சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான தொழில் முடக்கம், சிமெண்ட் உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை


சென்னை, அக்டோபர் 25, 2021: பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் கட்டுமானத் தொழிலுக்கு மூலாதாரமான மணல் சில ஆண்டுகளாக கிடைக்காத நிலையில் தற்பொழுது சிமெண்ட் மற்றும் கம்பி விலைகளும் உயர்ந்துள்ளதால் சென்னை மாவட்டத்தில் கட்டுமான தொழில் முடங்கி வருகிறது. இந்த விலையை உயர்த்தி உள்ள சிமெண்ட் உற்பத்தியாளர்கள் மீது மத்திய மாநில அரசுகளும் தேசிய கொள்ளை லாப தடுப்பு ஆணையமும் நடவடிக்கை எடுத்து மற்ற மாநிலங்களில் விலைக்கு ஏற்ப சிமெண்ட் விலையை குறைக்க வேண்டும் என்று சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பாக  தலைவர் குமாரகிருஷ்ணன் தலைமையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அவருடன் செயலாளர் கார்த்திக் சூர்யா, பொருளாளர் மணிகண்டன், துணைத்தவைவர் சீனிவாசன் மற்றும் முன்னாள் தலைவர் தயாநிதி உடன் இருந்தனர்.

Youtube video👇👇

அப்போது அவர் பேசியதாவது:  தற்பொழுது சிமெண்ட் மற்றும் கம்பி விலைகளும் உயர்ந்துள்ள நிலையில் லட்சத்திற்கு மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கட்டுமான தொழிலுக்கு முக்கியமானதாக, மணல் சிமெண்ட் செங்கல் மற்றும் தற்பொழுது ஆகியவை உள்ளது இதில் மணல் கடந்த சில ஆண்டுகளாக.தட்டுப்பாடாக உள்ள நிலையில் M SAND ம் விலை உயர்ந்து காணப்படுகிறது இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிமெண்ட் விலை 50 கிலோ மூடை 335 லிருந்து 510 ஆக உயர்ந்துள்ளது. 
(L to R) Er.T.Dhayanidhi, Past President; Er.S.Manikandan, Treasurer; Er.B.Kumarakrishnan, President; Er.T.Karthik Raja, Secretary; Er.E.Srinivasan, Vice President)

ஏற்கனவே மணல் பற்றாக்குறை மணல் விலை உயர்வு ஆகியவற்றால் கடந்த சில ஆண்டுகளாக கட்டுமானத் தொழில் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிமெண்ட் மற்றும் கம்பி உற்பத்தியாளர்கள். தன்னிச்சையாக விலையை உயர்த்தியுள்ளனர்.

தற்பொழுது உயர்த்தப்பட்டுள்ள விலைக்கு சிமெண்ட் மற்றும் கம்பி வாங்கி கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியாததால் சென்னை மாவட்டத்தில் பல கோடி மதிப்பிலான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், அபார்ட்மென்ட்கள் மற்றும் தனி வீடுகள் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சுமார் 50 சதவீதம் அளவுக்கு பணிகள் முடங்கியுள்ளது.

சிமெண்ட் விலை உயர்வால் அதிர்ச்சிக்கு ஆளாகி யுள்ள கட்டுமானத் துறையினர் விலையை குறையட்டும் என்று கட்டுமான பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க.தொடங்கிவிட்டனர். இதனால் கட்டுமான தொழிலை நம்பியுள்ள சிமெண்ட், செங்கல் லாரி உரிமையாளர்கள் லாரி ஓட்டுநர்கள் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் என சென்னையில் பல லட்சத்திற்கு மேற்பட்டோர் உட்பட தமிழகத்தில் -சுமார் ஒன்றரை கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விலையை உயர்த்தி உள்ள சிமெண்ட் உற்பத்தியாளர்கள் மீது மத்திய மாநில அரசுகளும் தேசிய கொள்ளை லாப தடுப்பு ஆணையமும் நடவடிக்கை எடுத்து மற்ற மாநிலங்களில் விலைக்கு ஏற்ப சிமெண்ட் விலையை குறைக்க வேண்டும்.

****

Recent Posts