"மக்களாட்சியை பாதுகாப்போம்" பேரணியை மறுத்த திமுக அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்


சென்னை, மார்ச் 11, 2022: 'மக்களாட்சியை பாதுகாப்போம்' என்ற நாடு தழுவிய பிரச்சாரத்தை முன்னிட்டு பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில் அனுமதி மறுத்த தமிழக காவல்துறை மற்றும் அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து பாப்புல ஃப்ரண்ட் மாநில தலைவர் M. முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அவருடன் அகமது மொஹிதீன், மண்டல செயலாளர்; நாஹூர் மீரான், மாநில செயலாளர், அப்துல் ரசாக், மாநில மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டனர்.

Youtube Video👇👇 

அப்போது அவர் கூறியதாவது: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை தேசம் முழுவதும் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சாரத்தில், தெருமுனை கூட்டங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் என்று நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சேலம், தாம்பரம், புதுக்கோட்டை தென்காசி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதாக தீர்மானித்து முறையாக காவல்துறையிடம் அனுமதி கோரி இருந்தோம். மார்ச் 6-ம் தேதி சேலம் மற்றும் தாம்பாத்திலும் அதைத்தொடர்ந்து 10ம் தேதி புதுக்கோட்டையிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை எதேச்சதிகார போக்கோடு தடுத்து நிறுத்திய காவல்துறை பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்றும் பாராமல் ஆயிரக்கணக்கானோரை கைது செய்தது.

(L to R) அகமது மொஹிதீன், மண்டல செயலாளர்; M. முஹம்மது சேக் அன்சாரி, மாநில தலைவர்; நாஹூர் மீரான், மாநில செயலாளர், அப்துல் ரசாக், மாநில மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த 15 ஆண்டுகளாக இதுபோன்ற அணிவகுப்பு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறது காவல்துறையின் அனுமதியோடும் நீதிமன்றங்களின் அனுமதியோடும் இதுவரை எந்த அசம்பாவிதங்களுக்கும் இடமளிக்காமல் அமைதியான முறையில் நடத்தி இருக்கின்றோம். ஆனால் தற்போதைய திமுக அரசு எவ்வித காரணமுமின்றி தனது காவல் துறையின் மூலமாக இந்த நிகழ்ச்சிக்கு தடையை ஏற்படுத்தி இருக்கிறது.

நாட்டில் நிலவிவரும் தற்போதைய சூழலில் மக்களாட்சியை பாதுகாக்க வேண்டியதும், அதற்காக ஒன்றிணைய வேண்டியதும் ஒவ்வொரு இந்திய குடிமகளின் கடமையாக இருக்கின்றது இதன் அவசியத்தை உணர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற மாபெரும் பிரச்சாரத்தை தேசம் முழுவதும் நடத்திக் கொண்டிருக்கிறது. மக்களாட்சியில் தத்துவங்களை குழிதோண்டிப் புதைத்து சர்வாதிகாரத்தை நோக்கி தேசத்தை நகர்த்திக் கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக அரசிடமிருந்து மக்களாட்சியை பாதுகாத்திட வேண்டும் என்ற.நல்ல நோக்கத்தில் முன்னெடுக்கப்படும். இத்தகைய பிரச்சாரங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டிய திமுக அரசு, ஒன்றிய அரசின் மனோநிலையை பிரதிபலிக்கும் வகையில் அனுமதி மறுத்திருக்கிறது.

இந்திய குடிமக்களுக்கும், ஜனநாயக அமைப்புகளுக்கும் அரசியலமைப்பு சட்டம் வழங்கி இருக்கக்கூடிய பிரதான உரிமைகளில் ஒன்று தனது சிந்தனையை, சித்தாந்தத்தை, செயல்திட்டங்களை சுதந்திரமாக தான் விரும்பும் வழிகளில் பிரச்சாரம் செய்து கொள்ளலாம் என்பது அத்தகைய ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் பாப்புலர் ஃப்ரண்டின் அணிவகுப்பு பேரணியை தமிழக அரசு தடை செய்துள்ளது சமூக நீதி அரசு, திராவிட மாடல் ஆட்சி என்றெல்லாம் சொல்லக்கூடிய தமிழக அரசு சமூக நீதிக்கு எதிராக, ஜனநாயக உரிமைகளை மறுக்கும் வகையில் காவல் துறையின் மூலம் அடக்கு முறைகளை ஏவுவது கண்டனத்திற்குரியது.

ஏற்கனவே சற்றுமை அணிவகுப்பு நடை பெற்ற மூன்று டங்களிலும் சட்டத்திற்குற்பட்டு ஜனநாயக வழிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் முன்னோக்கி சென்றிருக்கிறது எதிர்வரும் காலங்களிலும் ஜனநாயக உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் பாப்புலர் ஃப்ரண்ட் முன்னோக்கிச் செல்லும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நேரடி கவனம் செலுத்தி காவல் துறையின் இத்தகைய அடக்குமுறைகளை கண்டிக்க வேண்டும் மேலும் மார்ச் 13ம் தேதி தென்காசி மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெற இருக்கும் ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்திடுமாறும் தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கின்றேன்.

****

Recent Posts