திராவிட மாடல் அரசு பதிவுத் துறைக்கு எதிராக செயல்படுகிறது: FAIRA கூட்டமைப்பு குற்றச்சாட்டு


சென்னை: அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) ஏழாவது தேசிய மற்றும் மாநில குழு பொறுப்பாளர்கள் தேர்தல் கடந்த 2023 நவம்பர் 27 இல் ஜனநாயக அடிப்படையில் நடைபெற்றது.

Press meet video link 👇 

இந்த தேர்தலில் தேசிய குழு தலைவராக டாக்டர் ஆ.ஹென்றி அவர்களும், பொதுச் செயலாளராக நேரு நகர் நந்து அவர்களும், முதன்மைச் செயலாளராக கிங் மேக்கர்ஸ் ராஜசேகர் அவர்களும், செயல் செயலாளர் செந்தில்குமார் அவர்களும், நிர்வாக செயலாளராக ஜெயச்சந்திரன் அவர்களும், பொருளாளராக சிகரம் சந்திரசேகர் அவர்களும், செயற்குழு தலைவராக பிரசன்னகுமார் அவர்களும். ஆலோசனைக் குழு தலைவராக வினோத் சிங் ரத்தோர் அவர்களும், துணைத் தலைவர்களாக ஜவகர் அவர்களும், கிருஷ்ணகுமார் அவர்களும், அமைப்புச் செயலாளர்களாக தமிழரசன் அவர்களும், மகேந்திரன் அவர்களும், ஒருங்கிணைப்பாளர்களாக லூர்துராஜ் பிரேம் அவர்களும், வெங்கட்ராஜ் அவர்களும், இணைச் செயலாளர்களாக பாலசுப்பிரமணி அவர்களும், நரேஷ் சந்த் ஜெயின் அவர்களும், துணைச் செயலாளராக ஜெய்சங்கர் அவர்களும், பாலசண்முகம் அவர்களும்,

செயற்குழு உறுப்பினர்களாக மும்பை ரஞ்சித்குமார், ஹைதராபாத் மகேஷ்குமார். கேரளா வில்சன் பி தாமஸ், E.பாபு, A.கருப்பசாமி. V.P. விஜி. R. சீனிவாசன் ஆகியோர்களும், ஆலோசனை குழு உறுப்பினர்களாக SCP.தனபால், PROPSHELL ஜெயராமன், ஐ.அசோக்குமார், முனவர் ஹூசைன், கருப்பசாமி என்கிற ராஜா, B.நிவாஸ் ஆகியோர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று மாநில அளவில் லே-அவுட் புரமோட்டர்ஸ் குழுவிற்கு தலைவராக G சிவகுமார் அவர்களும், பொதுச் செயலாளராக ராஜா பக்ருதீன் அலி அகமது அவர்களும், செயல் செயலாளராக k. கிளமெண்ட் ரோசாரியோ அவர்களும்,

நிர்வாகச் செயலாளராக S.பாலாஜி அவர்களும், பொருளாளராக S.B.ரவி அவர்களும், செயற்குழு தலைவராக தக்ஷிணாமூர்த்தி அவர்களும், ஆலோசனை குழு தலைவராக M செல்வகுமார் அவர்களும், துணைத் தலைவர்களாக தியாகராஜன் அவர்களும், செல்லப்பெருமாள் அவர்களும், அமைப்புச் செயலாளர்களாக உமாமகேஷ் அவர்களும், ஹலீல் பாய்ஸ் அவர்களும், ஒருங்கிணைப்பாளர்களாக ருனானா அவர்களும், பிரியாகாந்தன் அவர்களும், இணைச்செயலாளர்களாக முத்தையா அவர்களும், கலைவாணன் அவர்கள், துணைச் செயலாளராக கோபிநாத் அவர்களும், மாறன் அவர்களும், செயற்குழு உறுப்பினர்களாக சுரேஷ், ஜெய்சங்கர், ராஜா முஹம்மது, முத்துராமன், விஸ்வநாதன், முனீஸ்வரன், முருகப்பன் ஆகியோர்களும்,

ஆலோசனை குழு உறுப்பினர்களாக ராகவன், தாசன்,சுதாகர், சுந்தரபாண்டிய ராஜா, லோகேஷ், பாலகிருஷ்ணன், ஏழுமலை ஆகியோர்களும் பில்டர்ஸ் மற்றும் புரமோட்டர்ஸ் குழுவிற்கு மாநில தலைவராக கண்ணன் நந்தகுமார் அவர்களும். பொதுச் செயலாளராக உதயகுமார் அவர்களும், செயல் செயலாளராக சக்திவேல் அவர்களும், நிர்வாகச் செயலாளராக கார்த்திக் அவர்களும், பொருளாளராக கமலஹாசன் அவர்களும், செயற்குழு தலைவராக காளியப்பன் அவர்களும், ஆலோசனை குழு தலைவராக ஷ்யாம் கார்த்திக் அவர்களும், துணைத் தலைவர்களாக ராமநாதன் அவர்களும், சாமிநாதன் அவர்களும், அமைப்புச் செயலாளராக கார்மேகம் அவர்களும், சுரேந்தர்ராஜ் அவர்களும், ஒருங்கிணைப்பாளர்களாக பாஸ்கரன் அவர்களும், கணேஷ்குமார் அவர்களும், இணைச் செயலாளராக விஜயபாரதி அவர்களும், ராம்காந்த் அவர்களும், துணைச் செயலாளராக நாகராஜன் அவர்களும், சிந்து ராமமூர்த்தி அவர்களும், செயற்குழு உறுப்பினர்களாக திம்மராஜா, மஞ்சுநாத், தினகரன், ராமசாமி, கார்த்திக், முரளி ஆகியோர்களும், ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக கோபாலகிருஷ்ணன். யோகானந்தன்,யுவராஜ், லலித்குமார் ஜெயின், திலோக்சந்த் ஜெயின் ஆகியோர்களும்..

