தமிழகத்தில் ஜாதி வாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க புதிய திராவிட கழகம் கோரிக்கை


சென்னை, ஏப்ரல் 09, 2022: தமிழகத்தில் ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி மக்கள்தொகை அடிப்படையில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, அரசியல் போன்றவற்றில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று புதிய திராவிடக் கழகத்தின் நிறுவனத்தலைவர் கே.எஸ். ராஜ்கவுண்டர் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

YouTube video👇

அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தின் நல்லாட்சி வழங்கி வருகின்ற தமிழக மக்களின் காவலர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் சமுதாய மக்களின் சார்பாகவும். புதிய திராவிட கழகத்தின் சார்பாகவும் ஒரு பணிவான வேண்டுகோள்.

தமிழகத்தில் ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி மக்கள்தொகை அடிப்படையில் கல்வி. பொருளாதாரம், வேலைவாய்ப்பு, அரசியல் போன்றவற்றில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், 10.5% இட ஒதுக்கீடு ரத்து செய்து ஆணை பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் சமுதாய மக்கள் சார்பாகவும். புதிய திராவிடக் கழகம் சார்பாகவும் மற்றும் 107 சமுதாய மக்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும். நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஏனென்றால், நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது தொகுதியான எடப்பாடியில் வெற்றிபெற வேண்டும் என்ற சுயநலத்திற்க்காகவும். பாட்டாளி மக்கள் கட்டியை தனது கூட்டணியில் தக்க வைக்கவும் மட்டுமே 10.5% வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அரசு ஆணையைஅவசர அவசரமாக பிறப்பித்தார். வன்னியர் சமுதாய மக்கள் கண்ணில் வெண்ணெய்யையும். மீதமுள்ள 107 சமுதாய மக்களின் கண்ணில்.சுண்ணாம்பையும் வைத்து விட்டார். அப்போது நாங்கள் புதிய திராவிட கழகம் அதிமுக கூட்டணியில் அங்கம் வைத்தோம். இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரினோம். அவர்கள் அதற்கு முடியாது என்றார். அதன் காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.

பின்பு திமுக -விற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவரமாக வாக்கு சேகரித்தோம். இதன் தொடர்ச்சியாக நடபெற்று முடிந்த மாநகர, நகர, பேரூர் கழக தேர்தலிலும் திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கு வாக்கு சேகரித்து வந்துள்ளோம். இனி வரும் காலங்களிலும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்போம்.

மேலும் கொங்குநாடு இளைஞர் நலச்சங்கம் இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கூடாது என்று மதுரை நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தோம். நாங்கள் மட்டுமின்றி 107 சமுதாய மக்களும் மனு தாக்கல் செய்திருந்தார்கள். அம்மனுவை ஏற்று தற்போது நீதியை நிலைநாட்டி நல்ல தீர்ப்பை வழங்கியது வரவேற்கத்தக்கது.

வேட்டுவக்கவுண்டர் சமுதாய மக்கள் சார்பாகவும். புதிய திராவிட கழகம் சார்பாகவும் 107 சமுதாய மக்களின் சார்பாகவும் தமிழக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் என்னவென்றால் ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் போன்றவற்றில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாங்கள் வன்னியர் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. வன்னியர் மக்களை விட நாங்கள் கல்வி. பொருளாதாரம், வேலைவாய்ப்பு குறிப்பாக அரசியலில் மிகவும் பின்தங்கியுள்ளோம். 107 சமுதாய மக்களின் கோரிக்கைகளை வெளிகொண்டுவர சட்டமன்ற உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது ராஜ்ய சபா உறுப்பினர்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் அவர்களை சந்திக்க மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் திரு. செந்தில்பாலாஜி அவர்களிடம் விளக்கி கூறியுள்ளோம். அவரும் முதல்வர் அவர்களை நேரில் சந்திக்க நேரம் பெற்றுத்தருவதாக கூறியுள்ளார்கள்.

107 சமுதாய மக்களின் கருணை மனுவை மாண்புமிகு முதல்வர் அவர்கள் எங்களது வருங்கால சந்ததினர் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்குமாறும் சமூக நீதியை நிலைநாட்டுமாறும் மிகவும் தாழ்மையுடன் புதிய திராவிட கழகத்தின் சார்பாக கேட்டுக்கொண்டார்.

****

Recent Posts

𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘔𝘦𝘥𝘪𝘢 𝘞𝘰𝘳𝘬𝘴 𝘱𝘳𝘦𝘴𝘦𝘯𝘵𝘦𝘥 𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘈𝘸𝘢𝘳𝘥𝘴 2024 𝘩𝘰𝘯𝘰𝘶𝘳𝘪𝘯𝘨 𝘊𝘪𝘯𝘦𝘮𝘢 𝘊𝘦𝘭𝘦𝘣𝘳𝘪𝘵𝘪𝘦𝘴, 𝘗𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘪𝘢𝘯𝘴 & 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳𝘴, 𝘋𝘰𝘤𝘵𝘰𝘳𝘴, 𝘐𝘈𝘚 & 𝘐𝘋𝘈𝘚 𝘖𝘧𝘧𝘪𝘤𝘦𝘳𝘴