புதிய கலோரி ஃப்ரீ சர்க்கரை வேளாண்மையில் புதிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய "ஸ்டீவியா உச்சி மாநாடு-2025"
சென்னை: நவீன யுகத்தில் தொழில்நுட்பத் துறையில் மட்டுமல்லாமல், நம் பாரம்பரிய வேளாண்மைத் துறையிலும் புதியதாக நிறைய வரவுகள் வந்துக்கொண்டே தான் இருக்கின்றன. அதில், ஒருசில மட்டுமே மாபெரும் புரட்சிக்கு வித்திடும். அந்தவகையில், தமிழகத்தில் முதல்முறையாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா ஆடிட்டோரியத்தில், வேளாண்மையில் புதிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய "ஸ்டீவியா உச்சி மாநாடு-2025" என்ற தலைப்பிலான கண்காட்சி மற்றும் மாநாடு அடுத்த மாதம் (ஜனவரி) 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
"இன்டர்நேஷனல் ஸ்டீவியா அக்ரிகல்சுரல் ரிசர்ச் டிரஸ்ட்" சார்பாக நடைபெறும் இந்த மாநாட்டில், "ஸ்டீவியா" என்னும் புதிய கலோரி ஃப்ரீ சர்க்கரை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த அமைப்பின் தலைமை நிர்வாகியான மதுரையை சேர்ந்த முத்துகிருஷ்ணன்.ஜெ அவர்கள் இந்த மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளார்.
Press meet Youtube Video link 👇
ஸ்டீவியா-னா என்னங்க?..
ஸ்டீவியா என்பதற்கான சரியான தமிழ் பெயர் "இனிப்பு துளசி" அல்லது "சீனி துளசி" என்று சொல்வார்கள். இந்த வகையான புதிய கலோரி ஃப்ரீ சர்க்கரை, ஸ்டீவியா என்ற செடியின் இலையில் இருந்து தயார் செய்யப்படுகிறது. இந்தச் செடியின் விதைகள் வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்டு, தமிழகத்தில் பயிர் செய்து இந்த புதிய கலோரி ஃப்ரீ சர்க்கரை உருவாக்கப்படுகிறது. தற்போது அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் அதிகமாக இது பயன்படுத்தப் படுகிறது. மேலும், ஸ்டீவியா உச்சிமாநாட்டில் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான தொழில் முனைவோர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இனி ஸ்டீவியா தான் எல்லாம்:-
வேளாண்மை சார்ந்த புது, புது விஷயங்கள்; விவசாயத்தில் இருக்கக்கூடிய தொழில் வாய்ப்புகள் என இப்படியே நம்ம நிறைய பார்த்துட்டோம்! இப்ப நம்ம கொஞ்சம் 'அப்டேட்" ஆகிக்கலாமா!.. இனி நம்ம சொல்லப்போவது "ஸ்டீவியா வேளாண்மை, ஸ்டீவியா சர்க்கரை, ஸ்டீவியா வேளாண்மைத் தொழில் வாய்ப்புகள்" என இப்படித்தான் இனி நம்ம சொல்ல போறோம்...
வெள்ளை சக்கரையை ஏன் குறைக்க வேண்டும்?
நாம் காலையில் எழுந்த உடன் குடிக்கும் டீ, காபி முதல், வகை - வகையான தின்பண்டங்கள், உணவு வகைகள் என அனைத்திலும் வெள்ளை சக்கரை நிறைந்துள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுவதால் முதுமை காலத்தில் நிறைய பிரச்னைகள் வரக்கூடும்.
தற்போது இளைஞர்களுக்கும் கூட வெள்ளை சர்க்கரையால், சர்க்கரை நோய் வர வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வகையான சக்கரையின் அளவை குறைத்துக் கொள்வது நல்லது என ஆயுர்வேதம் முதல் அலோபதி வரை அனைத்து மருத்துவர்களும் கூறும் ஆலோசனையாகும். அதற்கு மாற்றாக "ஸ்டீவியா" என்னும் புதிய வகை சர்க்கரை நம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஸ்டீவியா மூலம் கிடைக்கும் தொழில் வாய்ப்புகள்:-
இந்த ஸ்டீவியா மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் வேளாண்மையில் உள்ள ஸ்டீவியா தொழில் வாய்ப்புகள்; வேளாண்மை துறையில் ஸ்டீவியா மூலம் கிடைக்கப்பெறும் புதிய, புதிய விசயங்கள்; மேலும், "ஸ்டீவியா'' மூலம் நம் பாரம்பரிய உடல் ஆரோக்கியங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். தமிழகத்தில் "ஸ்டீவியா" மூலம் விவசாயம் முதல் வியாபாரம் வரை பல்வேறு தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது.
குறிப்பாக, வெள்ளை சக்கரை (சீனி) மூலம் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களும்; வெள்ளை சக்கரையை நம்பி தொழில் செய்பவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு புதிய தொழில் வாய்ப்புகளை சுலபமாக அறிந்துக்கொண்டு, அதனை பயன்படுத்தி அதிக லாபம் பார்க்கும் வாய்ப்பும் உள்ளது.
எனவே வேளாண்மைத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள்; வேளாண்மைத் துறையில் சாதிக்க வேண்டும் என்று முனைப்போடு இருப்பவர்கள்; விவசாயத்தில் வெற்றிக்கான நினைப்பவர்கள் இந்த ஸ்டீவியா உச்சி மாநாட்டை பயன்படுத்திக் கொள்ளுங்கள்... தவறவிடாதீர்கள் மக்களே!..
மேலும், மத்திய அரசின் "மேக்-இன் இந்தியா" திட்டத்தின் மூலம் இதை ஊக்கப்படுத்தி செயல்படுத்த உள்ளதாகவும், இதன் மூலம் ஒரு புதிய இனிப்பு புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று ஸ்டீவியா அமைப்பின் தலைமை நிர்வாகியும், இந்த மாபெரும் மாநாட்டின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மதுரையை சேர்ந்த முத்துகிருஷ்ணன். ஜெ அவர்கள் கூறியுள்ளார்.
மேலும், சீனிதுளசி - ஸ்டீவியா அமைப்பின் இணை நிறுவனரும், அமிர்தம் ஸ்வீட் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான ஏ.எஸ்.பாலசந்தர் அவர்களும், வேளாண்மை தோழனான "ஸ்டீவியா" அமைப்பின் துணை தலைவரான திரிவேணி பூஜா அவர்களும், "ஸ்டீவியா வேளாண்மை; ஸ்டீவியா சீனிதுளசி என இனியெங்கும் ஸ்டீவியா தான் என்றும்; வேளாண்மைத் துறையில் அடுத்தகட்டம் தான் ஸ்டீவியா என்றும், மாநாட்டிற்கு வாருங்கள் ஸ்டீவியா பற்றி முழுவதும் அறிந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
****