Corruption & Irregularities at IIT Madras || All India Dalith Action Committee demands CBI Enquiry
சென்னை, ஜூலை 6, 2021: சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்தில் தொடர்ந்து தீண்டாமை மற்றும் வன்கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. அதன் சார்பாக All India Dalith Action Committee-இன் தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்.A.M.ராஜா இன்று பத்திரிகை யாளர்களை சந்தித்து பேசினார். அவருடன் சென்னை மண்டல தலைவர் P.T.கண்ணன் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் கடலூர் சந்திரவடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
Video👇👇
அப்போது அவர் பேசியாவது, "ஆராய்ச்சி மாணவர்கள் 50-ற்கும் மேற்பட்டோர் (தற்)கொலைகள் நடைபெற்று உள்ளது. பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து இழைக்கப்பட்டு வருகின்றது. உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி நியமனங்களில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து வருகிறது. வனவளங்களை அழித்தும் வன உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கப்பட்டும் வருகின்றது.
(L to R) மாநில இளைஞரணி செயலாளர் கடலூர் சந்திரவடிவேல்; தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்.A.M.ராஜா; சென்னை மண்டல தலைவர் P.T.கண்ணன் |
பல லட்சம் மதிப்புள்ள வன மரங்களை அப்புற படுத்தியும், அனுமதியின்றி கட்டுமான பணிகள் மேற்கொண்டும், அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றாமல் பல கோடி மதிப்புள்ள உபகரனங்களை கொள்முதல் செய்தும் மற்றும் பயன்பாட்டிற்கு உகுந்த பல லட்சம் மதிப்புள்ள கனிணி உபகரணங்களை பயன்பாட்டிற்கு லாயாக்கற்றதாக கணக்கு காட்டி வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆண்டு தோறும் மத்திய அரசால் ஒதிக்கீடு செய்யப்படும் சுமார் 750 கோடி ரூபாயினை பல துறைகளிலும் குறிப்பாக கடல்சார் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சி செய்ததாக போலி கணக்கு காட்டி பல கோடி ரூபாய் மோசடி செய்யபட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி வளாக நல அறகட்டளை என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி அதில்யை நியமித்து பள்ளி நிர்வாகம், விடுதி நிர்வாகம், வளாக தூய்மை பணி நிர்வாகம் என பல துறைகளிலும் பணிகள் மேற்கொள்ள செய்து அதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்று வருகிறது.
மேற்கண்டவாறு தொடரும் செயல்பாடுகளினால் சாதிய பாகுபாடு, வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை, 50-ற்கும் மேற்பட்ட கல்வியில் மிகச்சிறந்த ஆராய்ச்சி மாணவர்கள் குறிப்பாக (உயர்சாதி வகுப்பினர் அல்லாத) தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்பை சேர்ந்தவர்கள் (தற்)கொலைகள், மோசடிகள், ஊழல்கள், வனவளங்களை அழித்து விலை உயர்ந்த மரங்களை கடத்தல், உபகரணங்கள் கொள்முதல் மற்றும் கட்டுமான பணிகளில் ஒப்பந்த பணி விதிகளை மீறுதல், செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை தாக்கி குற்ற செயல்களுக்கு தொடர்பில்லாத தலித் இனத்தை சேர்ந்த திரு.சைமன், திரு, வெங்கடேசன், திரு.பிரேம் ஆனந்த் ஆகிய மூவரையும் வழக்கில் சிக்க வைத்து பலிகடா ஆக்கியது,
தகுதியில்லாத தனது உயர்சாதி இனத்தை சார்ந்தவர்களை குறிப்பாக திரு,ஸ்ரீராம் உள்ளிடவர்களுக்கு பணி நியமனம் அளித்தும் அடுத்தடுத்து பதவி உயர்வு அளித்தும் அவர்களை உயர்பதவிகளுக்கு கொண்டு வருவதன் மூலம் தங்களுடைய குற்ற செயல்களுக்கு பின்பாதுகாப்பு ஏற்படுத்தி வருவது உள்ளிட்ட தொடர் குற்ற செயல்களால் சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்தை குற்றங்களின் கூடாரமாக, சட்டத்தை பற்றியோ உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களின் தீர்ப்புகளை பற்றியோ, மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டும் நெறிமுறைகளை பற்றியோ, சிறிதும் கவலை படாமல் துச்சமாக செயல்பட்டு வரும் சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் திரு.பாஸ்கரமூர்த்தி அவரது மனைவி திருமதி.விஜயலட்சுமி, டீன்கள் (முதல்வர்கள்) திரு.கோசி வர்கீஸ், மற்றும் திரு.ஸ்ரீராம், துறை தலைவர் திரு.நாகராஜன் உள்ளிட துறை தலைவர்கள், பேராசிரியர் திரு.பிரகாஷ் மையா, திரு. சுதர்சன் பத்மநாதன், இணை பேராசிரியர் சுபம் பானர்ஜி மற்றும் பதிவாளர் திருமதி.ஜானே பிரசாத் உள்ளிட்ட இதர தொடர்புடைய அலுவளர்கள் மீது விசாரனை செய்து;
1)தாழ்த்தப்பட்டோர்கான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும்
2)பெண்களுக்கான் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும்
3)லஞ்சம் மற்றும் ஊழல் சட்டத்தின் கீழும்
உரிய நேர்மையான விசாரனை மற்றும் சட்டபடியான நடவடிக்கைகள் எடுத்து நீதியின் முன்னிறுத்தி போதிய தண்டனையை பெற்று தருவதன் மூலம் தொடரும் மேற்கண்ட குற்ற செயல்களுக்கு எல்லாம் நிரந்திரமான முற்று புள்ளி வைத்திட பணிவுடன் கேட்டுக் கொள்வதாக கூறினார்.
*****