தமிழ்நாடு & பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு, பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை

பத்திரிக்கையாளர் சந்திப்பு

சென்னை, 6 ஐனவரி, 2021: தமிழ்நாடு நுகர்வோர் நலன் கருதி நுகர்வோர் இயக்கங்களின் சார்பில் தமிழ்நாடு & பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு, பெட்காட் தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பு மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராட்ச்சி மையம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் தமிழ்க அரசுக்கு கோரிக்கை.

நுகர்வோர் தொடர்பான வழக்குகளுக்கு தாமதமின்றி நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக 1987-ல் நீதித்துறையின் கீழுள்ள வழக்கமான கோர்ட்டுகளோடு இணைக்கப்படாமல் தனியாக நுகர்வோர் கோர்ட்டுகள் துவக்கப்பட்டன.

நுகர்வோர் குறைதீர் மன்றம் (கோர்ட்,) நுகர்வோர் ஆணையம் என அந்தஸ்து உயர்த்தியுள்ள நிலையில் தலைவராக மாவட்ட நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர்கள் அரசால் நியமிக்கப்படுகின்றனர். நுகர்வோரது பிரச்னையாக இருப்பதால் உணவு மற்றும் பொது விநியோகத்துறையின் கீழ் இவ் ஆணையங்கள் செயல்படுகிறது. மாநில அளவிலான நுகர்வோர் ஆணையம் சென்னை மற்றும் மதுரையில் உள்ளன. இதேபோல் 32 மாவட்டத்திற்கு நுகர்வோர் குறைதீர் மன்றமும் உள்ளன. 6-புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு என தனியாக நுகர்வோர் கோர்ட் உருவாக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது 20 மாவட்டங்களுக்கு மேல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற (கோர்ட் தலைவர் பணியிடம் காலியாகவுள்ளது. இன்னும் சிலர் வரும் மாதங்களில் ஓய்வுபெற உள்ளனர். நுகர்வோர் குறைதீர் மன்றத்தலைவர் பணியிடங்கள் நாளுக்குநாள் காலியாகிக்கொண்டே போவதால் வழக்குகளில் தீர்வு ஏற்படுவது தாமதம் ஏற்பட்டு நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களில் நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. கூடுதல் பொறுப்பாக நீதிபதிகள் நியமிக்கப்பட்டு பணியாற்றுகின்றனர். (திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு, திருவாரூர், தஞ்சாவூர், திண்டுகல் கடலூர் சேலம் உள்ளிட்டமாவட்டங்களில் ஒரு நீதிபதி மட்டுமே உள்ளார்

இதேநிலை தான் மாநிலம் முழுவதும் உள்ளது இவற்றில் 64 உறுப்பினர் பணியிடங்களில் காலியாக உள்ளது. இதனால், வழக்கு விசாரணைகள் அனைத்தும் முடிவு எட்டப்படாமல் உள்ளன. முடிவுற்ற வழக்குகளில் கூட தீர்ப்பு வழங்க முடியாத நிலை உள்ளது உறுப்பினர் இன்றி தீர்ப்பு வழங்க முடியாது. எனவே, மாநிலம் முழுவதும் அனைத்து நுகர்வோர் ஆணையங்களில் உரிய நீதிபதி மற்றும் உறுப்பினர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். அப்போது தான் இதன் செயல்பாடு முழுமையாக நுகர்வோருக்கு சென்றடையும். பெரும்பாலான உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய நியமனம் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும்.

கோரிக்கை:

தமிழகத்தில் அனைத்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் தலைவர் (நீதிபதி) உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். (20 க்கும் மேறப்பட்ட மாவட்டங்களில் நீதிபதிகள் இல்லாமலும், உறுப்பினர்கள் பணியிடங்களில் 54 உறுப்பினர்கள் இல்லாமல் காலியாக உள்ளது இதனால் வழக்குகளை நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி 90 நாட்களுக்குள் முடிக்க முடியாமல் ஆண்டுகளாய் விசாரிக்கப்பட்ட வழக்குகள் தீர்ப்பு கூறப்படமல் தேக்கம் அடைந்து உள்ளது

நுகர்வோர் நல நிதி.

