பேக்கி டெர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் புத்தக வெளியிட்டு விழா
சென்னை: நவம்பர் 14 சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு, சிறுவர்களுக்காக, எழுதிய 14 கதை தொகுப்புகள், பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்தாரால் நவம்பர்16 ம் தேதி சக்தி குழுமத்தின் சங்கமத்தில் வெளியிடப்பட்டது.
பேக்கிடேர்ம் டேல்ஸ் இயக்குனர் உமா அபர்ணா |
இவர்கள் படைப்புகளான:
படைப்புகள் 1: கதம்பவனம், ஆத்திச்சூடி கதைகள், சுட்டும் விழிச்சுடரே, இப்படிக்கு
(மேல் வரிசை) வனஜா முத்துக் கிருஷ்ணன், ருக்மணி வெங்கட்ராமன், உஷா கண்ணன் (நடு வரிசை) உமா ஸ்வாமிநாதன், ராஜேஸ்வரி ஐயர் (கீழ் வரிசை) சுஜாதா கணேஷ், ஜெயந்தி பத்ரி, பத்மா ராகவன், |
படைப்புகள் 2: தொடுவானம், வாக்கினிலே இனிமை வேண்டும், நலம் நலமறிய ஆவல்
(மேல் வரிசை) மேல்மங்கலம். வி. சியாமளா, சுபஶ்ரீ ரவிச்சந்திரன், வசந்தி ஜெனார்த்தனன்,(கீழ் வரிசை) மாதங்கி சுரேஷ், பிரபாவதி கிரி, காயத்ரி, பார்வதி நாகமணி |
கதைகள் மூலமாக சிறந்த அறிவுரைகள், கருத்துக்கள், நீதிகள், குழந்தைகளை சென்று அடையவேண்டும் என்ற பேக்கி டெர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் முயற்சி பாராட்டத் தக்கது.
"உயிர்களிடத்தில் அன்பு வேணும்; தெய்வம் -உண்மையென்று தானறிதல் வேணும்; வயிர முடைய நெஞ்சு வேணும் -இது வாழும் முறைமையடி பாப்பா " என்று முண்டாசு கவி பாரதி சொன்னது போல், குழந்தைகளுக்கு வாழும் நெறி முறையை வலியுறுத்தி எழுதப்பட்ட கதைகள் ஒவ்வொன்றும் ஒரு ரத்தினம்..
"கனவு மெய் பட வேண்டும் " என்று ஆசைப்பட்ட டாக்டர் கலாம் அவர்களின் கனவை முடிந்த வரை நனவாக்க, நினைத்த பேக்கிடேர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
புத்தகங்கள் வெளியிடுவது அல்லாமல், அநேகரை சென்று அடைய வேண்டும் என்ற வேண்டுகோளுடன், உமா அபர்ணா நன்றி கூற, விழா இனிதே முடிவடைந்தது.
****