தமிழ்நாடு முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஓட்டப்பந்தய வீரர் தினேஷ் கண்ணன் அவர்கள் லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை
சென்னை: குன்றத்தூர் ஒன்றியம் நடுவீரப்பட்டு ஊராட்சியை சேர்ந்த திரு தினேஷ் கண்ணன் என்பவர் கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட தமிழ் நாடு அரசு முன்கள பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தனி நபர் மாரத்தான் நிகழ்வில் 1005 கிலோ மீட்டர் ஓடி லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். 2022 அன்று ஜனவரி 7 நாள் கன்னியாகுமரியில் துவங்கிய நிகழ்வு 2022 ஜனவரி 17 அன்று சென்னை மெரினா கலைஞர் மு கருணாநிதி நினைவிடத்தில் நிறைவு செய்தார் .
Youtube Video👇👇
இந்த நிகழ்விற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தாம்பரம் மணிமங்கலம் தனலட்சுமி பொறியியல் கல்லூரி உள் அரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரமேஷ் அவர்கள் தலைமை வகித்தார்.லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல் சான்றிதழ் வழங்கினார். தலைமை அதிகாரி கார்த்திக் குமார் பதக்கம் அணிவித்தார். நிர்வாக இயக்குனர் மோனிகா ரோஷிணி அதனை உலக சாதனையாக அறிவித்தார்.நிர்வாக அதிகாரி உமா செல்வம் வாழ்த்துரை வழங்கினார்.
இந்த நிகழ்வில் உடன் பயணித்த அனைவருக்கும் உலக சாதனை வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக உடற்பயிற்சியாளர் டேனியேல் விக்டர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வினை ஐஸ்வர்யா தொகுத்து வழங்க ஹரிஹரன், சஞ்சய் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.கல்லூரி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.
****