IT & PG Hostel விடுதி உரிமையாளர்கள் சந்திக்கும் வாழ்வாதார பிரச்சனைகள் கிராமபுற ஏழை மகளிர் வேலை வாய்ப்பை பறிக்க வாய்ப்பு


சென்னை, ஜூலை 01, 2024: விடுதி உரிமையாளர்கள் சந்திக்கும் வாழ்வாதார பிரச்சனைகளை குறித்து தமிழ்நாடு IT விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் A.Seetharaman இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன்  முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்

-----------------------------------------------------
Press meet Youtube Video link:👇
-----------------------------------------------------

அப்போது அவர் பேசியதாவது:
  • விடுதி உரிமையாளர்களின் உழைப்பையும், தியாகத்தையும், இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கினையும், கருத்தில் கொண்டு GST வரியிலிருந்து விடுதிகளுக்கு விளக்கு அளித்த மத்திய அரசிற்கும் மற்றும் மத்திய நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றி.
  • விடுதிகள் உரிமம் பெறுவதற்கான நடைமுறையை எளிமைபடுத்தப்படும் என்று அறிவித்து உள்ள தமிழக அரசிற்கும், முதல்வர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி.
  • Tamil Nadu Government Gazette Feb-4-2019 அறிக்கையில் விடுதிகளுக்கு பயன்படுத்தப்படும் கட்டிடங்கள் குடியிருப்பு Zoning Regulations Rule 33, Tamil Nadu Combined Development and Building Rules Annexure XVIII . மேலும், இந்த கட்டிடங்களுக்கான சொத்து வரியை குடியிருப்புக்கான வரியை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரியை அரசு ஏன் வசூலிக்கிறது?
  • 22.03.2024 அன்று மேதகு உயர்நீதிமன்ற நீதிஅரசர் திரு.கிருஷ்ணன் ராமசாமி அவர்கள், மாணவர்கள், பணிபுரியும் மகளிர் மற்றும் ஆடவர்கள் தங்கும் விடுதிகள் குடியிருப்பு வாழ்விடம் என்றும் மற்றும் மேலும் அவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் உட்பட அனைத்தும் குடியிருப்புக்கான பயன்பாடு என்று தீர்ப்பு அளித்துள்ளார். இதன் மூலம் விடுதிகள் "குடியிருப்பு வாழ்விடம் " என்று ஆணித்தரமாக கூறியுள்ளதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • 2019ஆம் ஆண்டு Government Gazette-யின்படியும், 2024ஆம் ஆண்டு நீதியரசர் திரு.கிருஷ்ணன் ராமசாமி அளித்த தீர்ப்பின்படியும், விடுதி கட்டிடங்கள் "குடியிருப்பு கட்டிடங்கள்" என்றால் வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை அரசு ஏன் விடுதிகளிடமிருந்து வசூலிக்கிறது.
  • அரசும், நீதியரசரும் குடியிருப்பு கட்டிடங்கள் என்று அறிவித் பின் "Public Building" க்கான Form-D யை விடுதிகளுக்கான வரைமுறையில் இருந்து ஏன் நீக்கப்படவில்லை.
  • முதலமைச்சரின் தனிப்பிரிவு மனு எண். U/322277/2023 வந்த பதிலில் Co- Live என்ற பெயரில் இருபாலார் ஒரே அறையில் தங்கும் விடுதிகள் நடத்தவதற்கு அனுமதி கோரி எவ்வித விண்ணப்பமும் சமூக நலத்துறையால் பெறப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் பல நூறு இரு பாலர் தங்கும் விடுதிகள் மிகப்பெரிய Corporate நிறுவனங்களால் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. வலைதளங்களில் 'Co-Live' விடுதிகள் என்று தேடினால் அவர்கள் முழுவிவரம் அதில் குவிந்துள்ளது.
  • Corporate நிறுவனங்கள் நடத்தும் மகளிர், ஆடவர், இருபாலர்கள் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்யாத அதிகாரிகள் வாழ்வாதாரம் இழந்த மகளிர் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், ஓய்வு பெற்ற முதியோர், மேலும் சமுதாயத்தால் நித்தம், நித்தம் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆட்பட்டு தவிக்கும் திருநங்கையர்கள் 30லிருந்து 40 பேருக்கு உணவு சமைத்து கொடுத்து தங்கள் வாழ்வாதாரத்தையும், குழந்தைகளின் கல்வி தேவைகளையும் நிறைவேற்றி கொள்ளும் எங்களுக்கு ஏன் இவ்வளவு இன்னல்கள்?
  • A Blockல் 5 குடும்பங்கள் 5 இல்லங்களில் முப்பது பேர் வசிக்கிறார்கள் அவர்களுக்கு Stability, Sanitory, Fire தேவையில்லை ஆனால் B Blockல் 5 இல்லங்களில் 30 மகளிர் அல்லது ஆடவர் தங்கி அவர்களுக்கு உணவு சமைத்து குடுத்து அவர்களை பாதுகாக்கும் எங்களுக்கு மேற்குறிப்பிட்ட அனைத்து சான்றும் பெற வேண்டும் என்றால் இது நியாயமா?
பணக்காரர்கள் தங்கும் Co-Live விடுதிகள் மற்றும் அடுக்கங்களுக்கு, அனைத்திலிருந்தும் விளக்கு ஏழை, எளிய, கிராமபுறத்திலிருந்து வந்து தங்கி பணிபுரியும் மகளிர் மற்றும் ஆடவர் விடுதிகளுக்கும் அந்த சலுகையை அரசு தரலாம் என்று தெரிவித்தார்


****

Recent Posts

𝘌𝘢𝘳𝘵𝘩𝘦𝘯 𝘚𝘱𝘢𝘤𝘦𝘴 & 𝘚𝘶𝘨𝘢𝘭 𝘎𝘳𝘰𝘶𝘱 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘪𝘵𝘴 𝘧𝘭𝘢𝘨𝘴𝘩𝘪𝘱 𝘎𝘢𝘵𝘦𝘥 𝘝𝘪𝘭𝘭𝘢 𝘗𝘭𝘰𝘵𝘴 𝘢𝘵 𝘒𝘦𝘭𝘢𝘮𝘣𝘢𝘬𝘬𝘢𝘮; 𝘉𝘶𝘪𝘭𝘥𝘪𝘯𝘨 𝘢 𝘓𝘦𝘨𝘢𝘤𝘺 𝘪𝘯 𝘔𝘰𝘥𝘦𝘳𝘯 𝘙𝘦𝘢𝘭 𝘌𝘴𝘵𝘢𝘵𝘦

𝘋𝘢𝘪𝘮𝘭𝘦𝘳 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘈𝘭𝘭 𝘕𝘦𝘸 𝘉𝘩𝘢𝘳𝘢𝘵 𝘉𝘦𝘯𝘻 𝘏𝘟 & 𝘛𝘖𝘙𝘘𝘚𝘏𝘐𝘍𝘛 𝘊𝘰𝘯𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘪𝘰𝘯 & 𝘔𝘪𝘯𝘪𝘯𝘨 𝘊𝘰𝘮𝘮𝘦𝘳𝘤𝘪𝘢𝘭 𝘛𝘳𝘶𝘤𝘬𝘴 𝘵𝘰 𝘗𝘰𝘸𝘦𝘳 𝘐𝘯𝘥𝘪𝘢'𝘴 𝘐𝘯𝘧𝘳𝘢𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘶𝘳𝘦 𝘉𝘰𝘰𝘮