தமிழ்நாடு குவாரிகளில் நடக்கும் ஊழலை எதிர்த்து Dec 27 & Jan 27ல் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: அனைத்து எம். சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு


சென்னை, டிசம்பர் 13, 2021: தமிழ்நாடு குவாரிகளில் நடக்கும் ஊழலை எதிர்த்து Dec 27 & Jan 27ல் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அனைத்து எம். சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் S.யுவராஜ் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார். அவருடன் காஞ்சி S.தீனன், தலைவர், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம், IKS நாராயணன், தலைவர், தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி நல சங்கம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Youtube Video👇👇


அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் கட்டுமான தொழில்கள் அதிகமாக நடைபெறுகின்றன. சென்னையில் மட்டும் 50 சதவீதம் கட்டுமான தொழில்கள் நடைபெறுகின்றன. இதை பயன்படுத்தி சில தனியார் கல்குவாரி உரிமையாளர்கள் விதிகளை மீறி கனிமவளங்களை (மலைகள்) உடைத்தும் அழித்தும் கருங்கல் ஜல்லி, M.Sand உற்பத்தி செய்கிறார்கள். இதனால் தமிழக அரசுக்கு தெரியாமல் பல மலைகள் காணாமல் போகின்றன. தனியார் கல்குவாரிகள் அரசு நிர்ணயித்த ஹெக்டர் அளவைக் காட்டிலும் 300 அடி ஆழத்தில் பாறைகள் உடைக்கப்படுகின்றன.

சென்னைக்கு அருகிலிருக்கும் திரிசூலம், நல்லம்பாக்கம், எருமையூர், திருநீர்மலை, மலப்பட்டு போன்ற பகுதிகளில் கனிமவளத்துறை அனுமதி இல்லாமல் 250 கல்குவாரிகளில் கனிமங்கள் எடுக்கப்படுகின்றன. பொதுப்பணித்துறை அனுமதி இல்லாமல் M.Sand குவாரிகள் செயல்படுகின்றன. இந்த குவாரிகளில் Transit Pass + GST Bill இல்லாமல் விற்பனை செய்கிறார்கள். தரமில்லாத M.Sand-களை இந்த குவாரிகளில் விற்பனை செய்தும், அதிகபாரமும் ஏற்றுகிறார்கள். இதன் மீது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தமிழக கனிமங்கள் மற்றும் புவியியல் சுரங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். GST Bill இல்லாமல் கனிமங்கள் விற்பனை செய்தால் தமிழக அரசுக்கு அதிகமான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதிகபாரம் ஏற்றி லாரிகள்வி பத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு தொகை (Insurance) கிடைப்பது இல்லை.

மேலும் கல்குவாரி மற்றும் கிரஷர்கள் அரசிடம் 10 சதவீதம் அரசிடம் அனுமதி பெற்றுக் கொண்டு மூலப்பொருட்கள் (சக்கை) கொள்முதல் செய்து 100 சதவீதம் உற்பத்தி செய்வதால், எங்கள் லாரிகளில் M.Sand மற்றும் ஜல்லிகளை பணம் கொடுத்து வாங்கியும் அதற்கு உரிய Transist Pass மற்றும் GST Bill வழங்குவதில்லை. எனவே அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தும் போது பணம் கொடுத்து வாங்கிய எங்கள் டிரைவர் மற்றும் லாரி உரிமையாளர்கள் மீது 379, 430 PC, MM Act 21, TNPPDA Act 1984 வழக்கு பதியப்படுகின்றது. எனவே எங்களுக்கு கனிமத்தை ஏற்றிவிட்ட கிரஷர் உரிமையாளரை முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்க வேண்டும். இப்படி தாங்கள் நடவடிக்கை எடுத்தால் தான் கனிம கொள்ளையில் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் ஈடுபடமாட்டார்கள்.

மேலும் கடந்த காலங்களில் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகளை அரசே நடத்தியது. இதனால் அரசுக்கு நேரடி வருமானம் கிடைத்தது. தற்பொழுது சில ஆண்டுகளாக ஒட்டுமொத்தமாக தனியாரிடம் வழங்கப்பட்டதால் (தற்பொழுது தனியார் வசம் உள்ளதால்) ஆண்டுக்கு வெறும் 150 கோடி வருவாய் மட்டுமே கிடைக்கிறது. எனவே அரசு ஏற்று நடத்தினால் சுமார் 5000 கோடிகள் வரை ஆண்டுக்கு வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் லாரி உரிமையாளர்கள் மற்றும் அனைத்து சங்கங்களும் நாங்கள் ஒருமித்த முடிவாக எந்த கனிமத்தையும் அதிகபாரம் (Overload) ஏற்றுவது இல்லை முடிவு செய்து நடைமுறைப்படுத்தி வருகின்றோம். எங்கள் முயற்சியை சீர்குலைக்கும் வகையில் கனிம கொள்ளையில் ஈடுபட்டுள்ள கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் உற்பத்தி செய்த M.Sand, ஜல்லி போன்ற திருட்டு கனிமத்தை அதிகப்படியாக விற்பனை செய்யும் வகையில் லாரிகளில் அதிகபாரம் (Overload) தொடர்ந்து ஏற்றி விடுகிறார்கள். எனவே மோட்டார் வாகன சட்டப்படி அதிகபாரம் ஏற்றும் குவாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கருங்கல் குவாரிகளில் லாரிகளில் M.Sand கருங்கல் ஜல்லி லோடு ஏற்றும் பொழுது மோட்டார் வாகன சட்டம் நிர்ணயம் செய்த எடையை விட அதிகபாரம் (Over Load) தவிர்க்க வேண்டும். தமிழக அரசு கடுமையாக இந்த சட்டங்களை (Section 113, 113(3), 114, 199 & 194 of theMV Act 1988) (Prevention ofDamage to Public Property Act 1984) (Contempt of Hon'ble Supreme Court Judgement on Overloading issued on November 9, 2005 on writ Petition Civil No: 136 of 2003) (Section 199 of MV Act 1988 mentions off-loading the excess load and making Consignor, Consignee and the Transporter accountabie for perpetrating this criminal offence) உடனடியாக அதிகாரிகளை வைத்து இந்த சட்டங்களை அமல்படுத்தி அதிகபாரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள போலியான M.Sand குவாரிகளை கண்டறிந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து மூடவேண்டும். மேலும் தரமான கட்டிடங்கள் உருவாக மணல் குவாரிகளை தமிழக அரசு உடனடியாக திறக்க வேண்டும்.

