தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை || புதிய சங்கம் தொடக்கம்
சென்னை, பிப்ரவரி 21, 2021:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 21-02-2021 அன்று சென்னை பல்லாவரம் சிவந்தி ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வணிகர் சங்க மூத்த நிர்வாகி திரு. D. பாலகிருஷ்னன் அவர்கள் தலைமையில், ஒருங்கிணைப்பாளர்கள் K.தேவராஜ், S.சௌந்தர்ராஜன் (ராஜா) P.தேவராஜ், VA.கருனாநிதி, திருநின்றவூர் சாலமோன், ஆரணி L.குமார், ஆலந்தூர் P.கனேசன், நியூராயல் S.பீர் முகமது, பசும்பொன் இரா லெனின், A.ஆல்பர்ட் அந்தோனி, SRP. ராஜன், சுவாமி தேஜானந்த் இவர்கள் முன்னிலையில் நடை பெற்றது.
Video👇
இன்று இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலனவர்களின் கருத்தினை ஏற்று வரும் காலங்களில் வணிகர்களை பாதுகாக்க நாம் தனியாக சங்கம் தொடங்குவதென முடிவெடுத்து இயற்றப்பட்ட தீர்மானங்கள்.
(1) தனியாக சங்கம் தொடங்குவது எனவும், தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை என பெயர் வைக்கவும் தீர்மானிக்கப் பட்டது. இதன் அமைப்பாளராக திரு.D, பாலகிருஷ்னன் அவர்களும், தலைவராக S.சௌந்தர்ராஜன் அவர்களும், பொதுசெயலாளராக திரு.K. தேவராஜ் அவர்களும், பொருளாளராக திரு, நியூராயல் S.பீர்முகமது அவர்களும் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
(2)வணிக தொழிலுக்கு சட்ட பாதுகாப்பு கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
(3)சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாப்பு
(4)தவறான உள்நோக்கத்துடன் செயல்படும் அரசு அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பு
(6)கந்துவட்டி, அதிக வட்டிக்கு கடன் வாங்கியவர்கள் மீண்டுவர உரிய ஆலோசனை
(7)தொழில் முன்னேற்றம் மற்றும் வணிக முன்னேற்றத்திற்கு உரிய அனுபவமிக்கவர்கள் வல்லுனர்கள் மூலம்வழங்கப்படும்
(9)தொழில் மற்றும் வணிகம் செய்பவர்கள் நவீன காலத்திற்கு ஏற்ப அந்தந்த ஊரிலேயே அவர்கள் தங்கள் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய செயலிகளை தயார் செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
(10) தொழில் மற்றும் வணிகம் செய்பவர்களுக்கு அனைத்து சேவைகளையும் செய்திட சென்னையை தலைமையாகக் கொண்டு ஒரு அலுவலகம் அமைக்கப்படும். அங்குள்ள பணியாளர்கள் தாங்கள் தெரிவிக்கும் பிரச்சனைகளை தெரிந்து கொண்டு, சம்பந்தப்பட்ட வல்லுனர்களுக்கு தெரிவித்து உரிய தீர்வு பதில் தருவார்கள், காலப்போக்கில் மாநிலத்தை பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து ஆங்காங்கு தனித்தனி அலுவலகங்கள் செயல்படும்.
(11) வணிகர்கள், தொழில்துறையினர், தொழிலாளர்கள் ஆகியோருக்கு தனிநபர் பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு, தொழில் உரிமை பாதுகாப்பு, விபத்து பாதுகாப்பு, காப்பீடு பெற்றுத்தர உரிய ஆலோசனை மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும்.
(12) வங்கி கடன்கள் பெறுவதற்கு உரிய ஆலோசனைகள் வழிமுறைகள் தெரிவிக்கப்படும்.
(13) சங்கத்தின் சார்பில் மாதம் இருமுறை வெளிவரும் பத்திரிகை டிஜிட்டல் வடிவில் வெளிவரும்.
(14)தொழில் மற்றும் வணிகத் துறையினர் தங்கள் தொழில் மற்றும் வணிகம் சம்பந்தமான சட்ட ரீதியான சந்தேகம் பிரச்சனைகள் அனைத்திற்கும் சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள் மூலம் உரிய ஆலோசனை பெற்று வழிகாட்டுதல் வழங்கப்படும்.
(15) இன்றைய தொழில் நுட்பத்திற்கு ஏற்ற வகையில் இணைய தளம் (website) உருவாக்கி சங்க நிர்வாகிகளின் பெயர் விலாசம் பதிவேற்றப்படும்.
****