தமிழக போக்குவரத்து துறையில் லஞ்சம் 30% ஆக உயர்ந்துள்ளதை கண்டித்து லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்


18.08.2022 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள தமிழக முதல்வர் அவர்களின் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் குறித்தும் மற்றும் 5 அம்ச கோரிக்கைகள் குறித்து காலவரையற்ற வேலைநிறுத்தம் சம்பந்தமாக இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அனைத்து எம் சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் S.யுவராஜ், தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் காஞ்சி ச.தீனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Youtube video👇👇

அப்போது அவர்கள் பேசியதாவது: தமிழக போக்குவரத்து துறையில் கடந்த ஆண்டுகளை விட 30% (முப்பது சதவீதம்) லஞ்ச லாவண்யம் உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கல்குவாரிகளும், செயற்கை மணல் (M.Sand) கிரஷர்களும், கிராவல் குவாரிகளும், சவுடுமண் குவாரிகளும், அரசு மணல் விற்பனை நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. 

மேற்படி குவாரிகளிலிருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான லாரிகளில் முற்றிலும் சட்டவிதிமுறைகளுக்கு புறம்பாக மோட்டார் வாகனச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிகபாரம் (Over Load) ஏற்றிச் செயல்கிறார்கள். குறிப்பாக சிறிய லாரிகளில் (6 Wheelers) அனுமதிக்கப்பட்ட 11 டன்னுக்கு மேல் 20 டன் வரையிலும். கனரக டாரஸ் லாரிகளில் (10 Wheelers) 19 டன்னுக்கு மேல் 30 டன்கள் வரையிலும்., 14 Wheelers லாரிகளில் அனுமதிக்கபப்ட்ட 29 டன்னுக்கு மேல் 50 டன்கள் வரையிலும் ஏற்றிவிட்டு ஏற்றப்பட்ட அளவிற்குண்டான GST Bill மற்றும் Transit Pass குவாரிகளில் கொடுக்காமல் குறைத்து கொடுப்பதால் அரசுக்கு தினசரி கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. 

மேலும் லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிகபாரம் (Over Load) எடுத்துச் செல்வதால் சாலைகள் முழுவதும் சேதமடைந்து அதிகளவில் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்சேதமும், பெருத்த பொருட்சேதமும் ஏற்பட்டு வருகிறது. வாகன விபத்தில் இறந்தவர்களுக்கும், காயம்பட்டவர்களுக்கும் நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தால் விபத்து ஏற்பட்டபோது லாரிகளில் மோட்டர் வாகனச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிகபாரம் (Over Load) ஏற்றி வந்ததால் காப்பீட்டு நிறுவனம் (Insurance Company) இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என்றும் லாரி உரிமையாளர்களே பாதிக்கப்பட்டவர் களுக்கு இழப்பீடு வழங்கவேண்டுமென்று தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. 

இதனால் லாரிகளுக்கு முறையாக காப்பீடு (Insurance) செலுத்தியிருந்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு லாரி உரிமையாளர்களே நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியுள்ளதால் லாரி உரிமையாளர்கள் பெருத்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்தியாவிலேயே அதிகளவில் விபத்துக்கள் ஏற்படும் மாநிலங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. 

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சாலை விபத்துக்களை தடுத்து உயிர்சேதமும்:, பொருட்சேதமும் ஏற்படாமல் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்று ஒரு உன்னத திட்டத்தை அறிவித்துள்ளார். ஆனால் சாலை விபத்துக்களை தடுக்க வேண்டிய காவல்துறையினர், போக்குவரத்து துறையினர், வருவாய் துறையினர் முற்றிலும் சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக மோட்டார் வாகனச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிகபாரம் (Over Load) ஏற்றிச் செல்லும் வாரிகளை கடுமையான வாகன சோதனை செய்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் மாமுல் ரூ.5000 முதல் 50000 வரை பெற்றுக்கொண்டி பெயரளவுக்கு அரசுக்கு கணக்கு காட்டுவதற்காக ஒரு சில லாரிகள் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்து வருகிறார்கள். லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் (Over Load) ஏற்றிச் செல்வதால் லாரிகளின் டயர்கள் விரைவாக தேய்ந்தும், குறைந்த உதிரிபாகங்கள் உடைந்தும், மைலேஜ் கொடுப்பதால் அதிக டீசல் போடவேண்டியுள்ளதால், அதிகளவில் செலவுகள் ஏற்படுகிறது. 

மேலும் அதிகபாரம் ஏற்றிச் செல்வதால் பிரேக் சரிவர வேலை செய்யாமல் முன்னாள் செல்லும் வாகனங்கள் மீது மோதி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே கடந்த ஒன்பது மாத காலமாக கனிமங்களை எடுத்துச் செல்லும் அனைத்து லாரி உரிமையாளர் சங்கத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்குமேல் அதிகபாரம் (Over Load) ஏற்றிச் செல்வதில்லை என்றும், மோட்டார் வாகன சட்டத்கதில் அனுமதிக்கப்பட்ட அளவோடு (Passing Load) மட்டுமே எடுத்துச் செல்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சுமார் 50 சதவீதலாரிகள் Passing Load மட்டுமே ஏற்றிச் சென்று வருகிறோம். 

இன்னும் 50 சதவீத லாரிகள் அதிகபாரம் (Over Load) ஏற்றிச்சென்றுதான் வருகிறார்கள். இதனால் அதிகபாரம் (Over laod} ஏற்றிச் சென்று விற்பனை செய்யும் லாரிகளுடன் அனுமதிக்கப்பட்ட அளவு பதிவு செய்து நடவடிக்கை லோடு (Passing Load) மட்டுமே ஏற்றிச் செல்லும் லாரிகளால் போட்டிபோட்டு வியாபாரம் செய்ய முதைலையாமல் பெருமித்த சிரமத்ததை சந்தித்து வருகிறோம். 

