபுரத்தில் கைதாகி தலைவர் த. வெள்ளையன், R. சந்திரன் ஜெயபால், சைதை ஜெயராஜ், தங்கம் R. செல்வராஜ் உட்பட 11 பேர்கள் வேலூர் சிறையில் 15நாட்கள் தண்டனை அனுபவித்து விடுதலையானோம்.

மேற்கண்ட சிறைதண்டனை பெற்ற 14 பேர்களுக்கும் 5.5.2022-ல் தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் நடத்தும் மே-5 வணிகர் தின 39வது மாநாட்டின் முதன்மை சிறப்பு விருந்தினராக வரும் முன்னாள் தமிழக முதல்வரும், இந்நாள் எதிர்கட்சி தலைவருமான திரு. K. எடப்பாடி பழனிசாமி அவர்களால் வணிகர் பட்டத்துடன் பாராட்டு பத்திரம் வழங்கவுள்ளோம். மற்றும் த.மா.க. தலைவர் G.K. வாசன் MP அவர்கள், பா.ம.க. தலைவர் G.K. மணி MLA அவர்கள் கலந்து கொள்வார்கள்.

தமிழக முதல்வராய் இருந்த கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் வணிகர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கேடயமாக இருந்து வணிகர்களுக்கெதிராய் இருந்த அச்சுறுத்தலை போக்கினார்கள், தமிழக முதல்வராய் இருந்த புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களும் வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க இருந்த வால்மார்ட் நிறுவனத்தை மூடச்செய்தார் அதுபோல புரட்சித் தலைவர் M.G.இராமச்சந்திரன் அவர்கள் வணிகர்களுக்குகெதிரான ரௌடிசம், மாமுல், கட்டாய வசூல் போன்றவற்றை போக்கினார்.

அதுபோல இப்போது வணிகர்களுக்கு எதிராய் வரப்போகும் "லூ லூ மார்க்கெட்" வணிகர்களை பிறந்த நாட்டிலேயே அகதிகளாக்கிவிடும். சொற்ப மூதலீட்டால் வணிகம் செய்துவரும் சிறுவணிகர்கள் அனைவரும் காணாமல்போய் விடுவார்கள் பெரிய வணிகர்களும் தாக்குபிடிக்க முடியாது. லட்சகணக்கான வணிகர்கள் தங்கள் நிறுவனத்தை மூடும் நிலை ஏயற்படும். இதில் இருந்து வணிகர்களை காக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் "லூ லூ மார்க்கெட்" திறக்கப்படுவதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் கோருகின்றது.

தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் 2022 மே-5ம் தேதி V.G.P. தங்கக் கடற்கரை வளாகத்தில் நடத்தவுள்ள மாநாட்டிற்கு தாங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு வணிகர்களை நிற்கதியாக்கும் "லூ லூ மார்க்கெட்” தமிழ்நாட்டில் நுழைவதை நிறுத்தக்கோரி முழக்கமிட வாருங்கள் என அன்புடன் மாநாட்டிற்கு அனவரும் கலந்து கொண்டு.சிறப்பாக நடைபெற தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் நிர்வாகிகள் சார்பில் அழைப்பு விடுத்தார்

****

Recent Posts