ஆர்கிடெக்ட் மற்றும் இன்ஜினியர் குழுவிற்கு தலைவராக பாலசுப்ரமணி அவர்களும், செயலாளராக மோகன் அவர்களும், பொருளாளராக சுரேஷ்குமார் அவர்களும், துணைத் தலைவராக B. மோகன்குமார் அவர்களும், அமைப்புச் செயலாளராக R.ஹரிகிருஷ்ணன் அவர்களும், ஒருங்கிணைப்பாளராக வெங்கடேஷ் அவர்களும், இணைச்செயலாளர்களாக சம்பத் அவர்களும், ஸ்ரீ முரளி அவர்களும், துணை செயலாளராக கார்த்திக் அவர்களும், ஷபியுல்லா அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பாண்டிச்சேரி மாநில குழுவிற்கு தலைவராக அன்பரசு அவர்களும், செயலாளராக முத்துக்குமரன் அவர்களும், பொருளாளராக கோபாலகிருஷ்ணன் அவர்களும், துணைத் தலைவராக ஆனந்தகிருஷ்ணன் அவர்களும், இணைச் செயலாளராக பரஞ்சோதி பாண்டியன் அவர்களும், தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஏழாவது குழுவிற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் மைய மற்றும் மாநில அரசுகளிடம் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் ஏதுவான திட்டங்களை கொண்டு வந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு முன்னெடுப்பார்கள்.

தற்பொழுது தமிழ்நாடு பதிவுத்துறை தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்கிற அளவிற்கு ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறது. அரசுக்கு பெருமளவில் வருவாயை ஈட்டி தரும் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் தொழிலை முன்னெடுக்கும் தொழில் முனைவோர்கள் ஆகிய நாங்கள் எல்லாம் சாதாரண பதிவாளர்கள் முன் ஏசகக்காரர்கள் போல் நடத்தப்படுகிறோம். 

மக்கள் நலனில் பதிவுத்துறை துளியும் அக்கறை செலுத்துவதில்லை. மாறாக நிலங்களின் மீதான அரசு வழிகாட்டி மதிப்பினை வின்னை முட்டும் அளவிற்கு கண்ணை கட்டும் அளவிற்கு தன் இஷ்டம் போல பதிவுத்துறை நாளும் உயர்த்தி வருகிறது.

குறிப்பாக கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இன்று வரை பன்மடங்கு வழிகாட்டி மதிப்பினை சந்தை மதிப்பை விட கூடுதலாக உயர்த்தி இருக்கிறது. தனது வாழ்நாளில் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான சொந்த இல்லத்தினை முதன் முதலில் புதிதாக வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவினை இது களைய வைத்திருக்கிறது.

மேற்படி முரண்பாடு உள்ள வழிகாட்டி மதிப்பினை களைவதற்கு குறைவு முத்திரை தீர்வை பிரிவு 47/ஏ1 என்ற சட்டப்பிரிவு வழி வகுத்திருந்தாலும், இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் மேல் அதிகாரிகளின் உத்தரவு என்ற பெயரில் சார் பதிவாளர்கள் பதிவு செய்ய மறுத்து சர்வாதிகார போக்கினை கையாளுகின்றனர்.

குறிப்பாக சார் பதிவாளர்கள் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் அவர்கள் பதிவுக்கு தாக்கல் செய்யும் ஆவணத்தில் ஏதாவது குறைகளை கண்டுபிடித்து, சாக்கப்போக்குகளை சொல்லி பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர்.

மேலும் புதிய வீட்டுமனை பிரிவிற்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்வதற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணத்தை தாக்கல் செய்தால், அது குறித்து அவர் மாவட்ட பதிவாளருக்கு பரிந்துரை செய்வதற்கு பெருமளவில் பணம் கேட்கிறார். இது சம்பந்தமாக குழுவாக சார்பதிவாளரை அணுகி நியாயம் கேட்டால், பதிவுத்துறை அமைச்சர் கேட்கின்ற பணத்தை கொடுக்கிறீர்கள் நாங்கள் கேட்கின்ற பணத்தை கொடுக்க மாட்டீர்களா என அதிகார தோரணையில் மிரட்டுகின்றனர்.

