தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிமெண்ட், கம்பியின் அபரிமிதமான விலை உயர்வு எதிர்த்து தமிழக முதல்வரிடம் கோரிக்கை


சென்னை, அக்டோபர் 08, 2021: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிமெண்ட், கம்பியின் அபரிமிதமான விலை உயர்வு, ஏனைய கட்டுமான பொருட்களின் வரன்முறையற்ற விலை உயர்வு (PVC, பெயிண்ட், எலக்டிரிகல் பொருட்கள்) ஆகியவற்றை கண்டித்து உற்பத்தியாளர்களுக்கு கண்டணம் தெரிவித்தும், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விலைஉயர்வை குறைத்திட நடவடிக்கை எடுக்கவேண்டியும் இன்று மாநில தலைவர் M.சரவணன் தலைமையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அவருடன் மாநில செயலாளர் K. காந்தி,  மாநில பொருளாளர் B.மணிமாறன், மாநில துணை தலைவர் M. ரவி, மாநில இணைப்பொருளார் மற்றும் சென்னை கட்டுமான சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Youtube Video👇👇

அப்போது அவர் பேசியதாவது:
1)கடந்த 27.09.2021 அன்று சென்னை தலைமை செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து பொறியாளர்கள் கூட்டமைப்பு சார்பாக ரூ. 10,00,000/- (ரூபாய் பத்து இலட்சம்) கரோனா நிவாரனநிதி வழங்கியுள்ளோம்.

2)எங்களது கூட்டமைப்பின் பொறியாளர்களது நீண்டகால கோரிக்கையாக கட்டுமான பொறியியல் தொழில் பாதுகாப்பிற்காக (Civil Engineers Counsil) பொறியாளர்கள் நிர்ணய சபை அரசாங்கம் அமைத்திட வேண்டி கோரிக்கையாக மாண்புமிகு தமிழக முதல்வரிடம் கேட்டுள்ளோம்.

3)கட்டுமான பொருட்களின் வரன்முறையற்ற தொடர் விலையேற்றத்தினால் கட்டுமானதுறை மிகப்பெரும் பாதிப்படைந்து வருகிறது. கடந்த ஓராண்டில் அ மனத்து கட்டுமான பொருட்களும் முதல் 60 சதவிகிதம் வரை விலை உயர்ந்துள்ளது. எனவே இவ்விலையேற்றத்தை கட்டுப்படுத்திட வேண்டி தமிழக அரசாங்கம் கட்டுமான பொருட்களுக்கு ஒழுங்குமுறை விற்பனை ஆணையம் அமைத்திட வேண்டியும் மாண்புமிகு தமிழக முதல்வரிடம் கோரியுள்ளோம்.

4)கடந்த 05.10.2021 அன்று ஒரு சிமெண்ட் மூட்டையின் விலை ரூ.50/- வரையும், கம்பி விலை ஒரு டன்னிற்கு ரூ5000/- வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முறையற்ற திடீர் விலை உயர்விற்காக சிமெண்ட் உற்பத்தியாளர்கள், கம்பி உற்பத்தியாளர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம். உற்பதியாளர்கள் இந்த விலை உயர்வை திரும்ப பெறவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்விலை உயர்வினால் கட்டுமானதுறை சார்ந்த பொறியாளர்கள் மற்றும் அன்றாடம் தினகூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் உடனடியாக தலையிட்டு சிமெண்டு விலை உயர்வை குறைத்திட வேண்டுமென கட்டட பொறியாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு:
எங்களது பொறியாளர்கள் கூட்டமைப்பு 2007-ம் ஆண்டு நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் முதல்நிலை பேரூராட்சிகளில் உள்ள பொறியாளர்கள் சங்கங்கள் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றன. அவ்வகையில் சுயதொழில் புரியும் சுமார் 10,000 பொறியாளர்கள் (Civil Engineers) எங்கள் கூட்டமைப்பில் உள்ளனர்.

கூட்டமைப்பின் மூலம் பொறியாளர்களின் வளர்ச்சிக்காக சுய மேம்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் பாதுகாப்பு சம்மந்தமான தொடர் கருத்தரங்கங்கள், பயிற்ச்சி பட்டறைகள் நடத்தி வருகிறோம். கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் திறன் வளந்திட வேண்டி பல பொறியியல் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மூலம் பல தொழில்நுட்ப நிகழ்ச்சிகளும், கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் நடத்தி வருகிறோம்.

மேலும் பொது மக்களுக்காக மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, ப்ளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலங்கள் ஆண்டுதோறும் நடத்திவருகிறோம். கடந்த கரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் அரசு மருத்துவமணைகளுக்கு (பல இலட்சம் மதிப்பிலான) ஆக்ஸிஜன் செரிவூட்டிகள், மருத்துவ உபகரணங்கள் வழங்கியுள்ளோம். ஆதரவற்ற மக்களுக்கு கரோனா காலத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு உணவு வழங்கி தினம்தோறும் எங்களது சங்க பொறியாளர்கள் சேவை புரிந்துள்ளார்கள் என்பதனை சமூக அக்கறையுடனும் தெரிவித்துக்கொள்கிறோம்.


****

Recent Posts

𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘔𝘦𝘥𝘪𝘢 𝘞𝘰𝘳𝘬𝘴 𝘱𝘳𝘦𝘴𝘦𝘯𝘵𝘦𝘥 𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘈𝘸𝘢𝘳𝘥𝘴 2024 𝘩𝘰𝘯𝘰𝘶𝘳𝘪𝘯𝘨 𝘊𝘪𝘯𝘦𝘮𝘢 𝘊𝘦𝘭𝘦𝘣𝘳𝘪𝘵𝘪𝘦𝘴, 𝘗𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘪𝘢𝘯𝘴 & 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳𝘴, 𝘋𝘰𝘤𝘵𝘰𝘳𝘴, 𝘐𝘈𝘚 & 𝘐𝘋𝘈𝘚 𝘖𝘧𝘧𝘪𝘤𝘦𝘳𝘴