அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு அங்கீகாரம் பெற்று விற்று வரும் மனைகளுக்கு ரெரா (RERA) விலக்கு கேட்டு இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலதரகர்கள் நலச்சங்கம் (INRBDMA) சார்பில் கோரிக்கை


சென்னை, டிசம்பர் 29, 2021: அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு அங்கீகாரம் பெற்று விற்று வரும் மனைகளுக்கு ரெரா (RERA) விலக்கு கேட்டு இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலதரகர்கள் நலச்சங்கம் (INRBDMA) சார்பில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் சங்கத்தின் அகில இந்திய பொருளாளர் KVS சரவணன், மாநில தலைவர் கிள்ளிவளவன், மாநில செயலாளர் பாலமுருகன் மற்றும் மாநில துணைசெயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Youtube video👇👇

அப்போது அவர்கள் பேசியதாவது;

நாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றோம். இத்தொழிலில் பல பிரச்சனைகள் உள்ளன. அதில் எங்களிடம் உள்ள பிரச்சனைகளில் முக்கியமானது ரெரா (RERA) ஆகும்.

நாங்கள் அங்கீகாரம் இல்லாமல் பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்ற மனைகளை மட்டும் விற்பனை செய்து வந்தோம். வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் போட்ட வழக்கால் கடந்த 2016-இல் அங்கீகாரம் இல்லாமல் மனை விற்பனை செய்ய கூடாது என கோர்ட் தடை ஆணை பிறப்பித்தது.

(L to R) மாநில செயலாளர் பாலமுருகன்; மாநில தலைவர் கிள்ளிவளவன்; அகில இந்திய பொருளாளர் KVS சரவணன்; மாநில துணைசெயலாளர் ராமகிருஷ்ணன்

நாங்கள் அப்பொழுது இருந்த ஆட்சியில் முதல்வர் மற்றும் அந்த இலாகா மந்திரிகள், உட்பட அனைவரையும் பார்த்தும், பல போராட்டங்களை செய்தும் வந்தோம். முன்பு இருந்த அரசாங்கம் 2018 -இல் ஒரு லே அவுட்டில் (LAYOUT) விற்றது போக உள்ள மனைகளுக்கு மட்டும் ரெகுலரேஷன் செய்து அப்ரூவ்டு வாங்கி விற்று கொள்ள அனுமதி அளித்தது.இந்த இடைப்பட்ட இரண்டு வருடத்தில் ரியல் எஸ்டேட் செய்தவர்கள் கடன் பட்டும் , பணம் கட்டிய கஸ்டமர்கள் கட்டிய பணத்தை திரும்ப கேட்டும் வம்பு சண்டை செய்தும் , போலீஸில் கேஸ் கொடுத்தும் கஸ்டமர்கள் தொல்லை கொடுத்து பணத்தை திருப்பி கேட்டும் வந்தனர்.

நாங்கள் முடிந்த வரை கட்டிய பணத்தை திருப்பி கொடுத்தோம். ஆனால் அனைவருக்கும் அனைவராலும் கொடுக்க முடியவில்லை. அதனால் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல.இதில் ஒரு ரியல் எஸ்டேட் உரிமையாளர் கட்டிய பணத்தை திருப்பி கேட்ட கஸ்டமர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். நில தரகர் இருவர் அவர்கள் மூலம் விற்பனை செய்த மனைகளை ரிஜிஸ்டர் செய்து கொடுக்க முடியாததினால் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். 

இவையெல்லாம் ரெகுலரேஷன் செய்து கொள்ள அரசாங்கம் ஆர்டர் போடுவதற்கு முன்பு நடந்தவை. சென்ற ஆட்சி ரெகுலரேஷன் செய்து கொள்ள ஆர்டர் போட்டாலும் அதிலும் அரசாங்கமும் அதிகாரிகளும் நிறைய சிரமத்தை கொடுத்து பல பிரச்சனைகளை கொடுத்தனர். அதற்கும் கடன்களை வாங்கி ரெகுலரேஷன் செய்து இப்பொழுது ரெஜிஸ்ட்ரேஷன் செய்து வருகின்றோம்.

லேண்ட் உரிமையாளர்களுக்கும் மனைகளை விற்பனை செய்யாததினால் அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தையும் கொடுக்காமல் இருந்தோம். நில உரிமையாளர்கள் எங்களுக்கு கொடுத்து இருந்த பவரையும் ரத்து செய்து விட்டனர் அதனால் பல ரியல் எஸ்டேட் செய்தவர்கள் இப்பொழுதும் அந்த மனைகளை ரெகுலரேஷன் செய்யாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இவ்வளவு சிரமம் இருந்தும் பணத்தை வட்டிக்கு வாங்கி நாங்கள் விற்ற மனைகள் போக மீதி உள்ள மனைகளுக்கு ரெகுலரேஷன் செய்து மனைகளை விற்று வந்த எங்களுக்கு பெரிய இடியாக வந்துள்ளது இந்த ரெரா (RERA).

இந்த ரெரா (RERA) வாங்காமல் ரிஜிஸ்டர் செய்து இருந்தால் ரிஜிஸ்டர் ஆபிஸிற்கு ரெரா (RERA) ஆபிசில் இருந்து ரெரா (RERA) வாங்காமல் பத்திர பதிவு செய்ய கூடாது என ஆர்டர் போடுகின்றனர். திரும்பவும் அங்கீகாரமற்ற மனைக்கு ஏற்பட்ட கதி ரெரா (RERA) சட்டத்தால் வந்துள்ளது.

நாங்கள் தங்களிடம் மன்றாடி கேட்பதெல்லாம் பழைய அங்கீகாரம் இல்லாமல் இருந்த மனைகளை ரெகுலரேஷன் செய்து விற்பனை செய்யும் மனைகளுக்கு மட்டும் ரெரா (RERA) தேவை இல்லை என தாங்கள் அருள் கூர்ந்து தயவு செய்து எங்களுக்கு கருணை காட்டி உத்தரவு போட்டு எங்களையும், எங்கள்0தொழிலையும் காப்பாற்றுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.இந்த சட்டத்தினால் பழைய மனைகளுக்கு ரெரா (RERA) வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் லேண்டு ஓனர்கள் அனைவரும் ரெரா (RERA) ACCOUNT செய்ய வருவதில்லை.

நாங்கள் பலர் எங்கள் பெயரில் வாங்காமல் லேண்டு ஓனர் பெயரிலேயே லே -அவுட் செய்து விற்பனை செய்வோம் அவர்கள் எனக்கும் , ரெராவுக்கும் (RERA) சம்மந்தம் இல்லை. என்னை INCOMETAX-இல் மாட்டி விட பார்க்கின்றீர்களா என திட்டுகின்றனர்.

பல வருடங்களுக்கு முன்பு லேண்டு வாங்கி லே-அவுட் செய்து பல கஷ்டங்கள் பட்டு ரெகுலரேஷன் செய்து பல பண பிரச்சனைகளை சந்தித்து விற்பனை செய்யும் மனைகளுக்கு ரெரா (RERA) தேவை என்பதினால் நாங்கள் சொல்லாவண்ணம் துயரம் அடைந்துள்ளோம்.

எங்களின் மிக முக்கியமான கோரிக்கை என்னவென்றால் ரெகுலரேஷன் செய்து விற்பனை செய்து வரும் மனைகளுக்கு ரெரா (RERA) தேவையில்லை என ஆர்டர் போட்டு எங்களையும் எங்கள் தொழிலையும் காப்பாற்றுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.

****


Recent Posts