கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் மூலம் சென்னை உலக சுற்றுலா வரலாற்றில் புதிய இலக்கை அடையும்: அமைச்சர் சாமிநாதன்


சென்னை, ஜனவரி 13, 2024: நவீன தொழில்நுட்பத்துடன், தமிழ் மொழி, இலக்கியம், கலைகள், இசை மற்றும் நடன நிகழ்வுகளை ஒன்றிணைத்து தமிழ்நாடு அரசின் புதிய கலை, பண்பாட்டு திட்டங்கள் வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வரவை கணிசமான அளவிற்கு அதிகரிக்கும், அந்நிய செலாவணியையும் பெரும் அளவிற்கு உயர்த்தும், என்று தமிழ்நாடு  தமிழ்வளர்ச்சி மற்றும்  செய்தித்துறை அமைச்சர் திரு M P சாமிநாதன் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.

(L to R) சிம்மம் குமார்; ஸ்ரீஹரன் பாலன்,SICCI; M P சாமிநாதன், தமிழ்நாடு  தமிழ்வளர்ச்சி மற்றும்  செய்தித்துறை அமைச்சர்; ஆர். ரங்கராஜ், சென்னை ப்ளஸ் அறக்கட்டளை மற்றும் சென்னை நிருபர்கள் சங்கத்தின் தலைவர்; ரத்னவேல்ராஜன்,SICCI; எஸ். ராஜவேலு. கல்வெட்டு நிபுணர் முனைவர்; எம். சோமசுந்தரம், SICCI

சென்னை 2000  ப்ளஸ் அறக்கட்டளை, SICCI, சென்னை நிருபர்கள் சங்கம் ஆகியோர் இனைந்து  வழங்கும்  ''சென்னை 2056 காலாண்டு சுற்றுலா மற்றும் கலை விழா'  வை துவக்கி,  'சென்னை 2056' இலச்சினை வெளியிட்டு, அமைச்சர்  சாமிநாதன் தமிழ்நாடு புதிய இலக்கை அடையும் என்று அறிவித்தார். 

---------------------------------------------------

Youtube video link 👇

https://youtu.be/PcBR5F-5ZoE?si=Fhv9RGCGSFtxlIW0

---------------------------------------------------

சென்னை 2056 காலாண்டு கலை விழா'   வட தமிழ்நாடு, குறிப்பாக சென்னை பெருநகர் பகுதியில் தமிழ் கலைகளும் மற்றும் பண்பாட்டினை உலகிற்கு கொண்டுசெல்ல ஒரு சீரிய முயற்சியை துவக்கியிருக்கிறார்கள்.  இதன் மூலம் தொன்மையான சென்னை பெருநகரின் கலாச்சாரம், கலை, இலக்கியம், இசை, இவைகைளையெல்லாம் ஒன்றாக திரட்டி உலக வரைபடத்தில் தமிழ் பண்பாட்டிற்கு ஒரு தனி இடத்தை உருவாக்க தமிழ்நாட்டு அரசிற்கு பெரிதும் உதவும் என்கின்ற நிலையில் இந்த கலை நிகழ்ச்சிகள், கலாச்சார பயணங்கள் நாட்டிற்கு அந்நிய செலாவணியை இன்னும் அதிகமான அளவிற்கு மீட்டு தரும் என்பதில் சந்தேகமில்லை,  என்று தெரிவித்தார். 

அந்த வகையில், முதலில் சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு கலாச்சார  பயணங்களை அனைத்து வசதிகளுடன் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் பல்வேறு சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.  சென்னை மட்டும் இல்லாமல் பிற மாவட்டங்களிலும் இது போன்ற கலாச்சார பயணங்களை மேற்கொள்ள இருக்கிறார்கள்.  இதற்க்கு தென் இந்தியா வர்த்தக குழுமம் SICCI (Southern India Chamber of Commerce and Industry) ஆதரவும் ஊக்கமும் அளிப்பதின் மூலம் தமிழ்நாடு உலகின் சுற்றுலா வரைபடத்தில் முக்கிய இடத்தை பிடிக்க பெரும் உதவியாக இருக்கும். இதே போன்று தமிழ்நாட்டில் இருக்கும் தொழில் நிறுவனங்கள் தமிழ் மொழியை,  கலாச்சாரத்தை பண்பாட்டினை போற்றி பாதுகாக்க மேலும் சிறப்படைய அனைத்து உதவிகளை செய்ய வேண்டும் என்றுக் திரு சாமிநாதன்    கேட்டுக்கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்த குளோபல் இன்வெஸ்ட்டர்ஸ் மீட் (Global Investors Meet) மூலமாக இதைதான் செய்துக் காட்டியிருக்கிறார், என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

"இந்த முயற்சியில் சென்னை 2056 கொண்டுவர இருக்கும் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு ஆக்கமும் ஊக்கமும் நிச்சயமாக அளிக்கும் என்றுத் தெரிவித்துக்கொள்கிறேன்", என்று அமைச்சர் கூறினார்.

