தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு தெலுகு சமுதாய அமைப்புகள் & தமிழ்நாடு நாயுடு ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை
சென்னை, ஆகஸ்ட் 13, 2024: தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு தெலுகு சமுதாய அமைப்புகள் பொதுச்செயலாளர் மற்றம் தமிழ்நாடு நாயுடு ஐக்கிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வ.அனந்தராமன் தலைமையில் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அவருடன் அச்சுதய்யா (தலைவர் கம்ம நாயுடு ஜனசங்கம்), S.மனோகர் (தமிழ்நாடு பலிஜா சங்கம்), ராமதாஸ் (ஜங்கம் நல முன்னேற்ற சங்கம்), சுப்பிரமணியம் (அருந்ததியர் சங்கம்), ராமசாமி (செயலாளர் தெலுகு சம்மேளனம்), ஜெயராமன் (தலைவர் கம்மவார் நாயுடு கூட்டமைப்பு), ராதாகிருஷ்ணன் (வீரபாண்டிய கட்டபொம்மன் பேரவை), ராமதாஸ் (ஆதி ஆந்திர அருந்ததியர் கூட்டமைப்பு), மோகன் குமாரமங்கலம் (அமைப்பு செயலாளர் கம்மநாயுடு எழுச்சி பேரவை), பி எம் விஜயகுமார் (சென்னை மாவட்ட செயலாளர், , நாகபுஷணம் (ஆதி ஆந்திர நல சங்கம்) முரளி (ரெட்டியார் சங்கம்), பாலு (அருந்ததியர் நல சங்கம்), தாமேதரன் (கம்ம நாயுடு சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
YouTube video link 👇
அப்போது அவர்கள் பேசியதாவது:
- தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் விகிதாச்சாரப்படி இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும்.
- மத்திய அரசு அறிவித்த E.W.S. இட ஒதுக்கீட்டைதமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.
- தெலுகு மொழி சிறுபான்மை சான்றிதழ் பெறுவதில் தமிழக அரசின் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் பல்வேறு மாவட்ட தாசில்தார்கள் வேண்டுமென்றே இடைஞ்சல் தருகின்றனர்.
- மூன்று வருடத்திற்கு மேல் முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு பல்வேறு வகையில் முயற்சித்தும் கடிதம் எழுதியும் சந்திக்க நேரமே ஒதுக்கவில்லை.
- தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் என்றால் என்ன என்று அரசுக்கே புரியாத குழப்பமான ஒரு நிலையில் உள்ளது. அதில் மத சிறுபான்மை மக்கள் கடந்த முறையும், இந்த முறையும் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த காலங்களில் தெலுகு மொழி சிறுபான்மையினர் அதில் பொறுப்பை வகித்துள்ளனர். இந்த அரசு பதவி ஏற்றவுடன் அந்த சிறுபான்மை ஆணையத்தில் நான்கு மொழி சிறுபான்மையினரை உறுப்பினராக ஆக்குவோம் என்று மாண்புமிகு முத்வர் அவர்கள் 2 1/2 ஆண்டுக்கு முன்னால் அறிவித்தார். ஆனால் இந்த ஆட்சியில் இரண்டாவது முறையாக சிறுபான்மை ஆணையத்தில் உறுப்பினர்களாக மத சிறுபான்மையினர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்கள். வழக்கம்போல் மொழி சிறுபான்மை மக்களை புறக்கணித்துள்ளார். மொழி சிறுபான்மை மக்களை அந்த துறையின் அமைச்சருக்கோ அல்லது அரசுக்கோ நினைவோ அக்கறையோ இல்லை என்பதை இந்தசெயல் காட்டுகிறது.
- கடந்த அதிமுக ஆட்சியில் 2021 ஜனவரி TALMEDCO என்ற ஒரு அமைப்பை மொழி சிறுபான்மை மக்களுக்காக சட்ட சபையில் அதிமுக அரசால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பதவியேற்ற திமுக அரசு அதனை கிடப்பில் போட்டுவிட்டது. சிறுபான்மை ஆணையத்தை மத சிறுபான்மை ஆணையம், மொழி சிறுபான்மை ஆணையம் என்று ஏற்படுத்த வேண்டும் அல்லது TALMEDCO அமைப்பை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். காலம் கடத்தி, செய்யாமல் இருப்பது மொழி சிறுபான்மை மக்களை கேவல படுத்துவது போல் ஆகும்.
- ராணி மங்கம்மாள் பெயரை தமுக்கம் மைதானத்திற்கு ஆண்டாண்டு காலமாக கோரிக்கை வைத்தும் அரசின் காதுகளில் விழவில்லை
- சட்டமன்றத்தில் கிட்டதட்ட 24 தெலுகு மொழி சிறுபான்மை இனத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அவர்களால் ஒரு நன்மையும் பயக்கவில்லை. தமிழகத்தில் இருக்கும் கோயில்களில் தெலுகு மொழி சிறுபான்மை மக்களை அறங்காவலகளாக நியமனம் செய்யவில்லை. அதற்கு பரிந்துரைத்தும் இதுவரை அத்துறை வாய் பேசாத செயல்படாத துறையாக உள்ளது.
- இம்மண்ணின் மைந்தர்களாக வாழும் தெலுகு மொழி சிறுபான்மையினரை சில தமிழ் தேசிய கட்சிகள் குறிப்பாக திரு.சீமான் போன்றோர் தெலுகு மக்கள் வந்தேரிகள். ஆந்திராவுக்கு செல்லுங்கள் என்று வன்ம விதையை விதைத்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல ஈரோட்டில் அருந்ததிய இன மக்கள் வந்தேறிகள் அவர்கள் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பிரிவினை வாதத்தை ஏற்படுத்திய பொழுது திமுக அரசும் மற்ற அரசியல் கட்சிகளும் இது தவறு என்று யாருமே சொல்லாதது வியப்பாக இருந்தது. இந்திய அரசியல் சாசன சட்டத்தின் படி யாரும் எங்கு வேண்டுமானாலும் வாழலாம் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற உரிமையை வழங்கி உள்ளது. அதை இந்த அரசாங்கம் நடுநிலையோடு செயல்படதக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதைப்பற்றி எல்லாம் மாண்புமிகு முதல்வர். தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் போன்றவர்களுக்கு கடிதம் அளித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி என்றால் இந்த தெலுகு மொழி சிறுபான்மையினரை நீங்கள் தமிழ்நாட்டின் குடிமக்களாக கருதவில்லை. இன்றைக்கு தமிழகத்தில் கிட்டதட்ட 30% சதவீதம் தெலுகு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வாக்கு வங்கி என்று வரும் பொழுது தெலுகு ஜாதியை சொல்லி வாக்களிக்க வேண்டுகின்றனர். எத்தனை காலம் தான் இந்த கேவலமான சூழ்நிலையில் வாழ்வது. மூன்றாம் தர குடிமக்களாக மானமற்று வாழ்வது. தமிழக அரசு செய்யும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டோம். ஆதலின் நாங்கள் அரசியல் சாசன சட்டப்படி எங்களுடைய கோரிக்கைகளை நீதித்துறை மூலமாகவும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தெலுகு மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரம் பெற முடிவு செய்து உள்ளோம்.
****