தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்களுக்கு கருணை அடிப்படையில் பணிவழங்கிட முதல்வருக்கு சங்கத்தினர் கோரிக்கை


சென்னை, ஜூலை 12, 2021: தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்களுக்கு கருணை அடிப்படையில் பணிவழங்கிட முதல்வருக்கு சங்கத்தின் கோரிக்கை சார்பாக மாநில தலைவர் க.இராஜா தலைமையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அவருடன் மாநில பொது செயலாளர் மு.பழனி, மாநில பொருளாளர் சி.காமராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Video👇👇


அப்போது க.இராஜா கூறியதாவது, கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் ஒரு நாட்டின் வளர்ச்சி முழுமையடைந்ததாக கருதப்படும் என்ற லட்சிய கோட்பாட்டை மனதில் கொண்டு அந்த செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக ''மக்கள் நலப்பணியாளர்கள்'' என்ற பணியிடத்தை எங்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்து இருக்கிற எங்கள் நெஞ்சமெல்லாமல் நிறைந்துள்ள அன்புத்தலைவர் முத்தமிழறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டவர்கள் நாங்கள்.

அதன் காரணமாகவே ஜெயலலிதா ஆட்சியில் மூன்று முறை தொடர்ந்து பழிவாங்கப்பட்டோம். இளமை வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றோம். 2014-ம் ஆண்டு பணி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் திரு. சத்யநாராயணன், திரு. பால்வசந்தகுமார் அவர்கள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் உள்ள கடந்தகால அதிமுக அரசின் தடை உத்திரவை திரும்ப பெற்று, ஒவ்வொரு முறையும் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் எங்களுக்கு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் பணி வழங்குவாரோ, அதேப்போன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழக அரசில் உள்ள அனைத்து துறைகளில் உள்ள காலிப்பணி யிடங்களில் அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்ப பணி ஆணையை தங்கள் திருக்கரங்களால் பணியாணை வழங்கி 13500 குடும்பங்களை மீண்டும் வாழவைத்திடுமாறு தங்களை பணிவோடு இப்பொதுக்குழு வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

முத்தமிறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் பணியமர்த்தபட்பட்டவர்கள் என்ற ஒரே நோக்கத்திற்காக சதிகாரி, நாசக்காரி ஜெயலலிதாவால் மூன்றுமுறை பழிவாங்கப்பட்டு, இளமை வாழ்க்கையை இழந்து நூற்றுக்கணக்கான மக்கள் நலப்பணியாளர்களின் உயிரை இழந்து நடுத்தெருவில் நிற்கும் பணியாளர்கள்வாழ்வாதாரங்களை இழந்து பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் பரிதவித்த எங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் திருமிகு. சத்தியநாராயணன், திருமிகு. பால்வசந்தகுமார் ஆகியோர் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை கல்வித்தகுதிக்கேற்ப தங்கள் திருக்கரங்களால் பணியினை வழங்கி பணியாளர்களின் குடும்பங்களை காப்பாற்றிடுமாறு இப்பொதுக்குழு ஏகமனதாக கேட்கின்றது.

மக்கள் நலப்பணியாளர்கள் முதன் 1990ல் பணியமர்த்தப்பட்ட ஆண்டு முதல் கணக்கில் கொண்டு ஜெயலலிதாவால் பணிநீக்கம் செய்யப்பட்ட காலங்களை ஊதியம் இல்லா பணிகாலமாக கணக்கில் கொண்டு சர்வீஸ் சலுகைகள் கணக்கிடப்பட வேண்டும். மேலும் தற்போது அதிமுக அரசால் மூன்றாவது முறையாக பணி இழந்து 10 ஆண்டுகாலத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வறுமையில் தன் குடும்பத்தை காப்பாற்ற வழி தெறியாமல் இறந்துவிட்டனர். மேலும் தற்போது 60 வயது கடந்து பணிக்கிடைக்காதா என்று காத்திருந்து வயது முதிர்ந்த 60 வயதிற்கும் மேற்பட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்கள் பணி வழங்கி வாழவைத்திடுமாறு இப்பொதுக்குழு ஏகமனதாக கேட்டுக்கொள்கிறது.

****

Recent Posts

𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘔𝘦𝘥𝘪𝘢 𝘞𝘰𝘳𝘬𝘴 𝘱𝘳𝘦𝘴𝘦𝘯𝘵𝘦𝘥 𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘈𝘸𝘢𝘳𝘥𝘴 2024 𝘩𝘰𝘯𝘰𝘶𝘳𝘪𝘯𝘨 𝘊𝘪𝘯𝘦𝘮𝘢 𝘊𝘦𝘭𝘦𝘣𝘳𝘪𝘵𝘪𝘦𝘴, 𝘗𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘪𝘢𝘯𝘴 & 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳𝘴, 𝘋𝘰𝘤𝘵𝘰𝘳𝘴, 𝘐𝘈𝘚 & 𝘐𝘋𝘈𝘚 𝘖𝘧𝘧𝘪𝘤𝘦𝘳𝘴