IMPCOPS introduces Siddha, Ayurveda, Unani medicines for Covid-19 Treatment || President Dr.Kannan's Pressmeet
சென்னை, மே 13, 2021: இம்ப்காப்ஸ் நிறுவனத்தின் தலைவர் Dr.R.கண்ணன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து இம்ப்காப்ஸ் நிறுவனத்திடம் கோவிட் இரண்டாம் அலைத்தொற்றுக்கு மருந்துகள் இருப்பதாக கூறினார். அவருடம் Dr.Khader Mohideen, Secretary Incharge, Dr.Suresh, Vice President மற்றும் சில டாக்டர்கள் உடன் இருந்தனர்.
Video👇👇
மேலும் கொரோனா முதல் அலையில் கொரோனா நோயிற்கு அலோபதி மருத்துவம், சித்தா, ஆயுர்வேதா மருத்துவம் என பல்வேறு மருத்துவமுறைகள் தனித்தனியாக நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அவ்வாறு இல்லாமல் அலோபதி மருத்துவமுறையில் வழங்கப்படும் மாத்திரைகளுடன் மேற்கூறிய சித்த ஆயுர்வேதா மருந்துகளையும் நோயாளிகளுக்கு அவரவர் உடல் தன்மைகேற்ப வழங்க வேண்டும். இவ்வாறு Integrated Approach எனப்படும் முறையினை அனைவருக்கும் வழங்கிவர நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகப்படும்.
( L to R) Dr.Khader Mohideen, Secretary Incharge; Dr.R.Kannan, President; Dr.Suresh, Vice President |
கொரோனா நோயினில் முதல் வாரத்தில் சளி வறட்டு இருமல், காய்ச்சல், தொண்டை வலி போன்ற குறிகுணங்கள் காணப்படும் பின் தொடர்ந்து வரும் வாரத்தில் நுரையீரலில் தொற்று ஏற்பட்டு நோயாளிகள் மரணிக்கின்றனர். இவ்வாறு integrated Approach முறையினை நோயாளிகளுக்கு வழங்குவதன் மூலம் முதல் வாரத்தில் காணும் குறிகுணங்கள் சிறிது சிறிதாக குறையத் தொடங்குகிறது இதனால் கொரோனா நோயினில் நோயாளிகள் இரண்டாம் கட்டத்திற்கு செல்வது தடுக்கப்படுகிறது என்பதோடு அல்லாமல கொரோனா வீரியமும் நோயாளிகளிடத்தில் குறையத் தொடங்குகிறது இதனால் நோயாளிகளுக்கு மரணமானது தடுக்கப்படுகிறது.
இதனால் தற்பொழுது மருத்துவமனைகளில் காணப்படும் படுக்கை வசதியின்மை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, cremation problems போன்ற நிலைகள் யாவும் மேற்கூறிய Integrated Approach முறையினைக் கடைபிடிப்பதன் மூலம் நோய் தீவிர நிலை அடையாமல் நோயாளிகள் நன்னிலை அடைகின்றனர்.
இவ்வாறு அனைத்து வகையான மக்களும் நோய் நிலையின்றி வாழவும் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கவும் Integrated Approach முறையினைக் கடைபிடிக்க எவ்வித தயக்கமும் இன்றி அனைத்து வகையான மருத்துவர்களும், தமிழ்நாடு மருத்துவர்கள், இந்திய மருத்துவத் துறை மற்றும் ஆயுஷ் மருத்துவர்களும் செயல்பட இம்ப்காப்ஸ் நிறுவனத்தின்.சார்பாகவும் கோரிக்கை வைக்கப்படுகிறது. இதன் மூலம் கொரோனா அலையின் வீரியம் கண்டிப்பாக குறையும் என்பது நிதர்சனமான உண்மை.
****