பயிர் காப்பீட்டில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் : தமிழ் விவசாயிகள் சங்கத்தலைவர் நாராயணசாமி கோரிக்கை

 

31.10.2022: சென்னை எழிலகத்தில் இன்று தமிழ்நாடு வேளாண்மை துறை இயக்குனர் அவர்களை தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் O.A.நாராயணசாமி மாநிலத்சங்கத்தின் தலைவர் சந்தித்து பயிர் காப்பீட்டில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

YouTube video👇👇
அவருடன் விவசாயிகள் ஒருங்கிணைப்பாளர் சென்னை கோபிநாத் தூத்துக்குடி மாவட்ட தலைவர் நடராஜன் தென்காசி மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பா ஆகியோர் இருந்தனர்.
அப்போது அவர் கூறியதாவது:  விருதுநகர் மாவட்டத்தில் மூளிப்பட்டி.சுப்ரமணியபுரம் துலுக்கன்குறிச்சி நாட்டார்மங்கலம் புதுக்கோட்டை மற்றும் தென்காசி மாவட்டத்தில் திருவேங்கடம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டில் உள்ள குளறுபடிகளை நீக்கி ஏற்கனவே மனு கொடுத்துள்ளதையும் மற்றும் பல மாதங்கள் ஆகி விட்டதால் காலதாமதம் இல்லாமல் போர்க்கால அடிப்படையில் இப்பகுதி விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு வழங்கினால் விவசாயிகள் கடன் வாங்காமல் விவசாயத்தை தொடரும் நிலை வரும் இல்லையெனில் சென்றாண்டு மழையால் பாதிக்கப்பட்டு விவசாய விளைபொருட்கள் எல்லாம் அழிந்து போன நிலையில் அந்த சுமையில் இருந்து இன்னும் மீளாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் தமிழக அரசும் வேளாண்மைத் துறையும் விவசாயிகளின் நலன் கருதி விரைவில் பயிர்க்காப்பீடு வழங்கினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஒரு வார காலத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகள் உடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வேளாண்மை துறை இயக்குனர் அறிவித்துள்ளார் தமிழ் விவசாயிகள் சங்கம் மாநிலக்குழு.

****

Recent Posts