ஶ்ரீபெரும்புதூர் பாப்பன் சத்திரம் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு || இந்து தமிழர் பேரவை நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரிக்கை
சென்னை, ஜுன் 9, 2021: இந்து தமிழர் பேரவையின் நிறுவனர் பேரவை பொதுச்செயலாளர் மவுண்ட் எஸ் ஜே கோபால் இன்று இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அவர்களை சந்தித்து அருள்மிகு காசிவிஸ்வதாதர் மற்றும் வேணுகோபாலசுவாமி திருக்கோயில் நிலங்களை மீட்கும்படி உத்தரவிட்ட தீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரி மனு கொடுத்தார்.
அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் அளித்த மனுவை பற்றி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் பாப்பன் சத்திரம் அருள்மிகு காசி விஸ்வநாதர் மற்றும் வேணுகோபாலசாமி திருக்கோவில்களுக்கு சொந்தமான சர்வே எண் 330/1 ,350, 352/4, 354/2, 365, 366, 371/1, 375/2, 380, 390/2, 428/4 ஆக மொதம் 177.7 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு தாரர்களாகிய 1) செல்வராஜ் 2) D. ஞானராஜ் 3) நளினி செல்வராஜ் 4) J. ராஜினி 5) அமிர்தராஜ் 6) S. ஆனந்தராஜ் 7) S. ராஜப்பிரியா ஆகியோர் வசமுள்ள இடங்களை 2008 OS.427/1997 தாக்கல் செய்த மனு மீது 10.12.2008 அன்று காசிவிஸ்வநாதர் திருக்கோவிலுக்கு சாதகமாக அளித்த நீதிமன்ற தீர்ப்பின்படியும் இந்த மனுவை எதிர்த்து மேல் குறிப்பிட்டள்ள எதிர் மனுதாரர்கள் A.S.73/2009 தாக்கல் செய்த மனுவை 30.11.2011 அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள்.
மேற்படி நிலங்கள் முழுவதும் அருள்மிகு காசி விஸ்வநாதர் மற்றும் வேணுகோபாலசுவாமி திருக்கோவிலுக்குதான் சொந்தம் என்றும் குத்தகை தாரர்களை ஆக்கிரமிப்புதாரர்களா பாவித்து இந்து சமய அறநிலைத்துறை சட்டம் எண் 78, 79 கீழ் இவர்களை அப்புறப்படுத்துமாறு மாண்புமிகு நீதிமன்றம் உத்திரவிட்டும் இதுதாள்வரை தாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் கோவில் மிகவும் பாழடைந்து செப்பனிடப்படாமல் இருந்து வருகிறது. ஆகவே இந்த கடிதம் தங்களின் மேலான பார்வைக்கு வைப்பது மட்டுமில்லாமல் உடனடியாக தாங்கள் செயல்பட்டு ஆக்கிரமிப்புதாரர்களை அப்புறப்படுத்தி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துமாறு இந்து தமிழர் பேரவை தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப் படுவதாக கூறினார்.
****