இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (UCPI MK) வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரிக்க முடிவு
சென்னை பிரஸ் கிளப்பில் 05.03.2024 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு மாநில செயலாளர் எஸ் பாஸ்கரன் பேசியதாவது. கடந்த இரண்டாம் தேதி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு நடைபெற்றது
மாநாட்டில் கட்சியுடன் பெயரை சிறு மாற்றம் செய்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி என்று அழைப்பது எனவும் தேர்தல் ஆணையத்தில் இது ஒரு புதிய கட்சியாக பதிவு செய்வதென முடிவெடுக்கப்பட்டது. மேலும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
---------------------------------------------------
Press meet youtube video link 👇
---------------------------------------------------
மாநாட்டில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் மதத்தால் ஜாதியால் நாங்கள் வேறுபட்டு இருந்தாலும் மனதால் ஒன்றுபட்டவர்கள் என பண்பட்டு வாழும் இந்திய மக்களை மதவெறி ஊட்டி பிரிக்க முயலும் ஆர்எஸ்எஸ், பிஜேபியின் பாசிச மோடி அரசாங்கத்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவது தான் இந்திய மக்கள் மீது மீண்டும் ஜனநாயகம் காற்றை சுவாசிப்பதற்காகவே ஒரே வழி என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்து இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம், வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக மற்றும் ஏனைய ஜனநாயக கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியை எந்த ஒரு நிபந்தனையும் இன்றி ஆதரிப்பது என இம்மானாடு முடிவு செய்துள்ளது
மோடிக்கு எதிராக இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவது என்று இந்தியா கூட்டணிக்கு பலம் சேர்க்கும் எனவும் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
****