Jamal Mohamed College : Alumni Association Chennai Chapter || Distribution of Awards & Scholarships


சென்னை, அக்டோபர் 2, 2021: ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சென்னை பிரிவின் சார்பாக மாபெரும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று காலை 10 மணியளவில் ராயப்பேட்டை M.S.Hall-ல் நடைபெற்றது. 

Youtube Video👇👇

இந்நிகழ்வில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் கல்வி பயின்று சென்னையில் உள்ள முன்னாள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் K.M. காதர் மொய்தீன் மற்றும் தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவரும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. M.அப்துல் ரஹ்மான், சமூக ஆர்வலர் சபரிமாலா ஜெயகாந்தன், சன் தொலைக்காட்சி தொகுப்பாளர் திருவேங்கடம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் தி.மு.க. அயலக அணி இணைச்செயலாளர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா இந்த நிகழ்விற்கு வரமுடியாத காரணத்தால் வாழ்த்து செய்தியை அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு  சங்கத்தலைவர் மதிப்பிற்குரிய S.M. ஹிதாயத்துல்லா அவர்கள் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் P. அப்துல்காதர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு எண்ணற்ற ஆளுமைகள், கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் கல்லூரி செயலர் டாக்டர். A.K. காஜா நஜீமுதீன், கல்லூரி பொருலாளர் ஹாஜி. M.J. ஜமால்முஹம்மது சாகிப். மற்றும் கல்லூரியின் முதல்வர் ஹாஜி. S. இஸ்மாயில் முகைதீன் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சென்ற ஆண்டு ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சென்னை பிரிவினர் செய்துள்ள பணிகள் மற்றும் வரக்கூடிய ஆண்டு செயல்திட்டங்களை சங்கப்பொருளாளர் A. முஹம்மது அப்துல்லா சமர்பித்தார். 

இந்நிகழ்வின் இறுதியாக நன்றியுரையை சங்க இணைசெயலாளர் மு.முகம்மது முஸ்தாக் நிகழ்த்தினார். சிறந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

****

Recent Posts

𝘜𝘮𝘢 𝘌𝘺𝘦 𝘊𝘭𝘪𝘯𝘪𝘤, 𝘊𝘩𝘦𝘯𝘯𝘢𝘪 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘗𝘙𝘌𝘚𝘉𝘠𝘖𝘕𝘋 𝘓𝘢𝘴𝘦𝘳 𝘛𝘳𝘦𝘢𝘵𝘮𝘦𝘯𝘵 𝘧𝘰𝘳 𝘤𝘰𝘳𝘳𝘦𝘤𝘵𝘪𝘰𝘯 𝘰𝘧 𝘙𝘦𝘢𝘥𝘪𝘯𝘨 𝘎𝘭𝘢𝘴𝘴𝘦𝘴 𝘱𝘰𝘸𝘦𝘳; 𝘍𝘪𝘳𝘴𝘵 𝘵𝘪𝘮𝘦 𝘪𝘯 𝘛𝘢𝘮𝘪𝘭𝘯𝘢𝘥𝘶

14𝘵𝘩 𝘊𝘰𝘯𝘷𝘰𝘤𝘢𝘵𝘪𝘰𝘯 𝘩𝘦𝘭𝘥 𝘢𝘵 𝘉.𝘚.𝘈𝘣𝘥𝘶𝘳 𝘙𝘢𝘩𝘮𝘢𝘯 𝘊𝘳𝘦𝘴𝘤𝘦𝘯𝘵 𝘐𝘯𝘴𝘵𝘪𝘵𝘶𝘵𝘦 𝘰𝘧 𝘚𝘤𝘪𝘦𝘯𝘤𝘦 𝘢𝘯𝘥 𝘛𝘦𝘤𝘩𝘯𝘰𝘭𝘰𝘨𝘺; 𝘛𝘰 𝘣𝘦𝘤𝘰𝘮𝘦 𝘢𝘯 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳 𝘐𝘯𝘴𝘵𝘪𝘵𝘶𝘵𝘦