பேக்கிடெர்ம்டேல்ஸ் இளைய எழுத்தாளர் ஆராதனா உமேஷின் புத்தக வெளியீட்டு விழா

பேக்கிடெர்ம்டேல்ஸ் இளைய எழுத்தாளர்  ஆராதனா உமேஷின் புத்தக  வெளியீட்டு விழா திருச்சியில் நட்பு சிறார்  இல்லத்தில் நடைபெற்றது. கடுகை துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் என்று பாரெல்லாம் கொண்டாடும் நம் திருக்குறளில்  உள்ள 14 குறள்களை தேர்ந்தெடுத்து  பேக்கிடெர்ம்டேல்ஸ் எழுத்தாளர் சிறுமி ஆராதனா  பட புத்தகமாக (காமிக்ஸ்) ஆங்கிலத்தில் உருவாக்கியுள்ளார். 

பேக்கிடெர்ம்டேல்ஸ்

இவ்விழாவை பேக்கிடெர்ம்டேல்ஸ் மற்றும் வாய்ஸ் டிரஸ்ட் இணைந்து நடத்தியது. ஶ்ரீ வித்யா சுதர்சன் தமிழ் தாய் வாழ்த்து பாடி துவக்கிவைத்தார். பேக்கிடெர்ம்டேல்ஸின்  நிறுவனர் முனைவர்  லஷ்மி ப்ரியா  அனைவரையும் வரவேற்று   ஆராதனாவின்  திருக்குறள் புத்தகம் உருவான  கதையை கூறினார்.  சிறப்பு விருந்தினரான ஜமால் முகமது கல்லூரியின்  ஆங்கில பேராசிரியரும் எழுத்தாளருமன  முனைவர் அப்துல் முகமது அலி ஜின்னா திருக்குறள் காமிக்ஸ் புத்தகம்  இந்தகாலத்திற்கேற்ப எப்படி புதுமையாக உள்ளது என்றும் , அதில் தனக்கு பிடித்த கதைகள் பற்றியும், ஆராதனாவின் படைப்பாற்றலை பற்றியும் மிக சுவைப்பட பேசினார்.

Youtube Video link 👇 

தமிழ்சங்க தலைவி, ஆசிரியை முனைவர் . தாமரை குறளின் சிறப்பு பற்றியும், ஆராதனாவின் இந்த முயற்சி  வரலாற்றில் இடம் பெறும் என  சிறப்புரையாற்றி வாழ்த்தினார்.  பேக்கிணெர்ம்டேல்ஸின் தமிழ் பிரிவு தலைவர் மற்றும் குழந்தைகளுக்கு திருக்குறள் கதைகள் கூறினார். வாய்ஸ் டிரஸ்டின் நிர்வாகி ஜெனட் ப்ரீத்தி ஆராதனாவை வாழ்த்தி பேசினார்.

எழுத்தாளர் ஆராதனா  பேசும் போது தனது கனவு நிறைவேற  காரணமான தனது  பெற்றோருக்கும், முனைவர் லஷ்மி ப்ரியா மற்றும் ஓவியர் நிர்மல் அவர்களுக்கும் நன்றி கூறினார். இறுதியில்  வாய்ஸ் டிரஸ்டின் நிறுவனர் கிரகோரி நன்றி தெரிவித்தார்.

****

Recent Posts