மருத்துவ காப்பீட்டுத் திட்டம்: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் அதிருப்தி


சென்னை, பிப்ரவரி 28, 2022: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் மாநில மையத்தின் சார்பில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்த கருத்தரங்கம் சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. 

Youtube Video👇👇
மாநிலத் தலைவர் நெ.இல. சீதரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி கருத்தரங்கத்தின் நோக்கங்களை எடுத்துரைத்தார். மாநில துணைத் தலைவர் த. குப்பன் அனைவரையும் வரவேற்றார். அனைத்து மாவட்டத்தின் பிரதிநிதிகளும் கருத்துரையாற்றினர். 

(L to R) மாநில செயலாளர் எஸ்.ஆறுமுகம்; மாநில பொருளாளர் ந.ஜெயசந்திரன்; மாநிலத் தலைவர் நெ.இல. சீதரன்; பொதுச் செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி; மாநில துணைத்தலைவர் கி.இளமாறன்

இறுதியில் கீழ்க்காணும் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை தமிழக அரசுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

  • அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியலில் அரசு மருத்துவ மனைகள் இணைக்கப்பட வேண்டும்.
  • உண்மையான பணமில்லா மருத்துவமாக, இத்திட்டம் நடத்தப்பட வேண்டும்.
  • மூன்றாம் தரப்பு, இத்திட்டத்தில் ஈடுபடக்கூடாது.
  • இத்திட்டத்தில் இணையும் உரிமை, இணையாமலிருக்கும் உரிமை, ஓய்வூதியருக்கு வழங்கப்பட வேண்டும்.
  • முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள நடைமுறைகள் இணைக்கப்பட வேண்டும்.
  • அதிகாரம் பெற்ற குழுவில் உள்ள அதிகாரிகளின் பரிந்துரைகளை காப்பீட்டு நிறுவனம் நிராகரிக்கக் கூடாது.
  • சத்துணவு, அங்கன்வாடி போன்ற சிறப்பு ஓய்வூதியர்கள் இத்திட்டத்தில் இலவசமாக இணைக்கப்பட வேண்டும்.
  • இரண்டாண்டுகளாக, காப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் பட்டியல்கள் அனைத்தும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

அடுத்த கட்ட நடவடிக்கை 24.03.2022-ல் நடைபெறும் மாநில செயற்குழுவில் அறிவிக்கப்படும். இறுதியாக மாநில செயலாளர் குரு. சந்திரசேகரன் நன்றி கூறினார்.

****

Recent Posts

𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘔𝘦𝘥𝘪𝘢 𝘞𝘰𝘳𝘬𝘴 𝘱𝘳𝘦𝘴𝘦𝘯𝘵𝘦𝘥 𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘈𝘸𝘢𝘳𝘥𝘴 2024 𝘩𝘰𝘯𝘰𝘶𝘳𝘪𝘯𝘨 𝘊𝘪𝘯𝘦𝘮𝘢 𝘊𝘦𝘭𝘦𝘣𝘳𝘪𝘵𝘪𝘦𝘴, 𝘗𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘪𝘢𝘯𝘴 & 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳𝘴, 𝘋𝘰𝘤𝘵𝘰𝘳𝘴, 𝘐𝘈𝘚 & 𝘐𝘋𝘈𝘚 𝘖𝘧𝘧𝘪𝘤𝘦𝘳𝘴