இது சம்பந்தமாக லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் (Over load) ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது கடுமையான வாகன சோதனை செய்து வழக்கு எடுத்து சாலை விபத்துக்களை தடுக்க வேண்டி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கனவு திட்டமாகிய விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கிட கனிமவள கடத்தல் தடுப்பு பிரிவு என்ற ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தி, கனிம வளங்களை எடுத்துச் செல்லும் லாரிகளை கடுமையாக வாகன சோதனை செய்து அனுமதிக்கப்பட்ட அளிவுக்கு மேல் அதிக பாரம் (Over laod) ஏற்றிச்செல்லும் லாரியின் உரிமையாளர் மீதும் ஓட்டுநர் மீதும், அதிகபாரம் ஏற்றிவிடும் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து, குவாரிக்கு வழங்கப்படும் அனுமதியை (License ) ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.

இந்திய ஒன்றிய அரசு வாகனங்களுக்கு F.C.யின்போது ஒட்டப்படும் ஒளிரும் பட்டை (Reflector Sticker)க்கு மொத்தம் 11 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்கும் நிலையில் தமிழக போக்குவரத்து துறை 2 நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி அளித்து அதிக அளவில் கட்டணம் வசூல் செய்து கொண்டு அதாவது ரூ.1000 ல் இருந்து 1500 மட்டும் பெருமானம் உள்ள பட்டைகளுக்கு ரூ.4000 லிருந்து ரூ.5000 வரை ஒளிரும்.கூடுதலாக பெற்றுக்கொண்டு மிகப்பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர வரும்புவதுடன், தமிழகத்தில் ஆண்டு ஒன்றுக்கு 12 லட்சம் வாகனங்கள் F.C. செய்தாக வேண்டிய ஒரு கட்டாயம் உள்ளது. ஆக 12 லட்சம் வாகனங்களுக்கு ரூ.2500 முதல் 4000 வரை கூடுதல் பணம் பெறப்படுவதால் போக்குவரத்து துறையில் பலநூறு கோடி ரூபாய் முறைகேடு நடக்கிறது.


MoRTH ஏற்கனவே அனைத்து மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ARAVICAT அனுமதி பெற்றுள்ள அனைத்து நிறுவனங்களையும்.நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று உள்ளது. ஆனால் தமிழகஅரசு அந்த சுற்றறிக்கையை தவிர்த்துவிட்டு இவர்கள் பணம் பெறும் நோக்கத்துடன் இரண்டு நிறுவனங்களை மட்டுமே அனுமதித்து உள்ளார்கள் இதை ஏன் என்று போக்குவரத்து துறை ஆணையர் விளக்க வேண்டும். இதுபோன்ற சர்டிபிகேட் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. நாங்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் இதுபோன்ற வழிமுறைகள் இல்லை. தமிழகத்தில் மட்டும்தான் ஜி.பி.எஸ். போன்று வேக கட்டுப்பாட்டு கருவி ஒளி பிரதிபலிப்பு பட்டை ஒருங்கிணைந்த ஊழல்கள் நடக்கின்றது. இதை தமிழக முதல்வர் உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தில் பொதுப்பணித்துறை அனுமதி பெறாமல் இயங்கி வரும் 4000 க்கு மேற்பட்ட தனியார் எம்.சான்டு உற்பத்தி நிறுவனங்களை தற்காலிகமாக மூடி அரசு ஒரு தனிக்குழு அமைத்து ஆய்வு செய்த பிறகே மக்களுக்கு எம்.சான்டு வழங்க வேண்டும். எம்.சான்டு தயாரித்து விற்பனை செய்வதில் நடக்கும் முறைகேடுகளையும், கொள்ளையையும், மற்றும் மலைச்சரிவில் நடக்கும் உயிரிழப்புகளையும் தடுத்து நிறுத்த அரசு உடனடியாக மின்ணனு வழி கட்டண ரசீதை (E.Way pass) நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.

சென்னையை சுற்றியுள்ள 8 மாவட்டத்திற்கு ஒரே ஒரு மணல் குவாரிதான் உள்ளது. அதில் வழங்கப்படும் மணல் தரமற்றதாகவும், அளவு குறைவாகவும். விலை உயர்வாகவும் உள்ளதால், அதிக குவாரிகளை திறக்கவும், தரமான மணல் கிடைக்கவும், அளவு சரியாக வழங்கிட வேண்டும் என்றும் மீண்டும் தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஆகஸ்ட் 18 முதல் மணல் மற்றும் எம்.சேன்டு லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதென முடிவெடுத்து வள்ளுவர் கோட்டத்தில்18.08.2022 அன்று கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவதென்று முடிவு செய்துள்ளதாக கூறினார்கள்.

***


Recent Posts

𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘔𝘦𝘥𝘪𝘢 𝘞𝘰𝘳𝘬𝘴 𝘱𝘳𝘦𝘴𝘦𝘯𝘵𝘦𝘥 𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘈𝘸𝘢𝘳𝘥𝘴 2024 𝘩𝘰𝘯𝘰𝘶𝘳𝘪𝘯𝘨 𝘊𝘪𝘯𝘦𝘮𝘢 𝘊𝘦𝘭𝘦𝘣𝘳𝘪𝘵𝘪𝘦𝘴, 𝘗𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘪𝘢𝘯𝘴 & 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳𝘴, 𝘋𝘰𝘤𝘵𝘰𝘳𝘴, 𝘐𝘈𝘚 & 𝘐𝘋𝘈𝘚 𝘖𝘧𝘧𝘪𝘤𝘦𝘳𝘴