KRT Career அகாடமியின் TNPSC இலவச வகுப்புகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
27.02.2022: சென்னை ஜாபர்கான்பேட்டையில் செயல்பட்டுவரும் ஓ.பி.ஆர் நினைவுத் தொண்டு அறக்கட்டளையின் ஓர் அங்கமான KRT கேரியர் அகாடமியின் சார்பில் TNPSC தேர்வுகள் எழுத உள்ள மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. வீ.செல்வராஜூ அவர்கள் தலைமை தாங்கினார்.
Youtube Video👇👇
தற்பொழுது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள 2022ம் ஆம் ஆண்டிற்கான உத்தேச ஆண்டுத்திட்ட நிரலின் அடிப்படையில் குரூப் II, IIA & IV பணியிடங்களுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் ஓ.பி.ஆர். நினைவுத்தொண்டு அறக்கட்டளையின் கீழ் செயல்படும் KRT கேரியர் அகாடமியில் 27.02.2022 முதல் இலவசமாக நடத்தப்படுகிறது.
ஜாதி, மதம், மொழி, பேதம் பார்க்காமல் முன்னாள் முதன் முதல் முதல்வர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் ஊழலற்ற, திறமையான நிர்வாகிகளை கொண்டு தமிழகத்தை உருவாக்க அவர்கள் கண்ட கனவை நனவாக்கும் வகையில் ஏழை மாணவ, மாணவியர் இவ்வகுப்புகளில் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அறக்கட்டளையின் நோக்கம் நேர்மையான நிர்வாகத்திறமை கொண்டவர்களை உருவாக்கி, அதன் மூலம் சிறந்த அதிகாரிகளை உருவாக்குவதே ஆகும். இதற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படவில்லை, முற்றிலும் இலவசமாக இச்சேவையை வழங்கி மறைந்த ஓ.பி.ஆர் மற்றும் கே.ரங்கராஜன் (KRT) அவர்களின் கனவுகளை நனவாக்குவதே இதன் குறிக்கோள் என இவ்வறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு.வீ.செல்வராஜூ அவர்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாமன்ற உறுப்பினர்கள் பயிற்சிப் பெற உள்ள மாணவியர்களை ஊக்கமூட்டி வாழ்த்து தெரிவித்தனர். பயிற்சிப்பெறவுள்ள மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் மகிழ்வுடன் பங்கேற்றனர். முடிவில் அறங்காவலர் திரு.வி.ஜெயக்குமார் அவர்கள் நன்றி கூறினார்.
கே.ஆர்.டி கேரியர் அகாடமியின் சிறப்பு அம்சங்கள் :
- இலவசமாக பயிற்சி அளிக்கப்படும்.
- வார இறுதியில் மாதிரித்தேர்வுகள் நடத்தப்படும்.
- சிறந்த வல்லுனர்களைக் கொண்டு இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
- பயிற்சியின் போது பாடக்குறிப்பு இலவசமாக வழங்கப்படும்.
- விநாடி வினா, குழு விவாதம் என மாணவ, மாணவிகளிடையே நடத்தி அவர்களின் திறமை மேம்படுத்தப்படும்.
****