நுகர்வோர் நலன் மற்றும் விழிப்புணர்வுக்காக மத்திய மாநில அரசுகள் நுகர்வோர் நல நிதி மூலம் விழிப்புணர்வு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிதியை பதிவு செய்யப்பட்ட தன்னார்வ நுகர்வோர் சங்கம் இயக்கம் மூலமாகவும், பள்ளி, கல்லூரி மாணவர் குடிமக்கள் மன்றம் மூலமே விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் கல்வி கருத்தரங்கம் கண்காட்சிகளை நடத்த சங்கங்களுக்கு நிதி வழங்கி செயல்படுத்தி வந்தனர் ஆனால் கடந்த 5ஆண்டுக்களுக்கும் மேலாக அரசு அலுவலர்கள் மூலம் சங்கம் ஒன்றை ஏற்படுத்தி மாவட்ட வழங்கல் அலுவலர் மூலமாக இப்பணியை செய்து வருகின்றனர் இதனால் நுகர்வோர் கல்வி என்ற அடிப்படையில் உள்ள நோக்கம் நிறைவேறாமல் பல மாவட்டங்களில் அரசு ஒதுக்கிய நிதியை முழுமையாக செலவிடப்படாமல் உள்ளது. எனவே நுகர்வோர் நல நிதி மூலம் விழிப்புணர்வு பணிகளை செய்து வருகின்றனர். இந் நிதியை பதிவு செய்யப்பட்ட தன்னார்வ நுகர்வோர் சங்கம் இயக்கம் மூலமாகவும், பள்ளி, கல்லூரி மாணவர் / குடிமக்கள் மன்றம் மூலமே விழிப்புணர்வு பணியை மேற்கொள்ள வேண்டும்.

துறைவாரியான ஆலோசனை கூட்டங்கள்

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் வழிகாட்டல் படி மாநில, மாவட்ட அளவில் பல்வேறு ஆலோசனை நிலைக்குழுக்களை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவில் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் அமைக்கப்பட்டு தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளை கொண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடதப்ப்ட வேண்டும் இதே போல் மின்சாரம், போக்குவரத்து துறை, போக்குவரத்து கழகம், பொதுவிநியோக திட்டம், கூட்டுறவு துறை நெடுஞ்சாலை துறை மற்றும் பொது சுகாதாரம் உள்ளிட்ட துறை வாரியான கூட்டங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்ற அரசு விதிகளை மாவட்ட நிர்வாகமே கடைபிடிக்காமல் கூட்டங்களை நடத்துவது இல்லை எனவே நுகர்வோர் நலன் காக்கும் வகையில் உணவு மற்றும் நுகர்வோர பாதுகாப்பு துறையின் வழிகாட்டல் படி பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் சங்க பிரதிநிகளை உள்ளடங்கிய ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

சமூக பொறுப்புறுதி திட்டம் நிதி.

மாநிலத்தில் நுகர்வோர் பயன்பட்டு உற்பத்தி நிறுவனங்கள், அரசு துறை நிறுவனங்கள். ஒவ்வொரு ஆண்டும் சமூக பொறுப்புறுதி திட்ட நிதியை மத்திய மாநில அரசுக்கு வழங்கி வருகின்றன இந் நிதியை பல்வேறு அரசு திட்டங்கள் மூலம் செலவிடப்படுகிறது. ஆனால் சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு திட்டப்பணிகளுக்கு செலவு செய்வது இல்லை எனவே நுகர்வோர் நல நிதி என்ற அடிப்படையில் நுகர்வோர் பயன்பட்டு உற்பத்தி நிறுவனங்கள், அரசு துறை நிறுவனங்கள், ஒவ்வொரு ஆண்டும் சமூக பொறுப்புறுதி திட்ட நிதியை குறிப்பிட்ட சதவீதத்தை நுகர்வோர் நலனுக்கு மட்டுமே செலவிட வேண்டும்என கேட்டுக் கொள்கிறோம்.


நுகர்வோர் நலனில்.

வழக்கறிஞர் K.முருகன்

பெருந்தலைவர்

பெட்காட் சென்னை

****

Recent Posts