மக்கள் ராஜ்ஜியம் கட்சி சார்பில் உள்இட ஒதுக்கீடு வழங்க வேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


சென்னை, மே 8, 2022: மக்கள் ராஜ்ஜியம் கட்சி நிறுவனத்தலைவர் இனமான போராளி P R சிவசாமி தலைமையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு சிறப்பு உள்இட ஒதுக்கீடு வழங்க வேண்டி இன்று வள்ளுவர் கோட்டம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Youtube video👇👇
அப்போது அவர் பேசியதாவது: 
தமிழக அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில், பின்தங்கிய போயர், ஒட்டர், இன சமுதாய மக்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் சிறப்பு உள் இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.

கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கு கல் குவாரிகள் வைப்பு நிதி இல்லாமல் கல்குவாரி வழங்கிட வேண்டும். மற்றும் நிலத்தடி பகுதிகளில் கல்லுடைக்கும் ஏழை எளிய மக்களுக்கு எவ்வித தடைகளும் இன்றி கல் உடைக்க அனுமதி வழங்கிட வேண்டும்.

DNT சாதி சான்றிதலில் போயர் ஓட்டர் இனத்தின் 11 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து அதில் உள்ள குளறுபடிகளை சரி செய்து தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்டங்களிலும் எந்த தடையும் இன்றி DNT என்று ஒற்றை சான்றிதழ் வழங்க வேண்டும்.

வேலை தேடி ஊர் ஊராக சென்று வேலை கிடைக்கும் இடத்தில் தங்கி கட்டிட தொழில் வேலைகள் செய்யும் மக்களுக்கு ஒரு இடத்தில் நிலையான வீட்டுமனை இல்லாமல் அவர்கள் சில பகுதிகளில் நீண்ட ஆண்டுகளாக குடியிருக்கும் இடத்திலேயே நிரந்தர வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும்.

கட்டுமான தொழிலில் சிறந்து விளங்க கூடிய போயர் ஓட்டர் இன மக்களுக்கு அவர்கள் குலத்தொழிலாக செய்து வரும் செங்கல் தயாரித்தல் மர சிற்ப வேலைகள் கிணறு வெட்டுதல் சாலை போடுதல் கல் உடைக்கும் தொழில் இந்த தொழில் செய்ய கூடிய மக்களுக்கு அந்த தொழில்களுக்கு தேவையான தளவாடப் பொருட்கள் மற்றும் இயந்திரங்களை மானிய விலையில் வழங்கிட வேண்டும்.

போயர் ஓட்டர் இன மக்கள் மேற்கொள்ளும் ஆபத்தான வேளைகளில் அவ்வப்போது ஏற்படும் உயிர் இழப்புக்கள் அரசு அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மற்றும் உடல் ஊனத்திற்கு 5 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் மேலும் அணைத்து நபர்களுக்கும் அரசின் காப்பீடு வழங்கிட வேண்டும் என்று இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக கூறினார்.

****

Recent Posts

𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘔𝘦𝘥𝘪𝘢 𝘞𝘰𝘳𝘬𝘴 𝘱𝘳𝘦𝘴𝘦𝘯𝘵𝘦𝘥 𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘈𝘸𝘢𝘳𝘥𝘴 2024 𝘩𝘰𝘯𝘰𝘶𝘳𝘪𝘯𝘨 𝘊𝘪𝘯𝘦𝘮𝘢 𝘊𝘦𝘭𝘦𝘣𝘳𝘪𝘵𝘪𝘦𝘴, 𝘗𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘪𝘢𝘯𝘴 & 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳𝘴, 𝘋𝘰𝘤𝘵𝘰𝘳𝘴, 𝘐𝘈𝘚 & 𝘐𝘋𝘈𝘚 𝘖𝘧𝘧𝘪𝘤𝘦𝘳𝘴