தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு தேர்தல் வாக்குறுதி அளித்திட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள்
- சட்டமன்ற தேர்தல் 2021 வாக்குறுதியில் பட்டியலிட சுதந்திர வாடகை வாகன சங்கத்தின் சார்பாக வேண்டுகோள் -
மதிப்பிற்குரிய ஐயா/அம்மா:
அரசு நிறுவும் பட்சத்தில் நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆட்டோ பிரிவு:
*ஆட்டோ தொழிலாளர்களுக்கு மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களில் திரையரங்குகளில், சுற்றுலாத்தலங்கள், விமான நிலையம், ரயில் நிலையம்,பேருந்து நிலையம்,மற்றும் வழிபாட்டு தலங்களில்மக்களிடம் நேரடியாக வணிகம் செய்யும் வகையில் பிற மாநிலங்களில் குறிப்பாக புதுடெல்லி மும்பை போன்று வாகன நிறுத்துமிடம் உருவாக்கிமக்களை வாகனங்களில் ஏற்றுவதற்கும் பயணிகளுக்கு இறங்குவதற்கும் வழிவகை செய்து தரவேண்டும்.
*பெண் ஆட்டோ, கார் ஓட்டுநர்தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 32 வயதிற்கு மேற்பட்டவர்களே இப்பணியில் ஈடுபடுகின்றனர். குடும்ப சூழல் பணி பாதுகாப்பு தொழில் முதலீட்டை கருத்தில் கொண்டு அரசு உயர் அதிகாரிகளின் வாகனங்களுக்கு பெண் ஓட்டுனர்களை அரசு வேலைவாய்ப்பை அளித்திட வேண்டும்
* ஓய்வுபெற்ற போக்குவரத்து ஆணையர் தலைமையில் சங்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்டு தமிழகம் முழுவதும் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை பொருளாதார சூழலுக்கு ஏற்றார்போல் 6 மாதத்திற்கு ஒருமுறை மீட்டர் கட்டணத்தை வரையறை செய்து முதல்வரின் நேரடி பார்வையில் இயங்க வேண்டும்.
*தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இயலாமையை வரையறை செய்வதும் விலக்கு அளித்தும் போக்குவரத்து ஓட்டுநர் உரிமம் பெற வழிவகை செய்ய வேண்டும்.
(L to R) இளங்கோவன், தலைவர், சரக்கு வாகனப்பிரிவு; ஜுட் மேத்யூ, மாநில பொதுச்செயலாளர், TIPVODA; சத்தியா, சென்னை மாவட்ட செயலாளர்; சுரேஷ், தலைவர், ஆட்டோ பிரிவு |
கால் டாக்ஸி பிரிவு:
தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் இயக்கப்படும் கால் டாக்ஸி களுக்கு கால் டாக்ஸி வரையறை சட்டம் கொண்டு இத்தொழிலை முறைப்படுத்த வேண்டும்
*கால் டாக்ஸி களுக்கு தனி பர்மிட் மற்றும் அவ் வாகனங்களை தனி வண்ணம் அளித்து அடையாளப் படுத்துவதோடு அவ் வாகனங்களுக்கான வாடகை கட்டணம் கிலோமீட்டர் அடிப்படையில் வாடகை நிர்ணயிக்க வேண்டும்
மேலும் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஆணையர் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்டு 6 மாதத்திற்கு ஒருமுறை விலைவாசி உயர்வுக்கு ஏற்றார்போல் கட்டணம் நிர்ணயிக்க சிறப்பு அதிகாரம் வழங்கிட வேண்டும்.
*நாடு முழுவதும் டிஜிட்டல் வடிவில் செயல்படக்கூடிய பல பன்னாட்டு நிறுவனங்கள் ஓலா மற்றும் உபர் போன்ற நிறுவனங்கள் பன்னாட்டு நிதிகளை கொண்டு இயங்குவதால் உள்ளூர் வாடகை வாகனங்களுக்கு நிகரான கட்டணங்களை வசூலிக்கும் முறையை சலுகை யின்றி எஇந்நிறுவனங்கள் செயல்பட வழிவகை செயல்பட வேண்டும்.
ஐ டி நிறுவனங்கள் பிரிவு:
*ஐடி நிறுவனங்களில் இயக்கப்படும் வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையில் இஎஸ்ஐ, பிஎஃப், ஆண்டு ஊதிய உயர்வு, விடுமுறை மற்றும் பணி நேரம் அந்நிறுவனமே நேரடியாக ஓட்டுநர் பணியாளர்களை பணி அமர்த்துவது இடைத்தரகர் இன்றி நேரடி வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.
சுற்றுலாப்பிரிவு:
*தமிழகத்தில் 12 இருக்கைகளுக்கு மேலாகவும் 26 இருக்கைகளுக்கு குறைவாக இருக்கும் வாகனங்களுக்கு இருக்கை எண்ணிக்கை அடிப்படையில் சீட் பர்மிட் வழங்க வேண்டும்.
*தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக முக்கிய நகரங்களில் கான்கிரீட் தளம் அமைத்து ஓட்டுநர்களுக்கு ஓய்வு அறை மற்றும் கழிவறை அமைத்திட வேண்டும்.
*தமிழகத்திற்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் சுற்றுலா வாகனங்களுக்கு சுங்க கட்டணம் விலக்கு மற்றும் ஆண்டு டீசல் செலவில் 25% சதவீதம் வரி சலுகை செய்திட வேண்டும்.
*தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக 5 பேர் கொண்ட சிறப்பு அமலாக்க பிரிவு அதிகாரிகள் கொண்டு சொந்தப் பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்வோர் இன் வாகனங்களைபறிமுதல் செய்வதோடு வாகனத்தை எழுத்தின் வாயிலாக தமிழக அரசின் வருவாய் ஈட்டும் செயலை செய்திட வேண்டும்.
ஆம்புலன்ஸ் பிரிவு:
* EMRI - தமிழகத்தில் இயக்கப்பட கூடிய அவசர சிகிச்சை வாகன ஓட்டுனர்களுக்கு நேரடியாக அரசு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்னடம் ஒழுங்கு, வட்டாரப் போக்குவரத்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறை அதிகாரிகள் தர குறைவாக நடத்துவதும் அநாகரிகப் பேச்சுக்கு முற்றுப்புள்ளியும்
மனிதத்துவத்தோடு மக்களின் ஆட்சியாக செயல்பட வேண்டும்.
*போர்ட்டர், லிங்க் போன்ற டிஜிட்டல் செயலி வடிவில் செயல்படக்கூடிய பல பன்னாட்டு நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு அடிப்படை வசதிகளான ஓய்வறை, கழிவறை, வாகன நிறுத்தும் இடம்,பணி நேரங்களை உறுதி செய்வதோடு ஓட்டுனர் தொழிலாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் பெறும் தருணங்களிலேயே வாரியத்தில் பதிவு செய்வதும் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியம் அமைத்து விபத்துகளில் சிக்கும் ஓட்டுனர்களுக்கு ரூபாய் 50,000 உதவி தொகையும் இயற்கை மற்றும் விபத்தில் இறப்போர் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வழிவகை செய்தல் வேண்டும்
வாடகை வாகன உரிமையாளர்களுக்கு ஆண்டுதோறும் 20 ஆயிரம் ரூபாய் மானியமாக வாகன புதுப்பிப்பு காப்பீடு மேலும் பழுதுபார்த்தல் போன்றவைகளை கருத்தில் கொண்டு ஆந்திர மாநில அரசு வாகன மித்ரா திட்டத்தை போன்று தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும்.மேலும் வாகன உரிமையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் எளிதாக விபத்துகளில் சம்பவ இடத்திலேயே சிஎஸ்ஆர், எஃப்ஐஆர் புகார் பதிதல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அதோடு வழக்கு தருணங்களில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆன்லைன் முறையில் விபத்தை ஆய்வு செய்து தகுந்த சான்றிதழ் வழங்கும் முறையை டிஜிட்டல் முறையை அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் இயங்கக்கூடிய ஆட்டோ கால்டாக்சி சுற்றுலா வாகனங்கள் சுமார் 7 லட்சம் வாகனங்கள் உள்ளன இவ் வாகனங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை போன்று தமிழக வாடகை வாகனங்களுக்கான மக்கள் சேவையை செயலி மற்றும் தொலைபேசி அழைப்பின் வாயிலாக வாடகை வாகன சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் இதன் வாயிலாக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 12கோடி வருவாய் ஈட்டமுடியும் இத்திட்டத்தில் தமிழகத்தில் 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலை கிடைக்கும் சூழ்நிலை உருவாகும் மக்களுக்கும் எளிதாக வாடகை வாகன சேவையை பெற முடியும் தமிழக வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் சாங்ஸ் கம் ஓட்டுநர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமையும்.
முதல்வர் காப்பீட்டு திட்டத்திற்கு இணையாக சிறப்பு புதிய காப்பீடு திட்டத்தை வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு வழங்கிட வேண்டும் மற்றும் உயிருக்கு எந்தவித பாதுகாப்பும் இன்றி பணி செய்யும் ஓட்டுனர்களுக்கு ஓட்டுநர் உரிமம் அடிப்படையில் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் பெண்கள் சுய தொழில் முனைவோருக்கு வாடகை வாகனம் (auto,car,tempo) வாங்குவதற்கான குறைந்த வட்டியில் கூட்டுறவு வங்கியில் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
இப்படிக்கு
ஜூட் மேத்யூ
9092996999, 9789938099, 7401556889, 9551222462
மாநில பொது செயலாளர்,
தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம்
****