M-Sand உற்பத்தியில் லஞ்ச முறைகேடு: Tamilnadu M-Sand Lorry Owners Welfare Association புகார்




சென்னை, ஆகஸ்ட் 26, 2021: Tamilnadu M-Sand Lorry Owners Welfare Association தலைவர் S.யுவராஜ் தலைமையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அவருடன் செயலாளர் SKN.ஏகாம்பரம், பொருளாளர் S.மனோஜ், துணை தலைவர்கள் U.அல்ஹா பாஷா, R.குருமூர்த்தி, துணைச்செயலாளர்கள் S.எல்லப்பன், V.நந்தகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.


அப்போது அவர் கூறியதாவது:
தற்போது ஒரு வார காலமாக கட்டுமானப்பணிகள் குறித்து அதிர்ச்சியான தகவல்கள் ஆதாரபூர்வமாக வெளிவந்தவண்ணம் உள்ளது. உதாரணமாக புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள், சென்னை- ராமாபுரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள், பெரம்பலூர் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள், மேலும் K.K.நகர், ராமாபுரம் மற்றும் அரசு ஊழியர் குடியிருப்புகள் போன்றவற்றில், விரலால் அழுத்தினாலே சுவர்கள் கொட்டுகின்ற காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தோம்.

இதற்கு முக்கிய காரணமே தரமற்ற M.சாண்ட் என நிரூபிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஆற்றுமணல் கிடைக்காத நிலையில், அரசு M.சாண்ட்டை உபயோகித்து கட்டுமானப் பணிகளைச் செய்யலாம் என பரிந்துரைத்தது. அதன்படி தமிழகத்தில் கட்டுமானப் பணிகள் அனைத்தும் M.சாண்டை பயன்படுத்தி நடந்தது. தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அரசு பரிந்துரைத்த M.சாண்ட்-க்கு இதுநாள் வரையில் 353 கிரஷர்கள் மட்டுமே முறையான அனுமதி பெற்று இயங்கி வருகிறது. ஆனால் அரசு அனுமதியின்றி 4000 கிரஷர்கள் முறைகேடாக இயங்கி வருகிறது. இவர்கள் மூலம் தான் தரமற்ற, கட்டுமானப் பணிக்கு சற்றும் உதவாத M.சாண்ட் வழங்கப்படுகிறது. இந்த அனைத்து 4000 முறைகேடான கிரஷர்கள் முந்தைய ஆட்சிக்காலத்தில், உயர் அதிகாரிகளின் துணையுடன், பெரும்பாலான அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் தான் இயங்கியது. தொடர்ந்து இன்று வரையிலும் இயங்குகிறது.

இவர்களால் அரசுக்கு எவ்வித வருமானமும் இன்றி இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. தமிழக மலைகளை உடைக்க எவ்வித அனுமதியும் பெறாமல் தனியாரே வெடிமருந்து மூலம், மலைகளை உடைத்து, 1.5% ஜல்லி, 0.75% ஜல்லி, 0.5%ஜல்லி, சிப்ஸ் என வகைப்படுத்தி எவ்வித ரசீதுமின்றி முறைகேடாக அனுப்புவதால், அரசுக்கு வரவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் தனியாருக்கு செல்கிறது. மேலும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் இயங்கும் கல்குவாரிகள் விதியை மீறியதாக 200 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பின்பு ரத்து செய்யப்பட்டது ஏன்? ஏதனால்
தன்முதைதில் மலைகளே இல்லாமல் போய்விடும். அதனால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படும்.

தமிழக முதல்வருக்கு கனிம வளம் மூலம் வரும் ஐந்தாண்டுகளில் ரூபாய் 250 கோடி கிடைக்கும் என்ற தவறான தகவல் ஊழல் அதிகாரிகளால் தரப்பட்டுள்ளது. மலைகள் உடைக்கப்பட்டு M.சாண்ட் தவிர மற்ற ஜல்லி வகைகள் முறைகேடாக செல்வதால் அரசுக்கு 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்பதை மாண்புமிகு முதல்வர் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

மேலும் அனுமதியின்றியும், அனுமதியுடனும் இயங்கும் கிரஷர்களில் வழங்கப்படும் M. சாண்ட் தரம், அளவு ஆகியவற்றை பரிசோதிக்க, அரசின் மூலம் அதிகாரிகள் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால் தரமற்ற M.சாண்டை கொண்டு நடைபெறும் அனைத்து கட்டுமானப் பணிகளும் உறுதியற்ற நிலையில் உள்ளதால், புளியந்தோப்பு கே.பி.பார்க், பெரம்பலூர், காஞ்சிபுரம் தடுப்பணை, K.K.நகர், ராமாபுரம் அரசு கட்டிடங்கள் என தரமற்ற M.சாண்ட்-ன் பாதிப்பை தற்போது மக்கள் அச்சத்துடன் சந்தித்து வருகின்றனர். குடியிருப்புகள் எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்தில் வீட்டிற்குள் உறங்காமல், சாலையில் தான் உறங்குகின்றனர்.

சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த 'முகலிவாக்கம் பேரழிவினை போன்று தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழாமலிருக்க அரசின் அனுமதியின்றி இயங்கும் 4000 கிரஷர்களையும் இழுத்து மூடி சீல் வைக்க வேண்டும். அரசின் அனுமதி பெற்ற கிரஷர்களில் விநியோகிக்கும் முன்பே M.சாண்ட்-ன் தரம் மற்றும் அளவினை பரிசோதிக்கும் வகையில், உரிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும். கிரஷர்கள் அனைத்தும் அரசின் நேரடிக் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 121 மலைகள் உள்ளன. இம்மாவட்டத்தில் ஓசூர் பகுதியில் மட்டும் 250-க்கும் மேலான கிரஷர்கள் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அரசியல்வாதிகள் மூலம் இயக்கப்படுகிறது. இக்கிரஷர்களின் மூலம் தினசரி 4000 லோடு M.சாண்ட், அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கு கடத்தப்படுகிறது. கிருஷ்ணகிரியிலிருந்து சஜாபூர் சாலை, TVS, ஒசூர் மற்றும் ஆணைக்கல் வழியா தினசரி முறைகேடாக M.சாண்ட் கர்நாடகாவிற்கு செல்கிறது. இதனை அத்திப்பள்ளி RTO செக்போஸ்ட் மற்றும் காவல்துறை செக்போஸ்ட் CCTV காமிரா மூலம் நேரடி ஆய்வின் வழியாக அரசு உறுதி செய்து கொள்ளலாம்.

இதுமட்டுமின்றி கேரளா மாநிலத்திற்கு கலியகாவல், செங்கோட்டை மற்றும் கன்னியாகுமரி வழியாக அதானி துறைமுக கட்டுமானப் பணிக்கு தினசரி 300 லோடுகள் செல்கிறது. மேலும் அண்டை தேசமான பங்களாதேஷ்-க்கு சென்னை துறைமுகம் வழியாக 20 லட்சம் டன் M.சாண்ட் கடத்தப்படுகிறது என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆற்றுமணல் தட்டுப்பாடு காரணமாகத் தான் M.சாண்ட் உபயோகத்திற்கு வந்தது. ஆற்று மணல் குறைந்தாலும், தற்போதைய வெள்ளம், வரவிருக்கும் மழை வெள்ளம் மூலம் புதிய மணல் உருவாக வாய்ப்புள்ளது. ஆனால் மலைகள் உடைக்கப்பட்டால், வருங்காலத்தில் மலைகளே இல்லாத தமிழகமாக இருக்கும். மேலும் சுற்றுச்சூழலுக்கும் இயற்கைக்கும் பேராபத்து உண்டு பண்ணும் வாய்ப்பும் உருவாகும்.

மேற்கண்ட முறைகேடுகள் இனி நடைபெறாமலிருக்க ஆந்திரா, கர்நாடகாவில் Online-ல் கனிமங்கள் வழங்குவதைப் போன்று இங்கும் நடைமுறைப்படுத்தினால், கனிமங்கள் ஏற்றும் லாரி, ரசீது, அளவு, தரம், செல்லுமிடம் அனைத்து விவரங்களும் பதிவாகி விடும். Online மூலம் வழங்கினால் மேற்கண்ட முறைகேட்டினை தடுத்து விடமுடியும் என்பதை மாண்புமிகு முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம்.

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இதில் தனி கவனம் செலுத்தி, நேரடியாக ஸ்தல ஆய்வு செய்து, உரிய நடவடிக்க எடுக்க வேண்டும்.

தலைவர்
செயலாளர்

Recent Posts

𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘔𝘦𝘥𝘪𝘢 𝘞𝘰𝘳𝘬𝘴 𝘱𝘳𝘦𝘴𝘦𝘯𝘵𝘦𝘥 𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘈𝘸𝘢𝘳𝘥𝘴 2024 𝘩𝘰𝘯𝘰𝘶𝘳𝘪𝘯𝘨 𝘊𝘪𝘯𝘦𝘮𝘢 𝘊𝘦𝘭𝘦𝘣𝘳𝘪𝘵𝘪𝘦𝘴, 𝘗𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘪𝘢𝘯𝘴 & 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳𝘴, 𝘋𝘰𝘤𝘵𝘰𝘳𝘴, 𝘐𝘈𝘚 & 𝘐𝘋𝘈𝘚 𝘖𝘧𝘧𝘪𝘤𝘦𝘳𝘴