அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவை புறக்கணித்த அமைச்சர் அமித்ஷாவின் செயலைக் கண்டித்து தமிழ்நாட்டு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்


சென்னை, ஜனவரி 12, 2021: அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவை புறக்கணித்த உள்துறைஅமைச்சர் அமித்ஷாவின் செயலைக் கண்டித்து தமிழ்நாட்டு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் சார்பில் தலைவர் பொன்குமார் தலைமையில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அவருடன் அரிமா S.M.முருகானந்தம் தலைவர், கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு, மாநிலப் பொருளாளர் என்.சுந்தராஜ் மற்றும் மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Youtube Video👇👇


அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள நீட் தேர்வு, மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து வருகிறது. ஆண்டுதோறும் பல மாணவர்களின் உயிர்களைப் பறித்து வருகிறது. எனவே நீட் தேர்வைரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாட்டு மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அந்த அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்து, அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அந்த முன்மொழிவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாதங்கள் சில கடந்தும் அந்த கோப்பு ஆளுநர் மாளிகையில் தேங்கிக் கிடக்கிறது.

இந்த கோரிக்கை சம்பந்தமாக முறையிடுவதற்காக தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றிய அரசினுடைய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்திப்பதற்கு நேரம் கேட்ட பொழுது, முதலில் நேரம் ஒதுக்கி, பின்னர் பார்ப்பதற்கு அமைச்சர் மறுத்துள்ளார். அதன் பிறகு 8 நாட்கள் அமித்ஷாவை சந்திப்பதற்கு முயற்சித்தும் அமைச்சர் நேரம் ஒதுக்கி தமிழக பாராளுமன்ற குழுவை சந்திக்காமல் அவமதித்துள்ளார். இது 8 கோடி தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக அவமதிக்கக் கூடிய செயலாகும். உள்துறை அமைச்சரின் இந்த செயல்ஆணவத்தின் உச்சமாகும்.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து மக்கள் பிரச்சனைக்காக ஒன்றிய அரசை அணுகிய பொழுது அந்தக் குழுவை புறக்கணித்து இருப்பது ஜனநாயக மாண்பை குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும். 

கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு, குறைந்த அளவிலும், சமூக இடைவெளியை பின்பற்றியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

****


Recent Posts