தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலசங்கம் மீது பரவும் போலியான தகவலை தடுக்க கோரிக்கை


சென்னை, மார்ச் 13, 2023: தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலசங்கம் மீது சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள பரவி வரும் நிலையில்  சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அதற்கான விளக்கம் அளித்தார். அவருடன் மற்ற நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Press meet video link👇👇

அப்போது அவர் கூறியதாவது, நான்  தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவன தலைவராக சேவையாற்றிக் கொண்டிருக்கிறேன். எங்களின் இச்சங்கமானது கடந்த 13 வருடங்களாக சென்னை நுங்கம்பாக்கத்தை தலைமை இடமாகக் கொண்டு அரசுக்கும் தொழிலாளர்களின் கோரிக்கையை அரசுக்கு கொண்டு செல்லும் ஒரு பாலமாகவே திகழ்கிறது. மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் தொழிலாளர்களுக்கான அரசு சார்ந்த அறிவிப்புகளையும் வெளியிடுவதற்காகவே தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்களின் நல சங்கத்தின் சார்பாக "Labour Talk" என்னும் மாதம் இரு முறை இதழினை தொடங்கி தொழிலாளர்களின் குரலாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தற்போது தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் பெயரைக் கொண்டு சமூக வலைத்தளங்களில் 2021 ஆம் ஆண்டு முதல் பேட்ஜ் வைத்திருக்கும் வாகன ஓட்டுநர்கள் அதற்கான தகுந்த ஆவணங்களை அருகிலுள்ள நிர்வாக அலுவலர்கள் அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவர்களது வங்கிக் கணக்கில் ரூபாய் 1000/- நிவாரணத் தொகை செலுத்தப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது என்ற போலியான மற்றும் உண்மைக்கு புறம்பான செய்தியை நாங்கள் கேட்டறிந்தோம்.

அதற்கு விளக்கம் தரும் வகையில் இது முற்றிலும் போலியான தவறான செய்தி என்று நாங்கள் (15-6-2021) அன்றே எங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து அதற்கான மறுப்பை தெரிவித்திருந்தோம்.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் E3 மீஞ்சூர் காவல் நிலையத்திலிருந்து தொலைபேசி வாயிலாக எங்களை தொடர்பு கொண்டு மேலே குறிப்பிட்டுள்ள பொய்யான செய்தியை கொண்டு எங்கள் மேல் மீஞ்சூரை சார்ந்த தனிநபர் ஒருவர் எங்களின் சங்கத்தின் மீது புகார் அளித்ததாக காவல் நிலையத்திலிருந்து அணுகினார்கள். நாங்கள் உடனடியாக எங்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகரின் மூலமாக காவல் நிலையத்திற்கு நேரில் சென்று உரிய விளக்கம் மற்றும் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து வழக்கை முடித்துக் கொண்டோம்.

ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் இவ்வாறான போலியான மற்றும் நம்பகத் தன்மையற்ற தகவல்களை சில சமூக விரோதிகளால் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து (08-03-2023) அன்று அயனாவரம் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.மாதவன் அவர்களுடன் அயனாவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர். திரு ஸ்ரீனிவாசன் அவர்களும் எங்கள் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து விளக்கத்தை கேட்டறிந்தார். அதற்கான தகுந்த விளக்கத்தை தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சட்ட ஆலோசகர் வாயிலாக விளக்கம் அளிக்கப்பட்டு அதற்கான உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக. மேலும் இதுபோன்ற தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவாமல் இருக்க சென்னை நுங்கம்பாக்கம் F3 காவல் நிலையத்தில் தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற போலியான தகவல்களை பொதுமக்களும் வாகன ஓட்டுனர்களும் மற்றும் அனைத்து துறை சார்ந்த தொழிலாளர்களும் நம்ப வேண்டாம் என்பதை என்பதை வலியுறுத்தும் விதமாகவே இன்று இந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

மீண்டும் ஒருமுறை இப்ப பத்திரிக்கையாளர் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் எங்கள் சங்கத்தின் பெயரில் சமூக வலைதளங்களில் பரவி வரும் போலியான தகவல்களுக்கும் தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் பொதுமக்களும் வாகன ஓட்டுநர்களும் அனைத்து தொழிலாளர்களும் இப்போலியான செய்தியை நம்ப வேண்டாம் என்று சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாக கூறினார்.

****


Recent Posts