திருசெங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கொலை மிரட்டல் | நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
கடந்த 03.06.2022 (வெள்ளிகிழமை) மாலை திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலக நிர்வாகம் தொடர்பான வழக்கமான கூட்டத்தின் போது நடைபெற்ற கலந்துரையாடல்களுக்கு இடையே, திரு.K.சக்திவேல், கண்காணிப்பாளர் அவர்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முன்னிலையிலேயே திடீரென யாரும் எதிர்பார்க்காத பொழுது கன்னத்தில் ஓங்கி அறைந்து தாக்கியுள்ளார் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.பிரபாகரன் அவர்கள். மேலும், அந்த கொடூர தாக்குதலின் ஊடே மிகவும் திட்டியும், உன்னை உருத்தெரியாமல் தொலைத்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
Youtube Video👇👇
கீழ்தரமான வார்த்தைகளால் இந்த செயலுக்கு ஒன்றிப்பின் மாநில மையம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. மேலும், கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை மற்றும் தமிழ்நாடு குடிமைப்பணி விதிகளின் கீழ் உடனடியாக பணிநீக்கம் செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேற்கண்ட கோரிக்கைகளை பெற்றுக்கொண்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை ஏதும் எடுக்காமல் மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட காட்டுத்தனமாக நடந்து கொண்ட திரு.பிராபகரன் மோட்டார் வாகன ஆய்வாளரை காப்பாற்றும் விதமாக பாதிக்கப்பட்ட திரு.K.சக்திவேல் கண்காணிப்பாளரை துணைப் போக்குவரத்து ஆணையர் அவர்கள் மூலம் மிரட்டியும் புகாரினை ஏற்க மறுத்தும் அநீதியாக நடந்து கொண்டுள்ளது.
இது போன்ற நடவடிக்கைகளை ஒன்றிப்பின் மாநில மையம் முற்றாக எதிர்க்கிறது. எனவே, ரௌடித்தனம் செய்து பணியாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த மோட்டார் வாகன ஆய்வாளர் மீது குற்றவியல் சட்டம் மற்றும் தமிழ்நாடு குடிமைப்பணி விதிகளின்படி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீட்டு விதிகளின்படி) நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்யக்கோரி இன்று சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்பாட்டம்
நடைபெற்றது.
****