தி சென்னை சில்க்ஸ் குழுமத்தின் 60வது ஆண்டின் தருணத்தில் KKV60 பசுமை விருதுகள் அறிமுகவிழா
- இன்றைய செய்தி நாளைய வரலாறு
வரும் 2022 ம் ஆண்டில் 60 ம் ஆண்டில் வெற்றிச்சுவட்டை எடுத்து வைக்கும் தருணத்தில் எங்களது KKV Agro Powers LTD குழுமங்களின் சார்பில் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திலும், மனித வளம், அறிவு சார்வளர்ச்சியிலும் மிக முக்கிய பங்காற்றி வரும் கீழ்கண்ட துறைகளை சேர்ந்த சாதனையாளர்களுக்கு லட்சம் மதிப்பிலான விருதுகளை திட்டமிட்டு வழங்கவிருக்கிறோம். மேலும் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் சாதித்துள்ள சாதனையாளர்களை அறிவு சார் உலகில் அறிமுகப்படுத்துவதிலும், அடையாளப்படுத்துவதிலும் KKV Agro Powers LTD மிக்க பெருமை கொள்கிறது. தகுந்த வல்லுநர்களின் ஆலோசனையின் பெயரில் நடைபெற உள்ளது.
1)மகாத்மா காந்தியின் சுதேசி கொள்கைகளின் படி வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்திய பொருளாதாரத்தின் முக்கிய இடத்தினை பிடித்துள்ள கைத்தறி நெசவிலும், ஆடைகள் உற்பத்தி மற்றும் வடிவமைப்பிலும் சாதித்த சாதனை கலைஞர்கள். இருலட்சம் அமொரிக்க டாலர் மதிப்பில் 1 விவாகாசேலை "VIVAGAA" Guinness Books of Record - நல்ல முன் உதாரணம்
2)இயற்கை வேளாண்மையில் தன்னிறைவு படைத்து பாரம்பரிய பயிர்கள் மற்றும் ஆரோக்கிய உலகின் வழிகாட்டிகளாக திகழ்ந்து சாதித்து வரும் இயற்கை வேளாண் விவசாயிகள் மற்றும் வேளாண் சாதனையாளர்கள்
3)பாரம்பரிய கலைகள், இந்தியாவின் பண்பாட்டு அடையாளங்களாக திகழ்ந்து வரும் இள வயது கலைஞர்கள், அறிவியல் முன்னேற்றத்தில் தன்னை ஈடுபடுத்தி இந்தியாவினை தகவல் தொழில்நுட்பம், பொறியியல், விஞ்ஞானம், அறிவியல் ஆகிய துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அறிவியலில் சாதித்துள்ள இளம் விஞ்ஞானிகள் மேற்கண்ட விருதுகளை வழங்கி மண்ணுக்குள் வைரமாக இருக்கும் திறமையாளர்களை கண்டறிந்து அவர்களை தேர்வு செய்யும் கமிட்டியில் திரு.மயில்சாமி அண்ணாதுரை, திரு.லெனின், திரு.பாவா செல்லத்துரை அவர்களால் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி மிளிரும் விலை மதிக்க முடியாத ரத்தினங்களாக மாற்றி இந்தியதேசத்தின் மதிப்புமிகு மனிதர்களாக மாற்றவுள்ளோம்.