பாண்ட்ஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் மூன்று நல அறக்கட்டளைகளில் முறை கேடு; முன்னாள் எம்ப்ளாயீஸ் நலச்சங்கம் புகார்


சென்னை, ஆகஸ்ட் 30, 2022: பாண்ட்ஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட மூன்று நல அறக்கட்டளைகளின் கீழ் பலன்களை செயல்படுத்தாதது தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி அகில முன்னாள் பாண்ட்ஸ் ஊழியர்கள் நலச்சங்கம் என்ற அமைப்பின்கீழ் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். பாண்ட்ஸ் (இந்தியா) லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL) உடன் இணைவதற்கு முன், மேற்பார்வையாளர்கள் மற்றும் மேலாளர்கள் உட்பட அதன் ஊழியர்களின் நலனுக்காக 1980 முதல் 1984 வரை 3 அறக்கட்டளைகளை நிறுவி பல்வேறு உதவிகளை ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் வழங்குவதாக உறுதி அளித்தனர். ஆனால் அந்த உதவிகள் வழங்கப்படவேயில்லை.

Youtube Video👇

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, அகில முன்னாள் பாண்ட்ஸ் ஊழியர்கள்ந லச்சங்கத்தினர் செப்டம்பர் 2, 2022 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். செப்டம்பர் 2, 2022 அன்று சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் முன், இந்த மூன்று அறக்கட்டளைகளின் பயனாளிகள் என்ற முறையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளைப் பெறுவதற்கான முயற்சியில், அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னாள் ஊழியர்கள் உண்ணவிருத்தத்தை மேற்கொள்ள உள்ளனர்.

நலச்சங்கத் தலைவர் திரு. கே. ஜே. மோகன் குமார், பாண்ட்ஸ் / ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த மனிதவள மேலாளர் மற்றும் அவர்களின் பொதுச் செயலாளர் திரு. ஜே.சி. செபாஸ்டியன், ஆகஸ்ட் 30, 2022 அன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செய்தியாளர் கூட்டத்தில் ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றியும், அவர்களின் கோரிக்கைகளை சுட்டிக்காட்டினர்.

இணைப்பிற்கு பிறகு பாண்ட்ஸ் நிறுவனத்தின் அனைத்து தொழிற்சாலைகளையும் HUL நிர்வாகம் நேர்மையற்ற முறையில் மூடிவிட்டது).

அறக்கட்டளைகள் -- பாண்ட்ஸ் ஊழியர்கள் நல அறக்கட்டளை (1980), பாண்ட்ஸ் மேலாண்மை பணியாளர் நல அறக்கட்டளை (1981), மற்றும் பாண்ட்ஸ் மேற்பார்வை ஊழியர் நல அறக்கட்டளை (1984) -- கல்வி, பயிற்சி வழங்குதல் அல்லது உதவுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. திருமணம், மருத்துவ வசதிகள், வீட்டு வசதிகள், விளையாட்டு, கலாச்சார மற்றும் பிற நடவடிக்கைகள் மூலமாக பணியாளர்கள், அவர்களது மனைவி, குழந்தைகள் மற்றும் இதர சார்ந்திருப்பவர்களுக்கும் அறக்கட்டளைகளின் பலன்களை மறுப்பதற்காகவும், அறக்கட்டளைகளின் நிதியை கையகப்படுத்துவதற்காகவும் பாண்ட்ஸ் அலுவலகங்கள் மற்றும் தொழிச்சாலைகள் மூடப்பட்டன.

அறக்கட்டளைகளின் உருவாக்கம், அவற்றின் விவரங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஊழியர்கள் இருட்டில் வைக்கப்பட்டனர். பல ஊழியர்கள் உடல்நலக்குறைவு மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெர்மோமீட்டர் மற்றும் காளான் அழகுசாதனப் பொருட்கள், தோல், தொழிலில் ஈடுபட்டிருந்த பாண்ட்ஸ் முந்தைய தொழிலாளர்கள் தொழில் தொடர்பான பிரச்சனைகளால், இதயப் பிரச்சனை, தோல் அலர்ஜி, சுவாசப் பிரச்சனை போன்றவைகளால் பாதிக்கப்பட்டு, நிதி ஆதாரமில்லாமல் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். அவர்களில் பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர், மேலும் பலர் உயிரோடு இருந்து நரக வேதனையை அடைந்து வருகிறார்கள்.

