சாய் பல்கலைக்கழகம் இளங்கலை மாணவர்களுக்கு சுதந்திரமான கல்வித் திட்டத்தின்கீழ் கலந்துரையாடல் நிகழ்வு


Aug 8, 2023: சாய் பல்கலைக்கழகம், தனது 3-வது பகுதி இளங்கலை மாணவர்களுக்கு சுதந்திரமான கல்வித் திட்டத்தின்கீழ்கலந்துரையாடல் நிகழ்வை நடத்தியது. மகாபலிபுரத்தில், ஃபோர் பாயின்ட் ஷெரட்டன் அரங்கில் 2023, ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வு, மாணவர்களின் வழக்கமான கல்வியாண்டுக்கான அணிவகுப்போடு தொடங்கியது. இந்நிகழ்வில் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ஜாம்ஷெட் பருச்சா, அதிகாரபூர்வமாக பல்கலைக் கழகத்தில் சேர்ந்த புதிய மாணவர்களை இணைப்பதாக அறிவித்தார்.

சாய் பல்கலைக்கழகம் இளங்கலை மாணவர்களுக்கு உருவாக்கிய பாடத்திட்டங்களை விளக்கியதோடு ஆசிரியர்கள் கற்பிக்கும் விதத்தை விவரித்தார். மாணவர்கள் கடந்த காலத்தைப்பற்றி சிந்தித்துக் கொண்டிராமல் எதிர்காலத்திற்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். பல்கலைக் கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் கே.வி. ரமணி மாணவர்களிடம் பேசுகையில், மாணவர்கள் தங்களது எதிர்கால இலக்குகளை எட்டுவதற்கும்அவர்களது அறிவித் திறன் விசாலமடைவதற்கும் ஒரு ஊக்குவிக்கும் மையமாக சாய் பல்கலைக் கழகம்திகழும் என்று குறிப்பிட்டார்.

மாணவர்களுக்கானஇந்த 5 நாள் பயிலரங்கு (ஓரியன்டேஷன் நிகழ்ச்சி) ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி 11-ம் தேதிவரை நடைபெறும். இதில் மாணவர்கள் தங்களது பாடத்திட்டங்களைப் பற்றி நன்கு அறிந்துகொள்வதோடு, ஆசிரியர்கள் மற்றும் இந்தியாவிலிருந்து 9 மாநிலங்களிலிருந்து புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களைப்பற்றியும் தெரிந்து கொள்ளமுடியும். இந்த நிகழ்வில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுகள், மனநலனை வளப்படுத்தும் பயிற்சிகள், யோகாசனம், ராகிங்இல்லாததை உறுதி செய்வது உள்ளிட்டவை மாணவர்களுக்கு விளக்கப்படும். சாய் பல்கலைக்கழகம் 14 பன்முக இளநிலை பாடத்திட்ட வகுப்புகளை நடத்துகிறது. இவற்றில் பி.டெக், பிஏ(ஹான்ஸ்), பிஎஸ்சி (ஹானர்ஸ்) மற்றும் பிஏ எல்எல்பி (ஹானர்ஸ்) ஆகிய பாடத்திட்டங்களும்உள்ளன. இத்துடன் பாடத்திட்டங்களுடன் இணைந்த நியூரோ சயின்ஸ், இலக்கியம், தகவல் பரிமாற்றம்,கலாசார படிப்பு, உயிரியியல் அறிவியல், அரசியல் தத்துவம் மற்றும் பொருளாதாரம் குறித்தபாடத்திட்டங்களும் இதில் உள்ளன. கலை அறிவியல் மற்றும் சட்ட பள்ளி மற்றும் கம்ப்யூட்டிங்மற்றும் டேட்டா அறிவியல் உள்ளிட்ட பாடத் திட்டங்களும் இங்கு கற்பிக்கப்படுகின்றன. 

