தமிழக அரசு அறிவித்த திருமணங்களில் பங்கேற்பவர்களின் 100 எண்ணிக்கையை பரிசீலனை செய்ய அனைத்து கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை


சென்னை, ஜனவரி 02, 2021: தமிழ்நாடு அனைத்து கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தின் ஆண்டு விழா இன்று மாலை 06.00 மணியளவில் மாங்காடு கார்த்திக் பேலஸில் சென்னையில் நடைபெற்றது நிகழ்ச்சி குத்து விளக்கு ஏற்றி, மங்கள வாத்தியதுடன் துவங்கியது. சங்கத்தின் மாநில, மாவட்ட சங்க பொறுப்பாளர்கள், நிர்வாக குழுவின் உறுப்பினர்கள், மண்டப உரிமையாளர்கள் மற்றும் தமிழ்நாடு சுபநிகழ்ச்சிகள் சார்ந்த தொழில் செய்பவர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், பங்கேற்றனர்.

Youtube Video👇👇

வரவேற்புரை: திரு. எஸ்.எஸ்.எஸ் சந்திரன் - மாநில துணை தலைவர், நிறுவனர், கார்த்திக் பேலஸ், மாங்காடு, சென்னை


சங்க சிறப்பு உரை உரை: திரு. அ.ஜான் அமல்ராஜ்.- - மாநில தலைவர், நிறுவனர். மகிழ் மஹால், குரோம்பேட்டை, செங்கல்பட்டு


சங்க சிறப்பு உரை: திரு. அன்பழகன் ப்ரதர்ஸ், நிறுவனர் Sri N சடையப்ப திருமண மண்டபம் உரிமையாளர் & அணைத்து கல்யாண மண்டப உரிமையாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர்

நன்றியுரை: திரு என்.பி.ஆர். மனோகர் - மாநில பொருளாளர், நிறுவனர் என்.பி.ஆர் திருமண மண்டபம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு.


இந்த கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்த திருமணங்களில் பங்கேற்பவர்களின் 100 எண்ணிக்கையை பரிசீலனை செய்ய அனைத்து கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அப்போது அ.ஜான் அமல்ராஜ்.- - மாநில தலைவர் பேசியதாவது: 
ஒரு மாதத்தில் மூன்று முதல் ஐந்து திருமணங்கள் மட்டுமே நடைபெறுகின்றன, இது தினசரி அல்லது மாதம் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சி இல்லை, அறிகுறி இல்லாத மக்கள் மட்டும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு, உணவு அருந்தி Floating முறையில் உடனே வெளியேறுகிறார்கள்.

திருமணங்கள் ரத்து செய்யப்பட்டால், வாடிக்கையாளர்களுக்கு பண இழப்பு, பொருள் இழப்பு மற்றும் அவர்களின் பிள்ளைகளின் திருமணத்தை ரத்து செய்வது ஒரு தீர்க்க முடியாத மன வேதனையாகும்.

மேலும் திருமணங்கள் ரத்து செய்யப்பட்டால், அல்லது குறைந்த எணிக்கையில் திருமணங்கள் நடைபெற்றால், திருமணத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 30 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்கள் (மலர் அலங்காரம் செய்பவர்கள், புகைப்படம், வீடியோகிராஃபர்கள், ஒலி மற்றும் ஒளி இயக்குபவர்கள், பூசாரிகள், துப்புரவு பணியாளர்கள், சமையல்காரர்கள், இசை ஆர்கெஸ்ட்ரா, டிஜே, நாதஸ்வரம் கலைஞர்கள், மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து மீண்டும் பெரும் பட்டினியில் வாடுவார்கள்.

பங்கேற்பாளர்கள் மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதை மண்டப நிர்வாகம் வலியுறுத்தும் மேலும் கிருமிநாசினி வழங்கப்பட்டு, வெப்பநிலை சரிபார்க்கப்படும்.

திருமண மண்டபத்திற்கு வரும் பங்கேற்பாளர்கள் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் மற்றும் பிற அரசாங்க விதிமுறைகளைப் பின்பற்றி திருமணங்கள் நடத்தப்படுவதையும் மண்டப நிர்வாகம் வலியுறுத்தும்.

எனவே தமிழக அரசு திருமணங்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்காமல் மாற்றாக மண்டப அளவிற்கேற்ப 50% விருந்தினரைக்கொண்டு திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களை திருமணங்களை அனுமதித்து அரசாணையை வழங்கி திருமணத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 30 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்கள் அவர்களுடைய குடுபத்தினரியென ஒரு கோடி தமிழரின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டி அன்புடன் இந்த கோரிக்கையை தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கிறோம்.

****

Recent Posts

𝘈𝘤𝘶𝘱𝘶𝘯𝘤𝘵𝘶𝘳𝘦 𝘤𝘢𝘯 𝘤𝘶𝘳𝘦 𝘢𝘭𝘭 𝘗𝘩𝘺𝘴𝘪𝘤𝘢𝘭, 𝘔𝘦𝘯𝘵𝘢𝘭 𝘢𝘯𝘥 𝘓𝘪𝘧𝘦 𝘳𝘦𝘭𝘢𝘵𝘦𝘥 𝘥𝘪𝘴𝘦𝘢𝘴𝘦𝘴; 𝘌𝘹𝘱𝘦𝘳𝘵𝘴 𝘚𝘱𝘦𝘢𝘬 𝘥𝘶𝘳𝘪𝘯𝘨 "𝘒𝘯𝘰𝘸 𝘋𝘪𝘴𝘦𝘢𝘴𝘦 - 𝘕𝘰 𝘋𝘪𝘴𝘦𝘢𝘴𝘦" 𝘉𝘰𝘰𝘬 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