உபி விவசாயிகள் கொலைகள் எதிர்த்து மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மௌன விரதப் போராட்டம்
சென்னை, அக்டோபர் 11, 2021: உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது தாக்குதலை ஏற்படுத்தி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி மத்திய அரசை கண்டித்து சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராப்பூர் டவர் அருகே மவுனவிரத போராட்டம் நடைபெற்றது.
Youtube Video👇👇
சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவ ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை, அமைப்புச் செயலாளர் சரவணன், சேப்பாக்கம் பகுதி தலைவர் தனிகாசலம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில்: உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் மீதான வன்முறை சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை எனவும் இந்த விவகாரம் தொடர்பாக இன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து ராகுல் காந்தி கடிதம் அளிக்க உள்ளார் என்றார்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாட்டா குடும்பத்திற்கு விற்பனை செய்ததன் மூலம் உலக அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்து இருக்கிறார் பிரதமர் மோடி என்றார்.
ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்றதைப் போல் காந்தியடிகள் போராடி வாங்கிய சுதந்திரத்தையும் மீண்டும் பிரிட்டிஷ் அரசுக்கே மோடி விற்று விடுவார் என இளைஞர்கள் கேள்வி எழுப்பிவருவதாகவும் கூறினார்.
****