மூன்று நல அறக்கட்டளைகளின் கூட்டுத்தொகை 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி ரூ. 1,765 கோடி, இது பல மடங்காகப் பெருகி, ரூ. 4,500 கோடி என்ற அளவிற்கு வளர்ந்திருக்கும். மூன்று அறக்கட்டளைகளுக்கான நிதி, ஊழியர்களின் இரத்தம் மற்றும் வியர்வை மூலம் ஈட்டிய, இலாபத்தில் இருந்து வழங்கப்பட்டது.

அறக்கட்டளைகளின் நிதி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும், ஆனால் 4,000க்கும் மேற்பட்ட முன்னாள் ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் அறக்கட்டளையிலிருந்து எந்தப் பலனையும் பெறவில்லை. பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் உட்பட, அனைவரும் பயனாளிகள் என்று நிர்வாகம் ஒப்புக்கொண்டது. அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு, நிறுவனங்கள் மூடப்பட்ட பின்னரும் கூட, பயனாளிக்களுக்கு திட்டங்களைச் செயல்படுத்தத் தவறிவிட்டனர். அறக்கட்டளையின் சட்டதிட்டங்கள் படி, பலன்கள் ஊழியர்களுக்கு மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் வாழ்க்கை முடியும் வரை வழங்கப்பட வேண்டும். ஆனால், ஓய்வுபெற்றதாக கூறி அவர்களுக்கு சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளன.

எனவே, அறக்கட்டளைகளின் பயனாளிகளின் பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு தமிழ்நாடு அரசு மற்றும் அதன் துறைகளுக்கு நலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.

1. அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று நல அறக்கட்டளைகளின் தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலைக் குறிப்பை வழங்குதல்.

2.மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகிய மூன்று உறுப்பினர்களை மேற்கண்ட நல அறக்கட்டளைகளில் அறங்காவலர்களாக இணைத்தல்.

3. மூன்று நல அறக்கட்டளைகளை இணைப்பதற்கும், பயனாளிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் அறக்கட்டளை கார்பஸ் நிதியை வழங்கும்
திட்டத்தை உருவாக்குவதற்கும்.

4. அறக்கட்டளைகள் செயல்படுத்துவது தொடர்பான மீறல்களுக்காக அறங்காவலர்கள் மற்றும் நிறுவனம் (HUL) மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த நாட்டின் சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க பிரிவுகளுக்கு வழிகாட்டுதல்.

5. மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை மூன்று நல அறக்கட்டளைகளின் வங்கிக் கணக்குகளையும் முடக்க வேண்டும்.

****

Recent Posts

𝘌𝘢𝘳𝘵𝘩𝘦𝘯 𝘚𝘱𝘢𝘤𝘦𝘴 & 𝘚𝘶𝘨𝘢𝘭 𝘎𝘳𝘰𝘶𝘱 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘪𝘵𝘴 𝘧𝘭𝘢𝘨𝘴𝘩𝘪𝘱 𝘎𝘢𝘵𝘦𝘥 𝘝𝘪𝘭𝘭𝘢 𝘗𝘭𝘰𝘵𝘴 𝘢𝘵 𝘒𝘦𝘭𝘢𝘮𝘣𝘢𝘬𝘬𝘢𝘮; 𝘉𝘶𝘪𝘭𝘥𝘪𝘯𝘨 𝘢 𝘓𝘦𝘨𝘢𝘤𝘺 𝘪𝘯 𝘔𝘰𝘥𝘦𝘳𝘯 𝘙𝘦𝘢𝘭 𝘌𝘴𝘵𝘢𝘵𝘦

𝘋𝘢𝘪𝘮𝘭𝘦𝘳 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘈𝘭𝘭 𝘕𝘦𝘸 𝘉𝘩𝘢𝘳𝘢𝘵 𝘉𝘦𝘯𝘻 𝘏𝘟 & 𝘛𝘖𝘙𝘘𝘚𝘏𝘐𝘍𝘛 𝘊𝘰𝘯𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘪𝘰𝘯 & 𝘔𝘪𝘯𝘪𝘯𝘨 𝘊𝘰𝘮𝘮𝘦𝘳𝘤𝘪𝘢𝘭 𝘛𝘳𝘶𝘤𝘬𝘴 𝘵𝘰 𝘗𝘰𝘸𝘦𝘳 𝘐𝘯𝘥𝘪𝘢'𝘴 𝘐𝘯𝘧𝘳𝘢𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘶𝘳𝘦 𝘉𝘰𝘰𝘮