சாய்பல்கலைக்கழகத்தின் சட்டப் பிரிவில் சமீபத்தில் முதுநிலை கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.ஓராண்டு பட்ட வகுப்புகளாக முதுநிலை எல்எல்எம் படிப்புகள் மற்றும் 2 ஆண்டு முதுகலை படிப்பில்பொதுக்கொள்கை வகுப்பது குறித்தசிறப்பு பாடத்திட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் அகிலா ராம்நாராயண் டீன், கலை மற்றும் அறிவியல் பள்ளி, அஞ்சனா ராகவன் பேராசிரியர், கலை மற்றும் அறிவியல் பள்ளி, பிலிப்ஸ் ஸ்டான்லி பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர், செயல்பாட்டு இயக்குநர் கவிதா தேஷ்பாண்டே அசோசியேட் டீன், ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டிங் மற்றும் டேட்டா சயின்ஸ், விவேக் ஷிவ்ஹரே இயக்குனர், சேர்க்கை, அவுட்ரீச் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், ரீனா படேல் டீன், சட்டப் பள்ளி மற்றும் சட்டப் பேராசிரியர் ஆகியோர் கலந்துகொண்டனர். 

சாய் பல்கலைக்கழகம் சுமார் 103 ஏக்கர்பரப்பளவில் பனையூர் ஓஎம்எர் சென்னையில் அமைந்துள்ளது. இரண்டு பிரதான கட்டிடங்கள் உள்ளன.இதில் பிளாக் 1 பகுதி கட்டிடத்தில் 250 மாணவர்களும், பிளாக் 2 பகுதி கட்டிடத்தில்550 மாணவர்களும் தங்கி கல்வி பயிலும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு கட்டிடங்களில்உள்ள அனைத்து வகுப்புகளும் குளிர்சாதன அறைகளைக் கொண்டவை. ஆய்வகங்கள், கருத்தரங்க கூடங்கள்,நூலகம் ஆகியனவும் குளிரூட்டப்பட்ட வசதிகளைக் கொண்டவையாக உருவாக்கப்பட்டுள்ளன. 

எதிர்காலத்தில்20 ஆயிரம் மாணவர்கள் ப யிலும் வகையில் விரிவாக்கம் செய்யும் அளவுக்கு இட வசதி கொண்டுள்ளது. கூடுதலாக பேராசிரியர்களுக்கானஅலுவலக வசதி, ஆசிரியர்கள் பயிற்சி செய்வதற்கான இடவசதி, உணவக வசதி, உணவருந்த போதிய இடவசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல மாணவர்கள் விளையாட கால்பந்து, கிரிக்கெட்,வாலிபால், இறக்குப்பந்து மைதானங்களும் உள்ளரங்க விளையாட்டுகளான கேரம், டேபிள் டென்னிஸ்போன்றவற்றுக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 2023 கல்வி ஆண்டில் சேர்வதற்கு கடைசிவாய்ப்பு ஆகஸ்ட் 18 ஆகும்.

**** 

Recent Posts

𝘌𝘢𝘳𝘵𝘩𝘦𝘯 𝘚𝘱𝘢𝘤𝘦𝘴 & 𝘚𝘶𝘨𝘢𝘭 𝘎𝘳𝘰𝘶𝘱 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘪𝘵𝘴 𝘧𝘭𝘢𝘨𝘴𝘩𝘪𝘱 𝘎𝘢𝘵𝘦𝘥 𝘝𝘪𝘭𝘭𝘢 𝘗𝘭𝘰𝘵𝘴 𝘢𝘵 𝘒𝘦𝘭𝘢𝘮𝘣𝘢𝘬𝘬𝘢𝘮; 𝘉𝘶𝘪𝘭𝘥𝘪𝘯𝘨 𝘢 𝘓𝘦𝘨𝘢𝘤𝘺 𝘪𝘯 𝘔𝘰𝘥𝘦𝘳𝘯 𝘙𝘦𝘢𝘭 𝘌𝘴𝘵𝘢𝘵𝘦

𝘋𝘢𝘪𝘮𝘭𝘦𝘳 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘈𝘭𝘭 𝘕𝘦𝘸 𝘉𝘩𝘢𝘳𝘢𝘵 𝘉𝘦𝘯𝘻 𝘏𝘟 & 𝘛𝘖𝘙𝘘𝘚𝘏𝘐𝘍𝘛 𝘊𝘰𝘯𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘪𝘰𝘯 & 𝘔𝘪𝘯𝘪𝘯𝘨 𝘊𝘰𝘮𝘮𝘦𝘳𝘤𝘪𝘢𝘭 𝘛𝘳𝘶𝘤𝘬𝘴 𝘵𝘰 𝘗𝘰𝘸𝘦𝘳 𝘐𝘯𝘥𝘪𝘢'𝘴 𝘐𝘯𝘧𝘳𝘢𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘶𝘳𝘦 𝘉𝘰𝘰𝘮