தமிழக அரசு அறிவித்த புதிய பாலினம்; இடைலிங்க (Intersex) மனிதர்களின் குரல் !!!


தமிழகத்தில் முதல் நபராக இடையினம் என அடையாள அட்டை பெற்றுள்ளார் எஸ் ஆர் சக்கரவர்த்தி தமிழக அரசு இதுவரை திருநர் சமூகத்திற்கு திருநங்கை திருநம்பி என அடையாள அட்டை வழங்கி வந்த நிலையில் இப்போது இடையினம் என ஒரு பாலினத்தை அறிவித்து அடையாள அட்டை வழங்கியுள்ளது . சைதாப்பேட்டையில் இயங்கி வரும் தா அலுவலகம் தமிழ்நாடு அரவாணிகள் அசோசியேஷன் மூலமாக இந்த அடையாள அட்டையை பெற்றுள்ளார் சக்கரவர்த்தி.

(3rd from left) எஸ் ஆர் சக்கரவர்த்தி (எஸ் ஆர் சி)

எஸ் ஆர் சக்கரவர்த்தி (எஸ் ஆர் சி) தொகுப்பாளர், நடிகர், மக்கள் பணியாளர் என பன்முகத்தன்மை கொண்ட சக்கரவர்த்தி சன் டிவியில் ஒளிபரப்பான பொன்னூஞ்சல், சந்திரலேகா, ரோஜா, போன்ற 25க்கும் மேற்பட்ட சீரியல்கள், 2000 ஆயிரம் நிகழ்ச்சிகள் 22 ஆண்டுகளாக தொகுப்பாளராக நிறைய தொலைக்காட்சிகளில் பணிபுரிந்துள்ளார். இதைத் தாண்டி அவர் வாழ்வு நிறைய கற்களும் முற்களும் வலிகளும் நிறைந்ததாகும். ஆண் பெண் திருநங்கை மட்டுமே நான் கேள்விப்பட்டிருப்போம் அதைத் தாண்டி இவ்வுலகில் intersex  இடைலிங்க பாலின மக்கள் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்!!! இதை ஊடு பாலினம் என்றும் கூறுவார்கள் . 

ஆம்  இடைலிங்க பாலினத்தை சார்ந்த திரு சக்கரவர்த்தி தமிழகத்தில் முதல் மனிதராக  முன்வந்து தன்னை வெளிப்படுத்தி இவ்வுலகில் இடைலிங்க பாலினத்தை சார்ந்த மக்களாகிய நாங்களும்  வாழ்கின்றோம் எங்களுக்கும் இவ்வுலகில் சக மனிதர்களுக்கு கிடைக்கக்கூடிய அத்தனை அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என விழிப்புணர்வு செய்து வருகிறார். தமிழகத்தில் 25 ஆயிரம் இடைலிங்க மனிதர்களும் , உலகெங்கிலும் இரண்டு கோடி இடைலிங்க மனிதர்களும் இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. இதைத் தாண்டி இவ்வுலகில் 60க்கும் மேற்பட்ட பாலினங்கள் இருப்பது இப்பொழுதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்களுக்கு தெரிய வருகிறது ஆண் பெண் திருநங்கையை தாண்டி இப்பொழுதுதான் இடைலிங்க மனிதர்கள் வெளியே வரத் தொடங்கியுள்ளார்கள்

சரி இடை லிங்க மனிதர்கள் பற்றிய ஒரு சிறு விபரம்.

முதலில் இதைப் பற்றி தெரிந்தவருக்கு ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் சேர்ந்து பெருக்க கூடிய மனிதர்கள் மட்டுமே இடைலிங்க பாலினத்தை சார்ந்தவர்கள் என்று கூறுவார்கள் , ஆனால் இதில் 70 வகைகள் இருப்பதாக கூறுகிறார்கள் சக்கரவர்த்தி தான் உள்ளுறுப்பு கொண்டு பிறந்த இடைலிங்க பாலினத்தை சார்ந்தவர் என்றும் தான் பிறக்கும் போது ஒரு ஆண் குழந்தையாக  பிறந்ததாகவும் பத்தரை வயது இருக்கும்போது ஆணுறுப்பு வழியே மாதவிடாய் வரத் தொடங்கியதாக கூறுகிறார் ஆம் ஒரு ஆணிற்கு ஆணுறுப்பு வழியே இரத்தப்போக்கு வருவதை பார்த்த பெற்றோர்கள் பதறிப் போய் மருத்துவரிடம் சென்ற பிறகு தான் அவருக்கு வருவது  மாதவிடாய் என தெரிய வந்தது . 