ஆந்திர மாநிலத்திலிருந்து கவரப்பேட்டை, ஊத்துக்கோட்டை, பெரியபாளையும், திருத்தணி வழியாக சுமார் 400 லாரிகள் தரச்சான்று இல்லாத அதிகபாரத்துடன் மணல் மற்றும் Silicon Sand எடுத்துக் கொண்டு சென்னைக்கு வருகின்றனர். இந்த லாரிகளை தடுக்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சென்னையில் K.P.Park Building தரமற்ற M.Sandஐ பயன்படுத்தி கட்டியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து சுமார் 700 லாரிகளில் கட்டுமான பொருட்களை M.Sand, Blue Metal அதிகபாரம் (Overload) ஏற்றிக்கொண்டு தினமும் பெங்களுருக்கு Transit Pass + E Way Bill + GST Bill இல்லாமல் செல்கின்றன. மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, கோவை மாவட்டங்களில் மலைகளை உடைத்து கருங்கல் ஜல்லி, M. Sand ஏற்றிக்
கொண்டு சுமார் 800 லாரிகள் அதிகபாரம் (Over Load) ஏற்றிக் கொண்டு Transit Pass + EWay Bill + GST Bill இல்லாமல் தினமும் கேரளாவுக்கு செல்கின்றன. இந்த லாரிகளை மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் புவியியல் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தடுப்பதில்லை. இதனால் தமிழக அரசுக்கு அதிகமாக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றினால் தமிழக அரசுக்கு ரூபாய் 5000 கோடி வருவாய் கிடைக்கும்.

கடந்த நான்கு மாதமாக மாண்புமிகு தமிழக நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களை நேரில் சந்தித்து, அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அனுமதியில்லாமல் 4000-க்கும் அதிகமான போலியான கிரஷர்களில் தரமற்ற எம்.சாண்ட் உற்பத்தி செய்கிறார்கள். கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான லோடு கனிமங்கள் கடத்தப்படுகிறது. 

பல தமிழகத்தில் அதிகபாரத்தினால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கக் கோரியும், தமிழக துறைமுகத்திலிருந்து 20 லட்சம் டன் கனிமங்கள் பங்களாதேஷ்-க்கு கடத்தப்படுவதை தக்க ஆதாரங்களுடன் தெரியப்படுத்தியும், இதுநாள் வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் 27.12.2021 திங்கட்கிழமை மிகப்பெரிய அளவிலான ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும், மேலும் இதன்பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் 27.01.2022 முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் செய்வதென அனைத்து எம்.சாண்ட், மணல் லாரி சங்கங்களின் கூட்டமைப்புகள் ஒருமித்த கருத்தாக முடிவெடுத்துள்ளதாக கூறினார்கள்.

****


Recent Posts

𝘜𝘮𝘢 𝘌𝘺𝘦 𝘊𝘭𝘪𝘯𝘪𝘤, 𝘊𝘩𝘦𝘯𝘯𝘢𝘪 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘗𝘙𝘌𝘚𝘉𝘠𝘖𝘕𝘋 𝘓𝘢𝘴𝘦𝘳 𝘛𝘳𝘦𝘢𝘵𝘮𝘦𝘯𝘵 𝘧𝘰𝘳 𝘤𝘰𝘳𝘳𝘦𝘤𝘵𝘪𝘰𝘯 𝘰𝘧 𝘙𝘦𝘢𝘥𝘪𝘯𝘨 𝘎𝘭𝘢𝘴𝘴𝘦𝘴 𝘱𝘰𝘸𝘦𝘳; 𝘍𝘪𝘳𝘴𝘵 𝘵𝘪𝘮𝘦 𝘪𝘯 𝘛𝘢𝘮𝘪𝘭𝘯𝘢𝘥𝘶

14𝘵𝘩 𝘊𝘰𝘯𝘷𝘰𝘤𝘢𝘵𝘪𝘰𝘯 𝘩𝘦𝘭𝘥 𝘢𝘵 𝘉.𝘚.𝘈𝘣𝘥𝘶𝘳 𝘙𝘢𝘩𝘮𝘢𝘯 𝘊𝘳𝘦𝘴𝘤𝘦𝘯𝘵 𝘐𝘯𝘴𝘵𝘪𝘵𝘶𝘵𝘦 𝘰𝘧 𝘚𝘤𝘪𝘦𝘯𝘤𝘦 𝘢𝘯𝘥 𝘛𝘦𝘤𝘩𝘯𝘰𝘭𝘰𝘨𝘺; 𝘛𝘰 𝘣𝘦𝘤𝘰𝘮𝘦 𝘢𝘯 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳 𝘐𝘯𝘴𝘵𝘪𝘵𝘶𝘵𝘦