உலகத்தில் எந்த பகுதியிலும் தமிழ்நாட்டில் உள்ளது போன்ற வாழும் கலாச்சாரத்தை (Living Culture) பார்க்க இயலாது. தினந்தோறும் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான கலை, இலக்கிய, இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அடிப்படை கட்டமைப்பு செய்வது தவிர, இந்த நிகழ்வுகளை நாம் உலக சுற்றுலாத்துறை அமைப்புகளுடன் இனைந்து செயல்படக்கூடிய முயற்சியில்  முழுவேற்றி பெறவேண்டும்.  அதற்க்கு இந்த திட்டம் நிச்சயமாக உதவும். 

2000 ஆண்டுகளுக்கு முன்னரே சென்னை பெருநகரில் தமிழ் கலாச்சாரம், இலக்கியம், இசை ஆகியவை சீரும் செழிப்போடும் இயங்கி வந்தன என்பதற்கான ஆதாரங்களை  திரட்ட  இந்த அறக்கட்டளை எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. திருவள்ளுவர் 2050 ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை பெருநகரில் மயிலையில் தமிழ் தொண்டிற்கான  சிறப்பான பணியை மேற்கொண்டார் என்றால், அவருக்கு முன்னாலேயே தமிழ் மொழி கற்க, படிக்க. அதில் எழுத ஒரு Eco-system இருந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.  அவருக்கு தமிழில் படிக்க எழுத ஆசான்களும் பள்ளிகளும்  இருந்திருக்க வேண்டும். சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரை தமிழ் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்  என இலக்கிய பதிவுகள் தெரிவிக்கின்றன.

உலக வரலாற்றைப் படித்து தெரிந்து கொள்வத்ற்கு முன்னர் தமிழர்களின் வரலாற்றை தெரிந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழ்  கலாச்சாரம், மொழி, கலை, பண்பாடு இவைகளை உலகமெங்கும் இருக்கின்ற தமிழ்  சமுதாயம் அறிந்துகொள்ள இதுபோன்ற பயணங்கள் பயனுள்ளதாக இருக்கும்.  நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக, சென்னை ப்ளஸ் அறக்கட்டளை  உருவாக்கும் அப்ஸ் மூலமாக, இங்கே இருக்கும் கலை பொக்கிஷங்களையும் வெளிநாட்டில் உள்ள தமிழர்களை  இணைக்க, ஒரு பாலமாக இதுபோன்ற பயணங்கள், Aps உதவும். கல்கியின் பொன்னியின் செல்வத்தை தொடர்ந்து இன்றும் அந்த சோழ காலத்தின் பாத்திரங்கள், சோழர் பெருமைகளை நாம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றோம். 

அந்த வகையில் சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை நடத்தும்  'வந்திய தேவனுடன் ஒரு பயணம்' மூலமாக, அதிலும் அவர் வாழ்ந்த இந்த தொண்டைமண்டத்தில் பல்வேறு குறிப்புகள், ஆதாரங்கள், கல்வெட்டுகள் ஆகியவைகளைப் பற்றி உலகத்திற்க்கு கொண்டு செல்ல இந்த பயணம் உதவிசெய்யும், என்று அமைச்சர் கூறினார். 

உலகத்தில் எந்த பகுதியிலும் தமிழ்நாட்டில் உள்ளது போன்ற வாழும் கலாச்சாரத்தை (Living Culture) பார்க்க இயலாது. தினந்தோறும் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான கலை, இலக்கிய, இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அடிப்படை கட்டமைப்பு செய்வது தவிர, இந்த நிகழ்வுகளை நாம் உலக சுற்றுலாத்துறை அமைப்புகளுடன் இனைந்து செயல்படக்கூடிய முயற்சியில்  முழுவேற்றி பெறவேண்டும்.  அதற்க்கு இந்த திட்டம் நிச்சயமாக உதவும். 

2000 ஆண்டுகளுக்கு முன்னரே சென்னை பெருநகரில் தமிழ் கலாச்சாரம், இலக்கியம், இசை ஆகியவை சீரும் செழிப்போடும் இயங்கி வந்தன என்பதற்கான ஆதாரங்களை  திரட்ட  இந்த அறக்கட்டளை எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. திருவள்ளுவர் 2050 ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை பெருநகரில் மயிலையில் தமிழ் தொண்டிற்கான  சிறப்பான பணியை மேற்கொண்டார் என்றால், அவருக்கு முன்னாலேயே தமிழ் மொழி கற்க, படிக்க. அதில் எழுத ஒரு Eco-system இருந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.  அவருக்கு தமிழில் படிக்க எழுத ஆசான்களும் பள்ளிகளும்  இருந்திருக்க வேண்டும்.  மதுரை தமிழ் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்  என இலக்கிய பதிவுகள் தெரிவிக்கின்றன, என்றார் அமைச்சர்.

