வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை


சென்னை, அக்டோபர் 15, 2024: தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை வடகிழக்கு பருவமழையை  எதிர்கொள்ளும்  வகையில் தீயணைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக அதன் மாவட்ட அலுவலர் திரு. ப. சரவணன் அவர்கள் இன்று அசோக்நகர் தீயணைப்பு (ம) மீட்புப்பணிகள் நிலையத்தில் நடைபெற்ற மீட்பு உபகரணங்கள் ( equipment display ) காட்சியின் போது தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழையை  எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை
அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 15.10.2024 மற்றும் 16.10.2024 ஆகிய நாட்களில் கன மழை மற்றும் அதிக கன மழை என அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு தீயணைப்பு (ம) மீட்புப்பணிகள் துறை இயக்குநர் அறிவுரையின்படி, தமிழ்நாடு தீயணைப்பு (ம) மீட்புப்பணிகள் துறை இணை இயக்குநர் உத்தரவின்படி, தென்சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் வகையில்  மாவட்ட அலுவலர், திரு. ப. சரவணன் அவர்கள் மேற்பார்வையில் சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ வீரர்கள் 22 பேருடன் உதவி மாவட்ட அலுவலர் திரு. ரா. சூரியபிரகாஷ் தலைமையின்கீழ் கொண்ட தென்சென்னை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு அதிகமாக ஏற்படும் குழுவும் பள்ளிக்கரணை, ராம்நகர் ஆகிய இடங்களில் நிலைய அலுவலர் வேளச்சேரி தலைமையின்கீழ் ஒரு குழுவும், பெரும்பாக்கம்,குளோபல் மருத்துவமனை ஆகிய இடங்களில் நிலைய அலுவலர் மேடவாக்கம் தலைமையின்கீழ் ஒரு குழுவும், தாம்பரம் முடிச்சூர்,சிடிஒ காலணி மற்றும் பீர்கன்கரணை ஆகிய இடங்களில் நிலைய அலுவலர் தாம்பரம் தலைமையின்கீழ் இரண்டு குழுவும் 24 நேரமும் தயார் நிலையில் உள்ளனர். 

Press meet Youtube Video 👇 

மேலும், அசோக்நகர், கிண்டி, சைதாப்பேட்டை, தி. நகர், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவான்மீயூர், துரைபாக்கம் மற்றும் ராஜ்பவன் ஆகிய நிலையங்களில் நிலைய அலுவலர்கள் தலைமையில்கீழ் தீயணைப்பு வீரர்கள் 24 நேரமும் தயார் நிலையில் உள்ளனர். தென்சென்னை மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் புயல் காலங்களில் பொதுமக்களை மீட்ப்பதற்கு தென்சென்னை மாவட்டத்தில் ரப்பர் படகுடன் மோட்டார் - 11, நீரை இறைக்கும் பம்ப் - 17, மரம் அறுக்கும் கருவி -11, முதலுதவி பெட்டி -20, ஜென்ரெட்டர் - 3, லைப்பாய் -159, லைப் ஜாக்கெட்-166,கயிறு 43 ஆகிய மீட்பு உபகரணங்களுடன் 24 நேரமும் தயார் நிலையில் உள்ளன.

****

Recent Posts