108 திவ்யதேச பெருமாளின் தரிசனத்தை ஒரே இடத்தில் கண்டு தரிசிக்க ஏற்பாடு; ஓர் அரிய சந்தர்ப்பம்!!



சென்னை, மார்ச் 19, 2022: சென்னையில் இயங்கி வரும் AGC Media என்கிற நிறுவனம் 108 திவ்யதேச பெருமாளின் தரிசனத்தை ஒரே இடத்தில் கண்டு தரிசிக்க ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளதாக அதன் மேனேஜர் C.ரமேஷ் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார். அவருடன் நிர்வாக இயக்குநர் G.மோகன் மற்றும் வெங்கடரமணன்,  ராஜ் கல்யாண் உடன் இருந்தனர்.

Youtube Video👇👇

அப்போது அவர் கூறியதாவது: பெருமாளின் மீது பக்தி கொண்ட ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் 108 திவ்ய தேச பெருமாள் களை சேவித்து மகிழ வேண்டும் என்பது அவர்களின் கனவாகவே இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்பும் வசதியும் எத்தனை பேருக்கு கிடைக்கும். அதனால் அந்த கனவினை நனவாக்கும் விதமாக சென்னை பூந்தமல்லி ஹை வே வானகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி கல்யாண மஹாலில் மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை திவ்யதேசங்களில் அமைந்திருக்கும் பெருமாள் அங்கங்கு எப்படி எழுந்தருளி இருக்கிறார்களோ அது போன்ற உருவ ஒற்றுமையுடன் இங்கே பக்தர்கள் கண்டுகளித்து ஆசிபெற அமைக்கப்பட்டுள்ளது. 


வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி கல்யாண மஹாலில் 25,000 சதுர அடி பரப்பளவில் இந்த திவ்ய தேச பெருமாள்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 108 பெருமாளை தரிசிக்க கட்டணமாக ஒரு நபருக்கு ரூபாய் 100/- மற்றும் சிறப்பு கட்டணமாக ரூபாய் 300/- வசூலிக்கப்படும்.

தினந்தோறும் ஒவ்வொரு பெருமாளுக்கும் அந்தந்த திருத்தலங்களில் எவ்வாறு பூஜை புனஸ்காரங்கள் நடைபெறுமோ அதுபோன்று இங்கும் செய்யப்பட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டு பெருமாள் பிரசாதம் இங்கு வரும் பக்த கோடி அன்பர்களுக்கு வழங்கப்படும் இந்த திவ்ய தேச பெருமாளை தரிசித்து செல்லும் பக்தர்கள் வீட்டுக்குச் செல்லும் முன் இங்கு அமைக்கப்பட்டிருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளுக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் எடுத்துச் செல்லலாம் அதேபோல திருப்பதி பெருமாளை சேவிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்த பிரசாதமாக தயிர் சாதம் புளியோதரை பொங்கல் போன்ற பிரசாதங்களும் வழங்கப்படும் பக்தர்கள் வந்து செல்லலாம். பக்தர்கள் வசதிக்காக உணவகம் அமைக்கப்பட்டுள்ளது இங்கு நல்ல முறையில் டிபன் காபி மற்றும் சாப்பாடு போன்றவை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கார் டூவீலர் போன்றவைகளில் வரும் பக்தர்களின் வசதிக்காக இங்கே 300 கார்கள் வரை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது 

மேலும் டூவீலர் நிறுத்துவதற்கும் தேவையான வசதிகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. ஆண்கள் பெண்கள் வசதிக்காக கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது இந்த அரிய வாய்ப்பினை பக்தர்கள் அனைவரும் பயன்படுத்தி பெருமானின் அருளாசி பெறுவீர். இந்த அரிய நிகழ்ச்சியை பக்தர்களுக்கு AGC மீடியா சென்னை கடந்த சில வருடங்களாக வெற்றிகரமாக செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் விபரங்களுக்கு
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:  94440 85135 / 94440 85125

முகவரி:
Shivaaru Venkataachalapathy Palace,
Poonamallee High Road, Vanagaram,                    Chennai- 600 095

Time: 7am to 9pm
Dates: 20 March 2022 to 10 April 2022

****

Recent Posts

𝘜𝘮𝘢 𝘌𝘺𝘦 𝘊𝘭𝘪𝘯𝘪𝘤, 𝘊𝘩𝘦𝘯𝘯𝘢𝘪 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘗𝘙𝘌𝘚𝘉𝘠𝘖𝘕𝘋 𝘓𝘢𝘴𝘦𝘳 𝘛𝘳𝘦𝘢𝘵𝘮𝘦𝘯𝘵 𝘧𝘰𝘳 𝘤𝘰𝘳𝘳𝘦𝘤𝘵𝘪𝘰𝘯 𝘰𝘧 𝘙𝘦𝘢𝘥𝘪𝘯𝘨 𝘎𝘭𝘢𝘴𝘴𝘦𝘴 𝘱𝘰𝘸𝘦𝘳; 𝘍𝘪𝘳𝘴𝘵 𝘵𝘪𝘮𝘦 𝘪𝘯 𝘛𝘢𝘮𝘪𝘭𝘯𝘢𝘥𝘶

14𝘵𝘩 𝘊𝘰𝘯𝘷𝘰𝘤𝘢𝘵𝘪𝘰𝘯 𝘩𝘦𝘭𝘥 𝘢𝘵 𝘉.𝘚.𝘈𝘣𝘥𝘶𝘳 𝘙𝘢𝘩𝘮𝘢𝘯 𝘊𝘳𝘦𝘴𝘤𝘦𝘯𝘵 𝘐𝘯𝘴𝘵𝘪𝘵𝘶𝘵𝘦 𝘰𝘧 𝘚𝘤𝘪𝘦𝘯𝘤𝘦 𝘢𝘯𝘥 𝘛𝘦𝘤𝘩𝘯𝘰𝘭𝘰𝘨𝘺; 𝘛𝘰 𝘣𝘦𝘤𝘰𝘮𝘦 𝘢𝘯 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳 𝘐𝘯𝘴𝘵𝘪𝘵𝘶𝘵𝘦