தமிழ்நாட்டில் உள்ள அழகு நிலையங்களை திறக்க அனுமதிக்க வேண்டி கோரிக்கை : மாநில தலைவர் முத்துலட்சுமி பேட்டி
சென்னை, மே 05, 2021:
தமிழ்நாடு அழகு நிலையங்கள் சார்பாக மாநில தலைவர் திருமதி முத்துலட்சுமி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள அழகு நிலையங்களை திறக்க அனுமதிக்க வேண்டி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். அப்போது மாநில பொதுச் செயலாளர் வசந்தி சங்கர், இந்திய துணைத்தலைவர் அந்தோணி டேவிட், சென்னை தலைவர் அனு ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Video👇👇
கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடு விதிகளில் சலூன், அழகுநிலையங்கள் அடைக்கப்பட வேண்டும் என்ற அரசு அறிவிப்பு வந்திருக்கிறது. சென்ற ஆண்டில் கொரோனா முதற்கட்ட பரவல் ஊரடங்கில் எங்களுக்கு அரசிடமிருந்து எந்த ஒரு உதவியும், நிவாரணமும் கிடைக்கவில்லை. அந்த பொருளாதார பின்னடைவிலிருந்து மீண்டு வர முடியாத இந்த சூழ்நிலையில் மீண்டும் தமிழகத்தில் உள்ள அழகுக்கலை நிலையங்கள் அடைப்பு எங்களுக்கு பேரதிர்ச்சியையும், பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது.
(L to R) மாநில பொதுச் செயலாளர் வசந்தி சங்கர்; மாநில தலைவர் முத்துலட்சுமி; இந்திய துணைத்தலைவர் அந்தோணி டேவிட்; சென்னை தலைவர் அனு ரமேஷ் |
எனவே இந்த அறிவிப்பை மறு பரிசீலகை செய்து எங்கள் வாழ்வாதாரத்திற்கு தமிழகத்தில் உள்ள அழகுக்கலை நிலையங்களை திறக்க அனுமதிக்க வேண்டுகிறோம்.
கொரோனா நோய்த்தொற்றின் வீரியத்தை, பரவலை நன்கு அறிவோம். நோய்த்தொற்று பரவாத வண்ணம் பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டும் நெறிமுறைகளை சிறப்பாக கடைபிடித்து நோய்த்தொற்று பரவாமல் பாதுகாப்போடு பணிசெய்வோம் என்று உறுயளிக்கிறோம். எங்கள் துறைக்கு சார்ந்த அரசாங்க நிவாரண உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திருமதி முத்துலட்சுமி,
மாநில தலைவர்,
All India Hair & Beauty Association
Tamilnadu Beauty & Hair Dressers Association, 149, 61, Kodambakkam High Road, T.Nagar, Chennai - 600017
****