சென்னை பெருநகர் மிகவும் பழமையான தொன்மையான நகரம் என்பது வரலாறு நமக்கு  காட்டுகிறது. சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், களப்பிரர்கள், ராஷ்டிரகூட, சாம்புவராயர்,  காடவராயர், யாதவராயர், தெலுங்கு சோழர்கள், விஜயநகர சாம்ராஜ்யத்தை சார்ந்தவர்கள் என சென்னை பெருநகரை கிட்டத்தட்ட 50 அரசர்கள் ஆண்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இலக்கியங்களிலும் சென்னை பெருநகரின் பல்வேறு பகுதிகள் ஐந்தாம் நூற்றாண்டு முதல் செழிப்போடு இருந்தனர் என்று ஆழ்வார்களும், நாயன்மார்களும் பதிவு செய்திருக்கின்றார்கள்.  1,000 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சோழர்கால கல்வெட்டுகள், அவர்களின் ஆட்சியில் நிறுவிய கல்வெட்டுகள் சென்னை பெருநகர் பகுதியிலும், வட தமிழ்நாடு எங்கும் இருக்கின்றன.   பழமையையும்,  நவீன தொழில் நுட்பமும் வழங்க இருக்கின்ற பல ஆச்சரியங்களுக்காக நாம் காத்திருப்போம்.

'வந்திய தேவனுடன் ஒரு பயணம்'  என்ற  இத்திட்டம் வெற்றிபெற வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று அமைச்சர் கூறினார். 

முன்னதாக, சென்னை ப்ளஸ் அறக்கட்டளை மற்றும் சென்னை நிருபர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஆர். ரங்கராஜ் 2056 ஆண்டுலகுகு முன் திருவள்ளுவர் சென்னை மயிலையில் பிறந்து, உலகத்திற்கு திருக்குறள் எனும் பொக்கிஷத்தை வழங்கினார் என்றும், எனவே சென்னை 2056 ஆண்டுளுக்கு முன்னரே இருந்த ஒரு நகரம் என்று தெரிகிறது என்று சுட்டிக்காட்டினார்.

கல்வெட்டு நிபுணர் முனைவர் எஸ். ராஜவேலு அவர்கள்  வந்திய தேவன் வட  தமிழ்நாட்டில் திருவல்லத்தில் பிறந்து, பல சாதனைகளை படைத்தார் என்றும், அவரைப் பற்றிய செய்திகளைத் திரட்ட இந்த சுற்றுலா பயணம் உதவும் என்று கூறினார்.  இந்த பயணத்தில் பிரம்மதேசம், திருமலைச்சேரி, மேல்பாடி மற்றும் திருவல்லம் கல்வெட்டுகளை பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் அங்கே 1500 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தமிழ் தேவாரப் பாடல்களை இந்த அறக்கட்டளை இசை குழுவினரின் உதவியோடு இசை நிகழ்ச்சிகளையும் வழங்கும் என்று திரு, ராஜவேலு தெரிவித்தார்.

இந்த துவக்க விழாவில்  பங்கேற்ற  சிக்கி நிறுவனத்தின் சார்பாக பேசிய திரு ஸ்ரீஹரன் பாலன், திரு ரத்னவேள்ராஜன், திரு எம். சோமசுந்தரம் ஆகியோர் 'வந்திய தேவனுடன் ஒரு பயணம்'  என்ற  இத்திட்டம் முதல் துவங்கும் என்று தெரிவித்தார்கள்.

இசை அமைப்பாளர் மற்றும் பாடகர், திரு சிம்மம் குமார், (சென்னை ப்ளஸ் அறக்கட்டளையின் துணைத்தலைவர்) விழா நினைவு பரிசுகளை அமைச்சர் அவர்களுக்கும், தமிழ் இசை கல்லூரி முதல்வர், முனைவர்,  மீனாட்சி ஜெயக்குமார் அவர்களுக்கும் வழங்கினார்.

****

Recent Posts

𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘔𝘦𝘥𝘪𝘢 𝘞𝘰𝘳𝘬𝘴 𝘱𝘳𝘦𝘴𝘦𝘯𝘵𝘦𝘥 𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘈𝘸𝘢𝘳𝘥𝘴 2024 𝘩𝘰𝘯𝘰𝘶𝘳𝘪𝘯𝘨 𝘊𝘪𝘯𝘦𝘮𝘢 𝘊𝘦𝘭𝘦𝘣𝘳𝘪𝘵𝘪𝘦𝘴, 𝘗𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘪𝘢𝘯𝘴 & 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳𝘴, 𝘋𝘰𝘤𝘵𝘰𝘳𝘴, 𝘐𝘈𝘚 & 𝘐𝘋𝘈𝘚 𝘖𝘧𝘧𝘪𝘤𝘦𝘳𝘴