1990 வருட வேளச்சேரி அட்வென்ட் கிறிஸ்டியன் பள்ளி முன்னாள் மாணவர்களின் கோலாகலமான சந்திப்பு
டிசம்பர் 29, 2024 சென்னை: 1990 வருட வேளச்சேரி அட்வென்ட் கிறிஸ்டியன் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் கோலாகலமான சந்திப்பு இன்று வேளச்சேரி கிராண்ட் பார்ட்டி ஹாலில் நடைபெற்றது.
இது ஏழாவது வருட சந்திப்பாகும். முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்தக் குழுவின் தலைவர்கள் ஜஸ்டின் மற்றும் பால்ராஜ் பேசுகையில், எந்த ஒரு குடும்பத்திலும் நடைபெறும் நல்ல மற்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு உதவிகளை பரி மாற்றிக் கொள்வதாக கூறினார்கள்.
Youtube Video link 👇
இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் கேக் வெட்டி தங்கள் சந்தோஷத்தை கொண்டாடினர். சில விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறுவர்கள் தங்கள் திறமைகளை கண்காட்சியாக வைத்திருந்தனர். இந்நிகழ்வு மதிய உணவுடன் மகிழ்ச்சியாக முடிவுற்றது
****