நீர் நிலைகள், வழித்தடங்கள், ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து அகற்ற ஆழி சமுக அரசியல் செயற்ப்பாட்டு இயக்கம் ஆரம்பம்


சென்னை, டிசம்பர் 7, 2021: சமூகத்தில் இருக்கும் பல முக்கிய பிரமுகர்கள் ஒன்றிணைந்து தமிழகத்தில் பல ஆண்டுகளாக தீர்வு இல்லாமல் இருக்கும் நீர் நிலைகள், நீர் வழித்தடங்கள், ஆக்கிரமிப்புகள், இந்த ஆக்கிரமிப்புகளால் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, ஆழி அரசியல் சமூக செயற்ப்பாட்டு இயக்கம் தொடங்கப்பட்டிருப்பதாக இயக்கத்தின் தலைவர் தனமணி வெங்கட் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார். இந்த சந்திப்பின் போது Bittalk சீனிவாஸ் திவாரி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமெரிக்கை நாராயணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் உடன் இருந்தனர்.

Youtube Video👇👇

நீர் நிலைகள், நீர் வழித்தடங்கள், ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றவும், அங்கு வசிக்கும் அடித்தட்டு மக்களுக்கு தேவையான அடிப்படையான வசதிகள் கொண்ட வேறு குடியிருப்புகள் மாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வொம். இதற்கு தேவையான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் எங்கள் கூட்டமைப்பு மேற்கொள்ளும்.
(L to R) Bittalk சீனிவாஸ் திவாரி, ஒருங்கிணைப்பாளர்;  தனமணி வெங்கட்,  தலைவர், அமெரிக்கை நாராயணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி

அணை மசோதா தற்போது நிறைவேறி இருக்கும் சூழலில், தமிழகத்துக்கு தேவையான சாதக பாதகங்களை அலசுவது, நீர் வழித்தடங்கள், நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கும்.

இதையொட்டி ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருக்கும் பல சூழல் பாதுகாப்பு இயக்கங்களோடு ஒன்றிணைந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது.

நீர் வழித்தடங்கள், நீர்நிலைகள் மூலம் பயனடையும் உள்ளூர் மக்களிடத்தில் அவற்றை பாதுகாப்பது பற்றிய அவசியத்தை பிரச்சாரமாக முன்னெடுப்பது.

நீர் வழிப்பாதைகள் இயற்கையாக அமைத்து சென்று கொண்டிருந்த இயற்கைக்கு இடையூறு செய்ததன் பலன் தான் இன்று பல வீடுகளுக்குள் நீரோடை என்ற நிலையில் இந்த தலைமுறையினர் வந்து நிற்ப்பதை ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை பலவழிகளில் முன்னெடுப்போம்.

இனி ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் தடுக்கும் சட்டத்தை கடுமையாக்க வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தும்.

இனி வரும் காலங்களிலும் ஊடகத் தோழமைகள் உதவியுடன், மக்கள் ஆதரவுடனும் ஒருக் கரமாக இணைந்து இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க போவதாக கூறினார்.

****

Recent Posts