Builder's Association of India organised One Day Dharna & Strike against abnormal Cement and Steel Price increase
பத்திரிக்கை செய்தி
சிமெண்ட் மற்றும் ஸ்டீல் ஆகியவற்றின் அசாதாரன விலை உயர்வை எதிர்த்து 12, பிப்ரவரி 2021 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 10 மணி முதல் 12 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெற்றது.
Video👇
அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் 1941ம் ஆண்டு துவக்கப்பட்டு அகில இந்திய அளவில் 200 மய்யங்களையும் ஒரு லட்சம் உறுப்பினர்களையும் 20,000க்கும் அதிகமான தொழில் மற்றும் தொழில் உள்ளடக்கிய கட்டுமானத்துறையில் வரும் தொழில் ரீதியான கொள்கை ரீதியான சிரமங்களையும் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வதோடு ஒட்டுமொத்த கட்டுநர் சமுதாயத்தையும் உயர்த்துவதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டு கட்டுநர் வல்லுநர் சங்கம் செயல்பட்டு வருகிறது.
சிமெண்ட்:
உன்நாட்டு மொத்த உற்பத்தியில் மிகப் பெரும் பங்களிப்பு செய்யும் கட்டுமானத்துறை மிக முக்கியமான பொருளாதார செயல்பாடுகளை உடையதாகும். மொத்த திட்டத் செலவினத்தில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்களிப்பு செய்யும் கட்டுமானத்துறை தன்னோடு தொடர்புடைய 400க்கும் மேற்பட்ட தொழில்கள் வளர்வதற்கு உதவுவதோடு 60 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்டு அவர்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்துக் கொளர் டிருக்கிறது.
கட்டுமானத்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்களில் சிமெண்ட்டும், ஸ்டீலும் மிக முக்கியமானவையாகும். கட்டுமானத்துறையை தவிர்த்த வேறு எந்த ஒரு பெரிய நுகர்வோரும் இல்லாத கட்டுமானப் பொருள் சிமெண்ட் மட்டுமே ஆகும். பெரும் கட்டுமான ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் குறித்த காலக்கெடுவிற்குள் ஒப்பந்த தொகைக்கு உள்ளேயே பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் அவர்களுக்கு இது பெரும் சுமையாகும்.
இந்நிலையில் கட்டுநர் வல்லுநர் சங்கம் தனது போராட்டத்தினை தொடரும் முகமாக இந்திய போட்டிகள் ஆணையம் (CCI) முன்பாக ஒரு மனுவினை தாக்கல் செய்தது. சிமெண்ட் உற்பத்தியாளர்களும், உற்பத்தியாளர்களின் சங்கமும் தங்களுக்காக இவ்வழக்கில் பிரபலமான வழக்கறிஞர்களை கொண்டு வாதாட செய்தனர். இருப்பினும் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த ஆணையம் ரூ.6307 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டது. இது சிமெண்ட உற்பத்தியாளர்கள் நோமையற்ற முறையில் வர்த்தகம் செய்து சம்பாதித்த லாபத்தில் கிட்டத்தட்ட 50 சதவிகிதமாகும் இதன் பிறகும் கூட சிமெண்ட் உற்பத்தியாளர்கள் விலையினை குறைப்பதற்கு பதிலாக விலையை மேலும் உயர்த்தினர். இது பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பின் சட்ட நடைமுறைகளை கேலிக்கூத்தாக்கியது மூலப்பொருட்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாத நிலையில் எஸ்மல் உற்பத்தியாளர்களும் விலையை உயர்த்தினர்.
"சிமெண்ட் தொழிற்துறையின் செயல்திறன்" குறித்து தனது 95வது அறிக்கையை 24.02.2011 அன்று நாடாளு மன்ற மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்த வர்த்தக அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு சிமெண்ட் உற்பத்தியாளர்களின் லாப நோக்கமே சிமெண்ட் விலை உயர்விற்கு காரணம் என்று தனது அதிர்ப்தியினை வெளிப்படுத்தியது. மேலும் இது போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஒரு ஒழுங்குமுறை ஆணையத்தினை ஏற்படுத்த வேண்டும் எனவும் அழுத்தமாக பரிந்துரை செய்தது.
சிமெண்ட் மார்ச் 2020ல் இருந்ததைவிட அளவு கடந்து ரூபாய் 100 வரை உயர்ந்து தற்போது ஒரு மூட்டையின் விலை ரூ 390-விருந்து 400 வரை விற்பனையாகிறது. சிமெண்ட் கட்டுமானத்துறைக்கு ஒரு அடிப்படை உள்ளீடாகும். இந்த அடிப்படை கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு தேவை அதிகரிப்பினால் ஏற்பட்டதல்ல. இவ்விலை உயர்வு கெண்ட் உற்பத்தியாளர்கள் ஒரு கூட்டணியாத சேர்த்து கொண்டு லாபம் ஈட்டும் நோக்குடன் உற்பத்தி மற்றும் விநியோகத்தினை முன்கூட்டியே நிர்ணயிக்க ஏற்பாடுகள் செய்ததன் மூலமே ஏற்பட்டது தெரிவாகிறது.