மேலும் சார் பதிவாளரும் மாவட்ட பதிவாளரும் கேட்கின்ற பணத்தை கொடுக்கவில்லை எனில் நூறு ரூபாய் விற்கும் சொத்திற்கு 500 ரூபாய் என வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்கின்றனர். இது குறித்தும் இவர்களை குழுவாக அணுகி கேட்டால் எங்களுக்கு மேல் இடத்து உத்தரவு எங்களால் இப்படித்தான் வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்ய முடியும் என்கிற சர்வாதிகாரப் போக்கினை  கையாளுகின்றனர். 

தேவைப்பட்டால் மேல்முறையீட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லி வீட்டு மனை அபிவிருத்தியாளர்கள் வருட கணக்கில் தங்களின் புதிய வீட்டுமனை பிரிவிற்கான மனை மதிப்பினை நிர்ணயம் செய்ய முடியாமல் அலக்கழிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து யாரிடத்தில் புகார் தெரிவித்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது அனைவருக்கும் நாங்கள் கப்பம் கட்டி தான் இந்த பொறுப்பிற்கு வந்திருக்கிறோம் என்று சொல்லி வெளிப்படையாக பேசும் அளவிற்கு தற்போது பதிவுத்துறை செயல்படுகிறது. 

இப்படி முரண்பாடான வழிகாட்டி மதிப்பினை நிர்ணயம் செய்து பதிவுத்துறைக்கு பெருமளவில் வருவாய் ஈட்ட வேண்டும் என்கிற அளவில் ஒட்டுமொத்த பதிதுறையும் செயல்படுகிறது. இது குறித்து பதிவுத்துறை அதிகாரிகள் இடத்தில் விளக்கம் கேட்டால் மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதற்கு பணம் தேவைப்படுகிறது. நேரிடையாக மாநில அரசுக்கு பதிவுத்துறையின் மூலம் வருவாய் வருவதினால் இதனை பெரும் அளவில் உயர்த்தச் சொல்லி மேல் இடத்து உத்தரவு எங்களால் எதுவும் செய்ய முடியாது என கை விரிக்கின்றனர்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தனது தலைமையின் கீழ் தமிழகம் அனைத்து துறைகளிலும் நாளும் வளர்ச்சி கண்டு வருகிறது மக்கள் எல்லோரும் நிம்மதியாக வாழ்கின்றனர் என்று நினைத்துக் கொண்டு பகல் கனவு காண்கின்றார்.

உண்மையில் மக்கள் எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்றால் தமிழக அரசு அனைத்து விலைவாசிகளையும் உயர்த்தி எங்களை சாகடித்து, ஊர் தாலிகளை எல்லாம் அறுத்து, ஒருசில பெண்களுக்கான உரிமை தொகை தேவையா என்கிற அளவுக்கு வெளிப்படையாகவே உடன்பிறப்புகளிடம் மனம் குமுறுகின்றனர்.

தங்களை நம்பி வாக்களித்து முதல்வராக தேர்ந்தெடுத்த மக்களுக்கும் வாக்களிக்காத மக்களுக்கும் பாரபட்சமின்றி நேர்மையான முறையிலும் நியாயமான முறையிலும் ஆட்சியை தருவேன் என்று உறுதிமொழி அளித்த தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இப்படிப்பட்ட பிரச்சனைகளை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, சரியான தீர்வு கண்டு மக்கள் நிம்மதியுடன் தங்களின் இல்ல கனவுகளை நினைவாக்கிக் கொள்வதற்கு இந்த அரசும் முதல்வரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணங்களும் வேண்டுகோளுமே தவிர, மற்றபடி நாங்கள் யாரையும் குறை கூறுவதற்கோ அரசியல் செய்வதற்கோ இங்கு வரவில்லை என்ற எங்களின் உறுதியான நிலைப்பாட்டினையும், மக்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த தகவல்களை முதல்வரின் கவனத்திற்கு ஊடகத்துறை நண்பர்கள் கொண்டு செல்ல வேண்டும் என்கிற அடிப்படையில் தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்தி இருக்கிறோம்.

****

Recent Posts

𝘈𝘤𝘶𝘱𝘶𝘯𝘤𝘵𝘶𝘳𝘦 𝘤𝘢𝘯 𝘤𝘶𝘳𝘦 𝘢𝘭𝘭 𝘗𝘩𝘺𝘴𝘪𝘤𝘢𝘭, 𝘔𝘦𝘯𝘵𝘢𝘭 𝘢𝘯𝘥 𝘓𝘪𝘧𝘦 𝘳𝘦𝘭𝘢𝘵𝘦𝘥 𝘥𝘪𝘴𝘦𝘢𝘴𝘦𝘴; 𝘌𝘹𝘱𝘦𝘳𝘵𝘴 𝘚𝘱𝘦𝘢𝘬 𝘥𝘶𝘳𝘪𝘯𝘨 "𝘒𝘯𝘰𝘸 𝘋𝘪𝘴𝘦𝘢𝘴𝘦 - 𝘕𝘰 𝘋𝘪𝘴𝘦𝘢𝘴𝘦" 𝘉𝘰𝘰𝘬 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