தமிழ்நாடு அரசு கிராம மேல்நிலை நீரத்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களின் கோரிக்கைகள்
சென்னை, அக்டோபர் 26, 2021: தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிர்தேக்கதொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாநில செயற்குழு கூட்டம் சென்னை எழிலகம் பின்புறம் நடைபெற்றது. அதன் பிறகு மாநில கூட்டமைப்புத் தலைவர் M.செல்வம் அவர்கள் தலைமையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அவருடன் துணைத்தலைவர்கள் K.G.ராஜேந்திரன் (தர்மபுரி), D.சாமிதுரை (கடலூர்) மேலும் மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Youtube Video👇👇
அப்போது அவர் மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பற்றி கூறினார்.
1) தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் 10, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குவோர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி 153 வது பத்தியின்படி காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்துதல்;
2) கிராம ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க கூடுதல் தொட்டி இயக்குவோர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி ஊதியம் வழங்க வலியுறுத்தல்;
3) கிராம ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதியம் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி வழங்க வலியுறுத்தவும், 7வது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதியம் குறைவாக வழங்கப்பட்டு வருகிறது. அதை சரிசெய்து அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வை வழங்கவும், இன்னும் ஊராட்சி பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்காதவர்களுக்கு வழங்க வலியுறுத்தல்.
4) கிராம ஊராட்சியில் பணிபுரிகின்ற தூய்மை காவலர்களுக்கு ஊராட்சியில் பணிப்பதிவேடு (SR) பதிவு செய்ய வலியுறுத்துதல்.
5) கிராம ஊராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு அரசு அறிவித்த 1400 ரூபாயும் தமிழக அரசு வழங்காத நிலையில் அதை வழங்க வலியுறுத்துதல் ஆன்லைன் மூலம் விடுப்பட்ட பணியாளர்களின் பெயரை TNRT வெப்சைட்டில் பெயர் சேர்த்தல் வலியுறுத்துதல்
6) 12,525 கிராம ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலைநீர்தேக்க தொட்டி இயக்குபவர் சுமார் 42,000- த்திற்கும் மேல் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும், ஓய்வு பெறுபவர்களுக்கும் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு பணிக்கொடை மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
7) தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குவோர், துப்புரவு பணியாளர், தூய்மை காவலர்கள் ஆகியோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு மிகப்பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேற்கண்ட எங்களுடைய 7 கோரிக்கைகளையும் விரிவான தகவலை தங்களுடன் பகிர்ந்துக் கொண்ட ஊரக பிரிவிலிருந்து, நிருபர் மற்றும் புகைப்பட கலைஞர்களை அனுப்பி செய்தி சேகரித்து வெளியிடுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
****