அப்படியே சென்று கொண்டிருக்க 12 வயதில் அவருக்கு விந்தணுக்களும் வெளியாகின அப்போது தான் தெரிந்தது அவர் உடலில் ஆண் பெண்ணுக்கான இரண்டு செயல்பாடுகளும் செயல்படுகின்றன அவரின் குரோமோசோம் பரிசோதனை செய்த பிறகு 46xxMale என தெரிய வந்ததாக கூறுகிறார் , அந்த சின்னஞ்சிறு வயதில் பக்குவம் இல்லாததால் உடன்படிக்கும் மாணவரிடம் அதைப் தனக்கு ஏற்பட்ட ரத்தப்போக்கை மாதவிடாய் பற்றி தெரிவித்த போது அது அப்படியே பள்ளி முழுக்க , ஊர் முழுக்க பரவி சொல்லிலா துயரங்களை கடந்து பின்பு சென்னை வந்து தொகுப்பாளராக , நடிகராக தனக்கென ஒரு முத்திரை பதித்து தான் யார் என்பதை உணர்ந்து இன்று அடுத்த தலைமுறை தான் மேற்கொண்ட இன்னல்களை எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக விழிப்புணர்வு செய்வதோடு மட்டுமல்லாமல் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து ஆறு கோரிக்கைகள் வைத்து மனுவும் கொடுத்திருக்கிறார். 

அதில் முக்கியமாக பள்ளியிலேயே ஐந்தாம் வகுப்பில் பாலினம் சம்பந்தமான பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் , பள்ளி தொடங்கி எல்லா இடங்களிலும் மூன்று கழிப்பறைகள் கொண்டு வர வேண்டும் என தனது மனுவில் கூறி இருக்கிறார். ஏனென்றால் இன்று ஆண் பெண்ணை தாண்டி திருநங்கை திருநம்பி இடையிலிங்க பாலினத்தை சார்ந்தவர்களும் வெளியே வர தொடங்கியுள்ளார்கள் ஆகவே அந்த மூன்றாவது கழிப்பறைகளை தேவை உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் வாழ்க்கையில் மனிதனுக்கு முக்கியமான தேவைகளில் கழிப்பறியும் ஒன்று அது இல்லாமல் ஆண் பெண்ணை தாண்டி தன்னை இருக்கக்கூடிய பாலினத்தை சேர்ந்தவர்கள் அனுபவிக்கும் வேதனையை உணர்ந்து அரசிடம் முக்கியமான கோரிக்கையில் ஒன்றாக மூன்றாவது கழிப்பறை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். 

உடல் ரீதியான நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்ட சக்கரவர்த்தி ஒரு கட்டத்தில் தனது கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் நீக்கி உள்ளார் பிறகு இன்னும் உடல்ரீதியான பிரச்சினைகள் அதிகமாக இதுவரை மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து அதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்றுவரை மீள முடியாத சூழலிலும் தனது விழிப்புணர்வை செய்து வருகிறார்.  

வரும் காலங்களில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வு செழிக்க சக மனிதர்களாகிய நாம் அவர்களை வித்தியாசமாக பார்க்காமல் நம்மைப் போன்று அவர்களும் சக பாலினத்தவரே என்ற எண்ணத்தோடு அரவணைத்தோம் என்றால் அவர்களுக்கும் சாமானிய மனிதர்களைப் போல் வாழ முடியும்.

****

Recent Posts

𝘌𝘢𝘳𝘵𝘩𝘦𝘯 𝘚𝘱𝘢𝘤𝘦𝘴 & 𝘚𝘶𝘨𝘢𝘭 𝘎𝘳𝘰𝘶𝘱 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘪𝘵𝘴 𝘧𝘭𝘢𝘨𝘴𝘩𝘪𝘱 𝘎𝘢𝘵𝘦𝘥 𝘝𝘪𝘭𝘭𝘢 𝘗𝘭𝘰𝘵𝘴 𝘢𝘵 𝘒𝘦𝘭𝘢𝘮𝘣𝘢𝘬𝘬𝘢𝘮; 𝘉𝘶𝘪𝘭𝘥𝘪𝘯𝘨 𝘢 𝘓𝘦𝘨𝘢𝘤𝘺 𝘪𝘯 𝘔𝘰𝘥𝘦𝘳𝘯 𝘙𝘦𝘢𝘭 𝘌𝘴𝘵𝘢𝘵𝘦

𝘋𝘢𝘪𝘮𝘭𝘦𝘳 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘈𝘭𝘭 𝘕𝘦𝘸 𝘉𝘩𝘢𝘳𝘢𝘵 𝘉𝘦𝘯𝘻 𝘏𝘟 & 𝘛𝘖𝘙𝘘𝘚𝘏𝘐𝘍𝘛 𝘊𝘰𝘯𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘪𝘰𝘯 & 𝘔𝘪𝘯𝘪𝘯𝘨 𝘊𝘰𝘮𝘮𝘦𝘳𝘤𝘪𝘢𝘭 𝘛𝘳𝘶𝘤𝘬𝘴 𝘵𝘰 𝘗𝘰𝘸𝘦𝘳 𝘐𝘯𝘥𝘪𝘢'𝘴 𝘐𝘯𝘧𝘳𝘢𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘶𝘳𝘦 𝘉𝘰𝘰𝘮