ஸ்டீல்
நவம்பர் 2019ல் ரூ.35,000 ஆக இருந்த ஒரு டன் ஸ்கலின் விலை ஜனவரி 2021ல் ரூ.55,000 ஆக உயர்ந்துள்ளது. கட்டுமானத்துறை மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் இத்தின் விலை உயர்வுகள் திட்டச் செலவினங்களை எதிர்பாராத வகையில் அதிகரித்துண்டுகிறது. விலை அதிகரிப்பு மற்றும் TM எஃகு கம்பிகளை வழங்குவதில் ஏற்படும் தாவரம் ஆகிய இரண்டும் தற்போது செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நெடுஞ்சாலைத்துறையின் முன்னேற்றத்தி பாதிக்கின்றது மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களினால் தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களில் முன்பிருந்ததைப்போல முன்னேற்றத்தினை காட்ட இயலாமல் போகிறது. மேலும் இந்த தாமதங்கள் தொலைநோக்கோடு செயல்பட்டு வரும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MORTH) திட்டங்களை நிர்ணயித்த கால எல்லைக்குள் நிறைவேற்ற முடியாமல் தாமதப்படுத்தக்கூடும்.
கட்டுமானத்துறையின் கோரிக்கைகள்
அரசு, உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு அடுத்த இந்தாண்டுகளுக்கு குக வட்சம் கோடியை ஒதுக்கீடு செய்ய உத்தேசித்து செயல்பட்டு வருகிறது. ஆகிய இரண்டும் உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் துறைக்கு தேவையான கே முக்கியமான உள்ளிட்டு மூலப்பொருளாகும்.
மத்திய மாநில அரசுகள் பல்வேறு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் அதிகாரிகளை அவ்வப்போதைய
தேவைகளுக்கு ஏற்ப ஏற்படுத்தியுள்ளன. உதாரணமாக
- பங்குச் சந்தைகளுக்கான 1920 ஏற்படுத்தப்பட்ட இக்யே பாதுகாப்புஸபரிவர்த்தனை வாரியம் SEBI
- தொலைத்தொடர்புத்துறை சாம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் TRAI
- 1990ல் காப்பீட்டுத் துறைக்காக ஏற்படுத்தப்பட்ட இந்திய காப்பேடு எனக்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்
- அடுக்குமாடி கட்டிடத் துறைக்கு கால் ஏற்படுத்தப்பட்ட ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைஆணையம் (RERA)
இதனடிப்படையில்
1. சிமெண்ட்ட மற்றும் எஃகு உற்பத்தியாளர்களின் நியாயமற்ற வர்த்தக போக்கினை கட்டுப்படுத்துவதற்காக சிமொன்ட் மற்றும் எக்கு ஒழுங்குமுறை ஆணையத்னத் அமைக்க கோருகிறது
2 எஃகு கம்பிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த அதன் ஏற்றுமதிக்கு உடனடியாக முழுத்தடையை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
3. இரும்புத் தாது மற்றும் எஃகு ஸ்கிராப் பொருட்களுக்கு இறக்குமதி செய்வதற்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கலாம்
சிமெண்ட் மற்றும் ஸ்டீல் உற்பத்திக்கான உள்ளீட்டு மூலதனப் பொருட்களில் எவ்வித விலை உயர்வோ கட்டுமானத்துறையினரிடமிருந்து அசாதாரணமான தேவையோ அதிகரிக்காத நிலையிலும் உற்பத்தியாளர்களின் தார்மீக நெறிமுறைகளுக்கு நடைமுறைகளால் ஏற்பட்டுள்ள அசாதாராணமான விலை உயர்வுக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஒரு உயர்மட்ட விசாரணைக் குழுவினை ஏற்படுத்துமாறு அரசினை அகில இந்திய கட்டுநர் சங்கம் கோருகிறது.
இவ்விவகாரத்தில் அரசாங்கத்தின் விரைவான மற்றும் உடனடி நடவடிக்கையானது சுமார் 60 பில்லியன் கட்டுமானத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் மலிவு விலை வீட்டுத் திட்டத்தையும், போக்குரைத்து மற்றும் நெடுஞ்சாலைகள் உள்ளடக்கிய கட்டுமானத் துறையினை சரிவில் இருந்து காப்பாற்றும். மேலும் ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்படும் வரை மத்திய மாநில அரசுகள் தலையிட்டு சிமெண்ட்டண்டல மற்றும் ஏனைய பிற கட்டுமானப் பொருட்களின் விலைகளை குறைத்து நிர்ணயித்து பொது மக்களுக்கு உதவ வேண்டுகிறோம்.
அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் ஒரு உறுப்பு மய்யமான தென்னக மய்யம் சிமெண்ட், ஸ்டீல், மற்றும் பிற கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும் என்று கோரி 12.02 2021 அன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வள்ளுவர் கோட்டம் அருகில் போராட்டம் நடத்தியது.
Mu. மோகன்
அகில இந்திய தலைவர்
சாந்தகுமார்
தென்னக மய்யத்தலைவர்
அகிய இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம்
அகில இந்திய பொறியியல் கட்டுனர் ஒப்பந்தக்காரர்கள் சங்கம்
தென்னக மய்யம்
பிளாட் எண்.1, அம்பத்தார் எஸ்டேட் அப்பத்தூர, சென்னை 53
தொலைபேசி எண் | 044 26262006
*****